உணவகத்தின் முன்பு நின்று
கொடியசைத்துக் கொண்டிருக்கும் பெரியவர்
பசியின் நிறம் தெரிகிறது

*

உங்கள் உள்ளங்கைகளும்
ஒருநாள்
உலகமாக வேண்டுமெனில்
விடுவித்து விடுங்கள்
சிட்டுக் குருவிகளை
சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட
குருவிகள்
வாழ்நாள் முழுவதும்
பெருமையுடன் பேசப் போவது
தன்னைப் பற்றியல்ல
தான் பெற்ற சுதந்திர உலகத்தைப்
பற்றித் தான்...

*

வரிசையாகவும், நேராகவும்
வைக்கப் பட்டிருந்தது
சிலுவைகள் அனைத்தும்
ஆனால் என்ன
குறுக்காகவும், நெடுக்காகவும்
அவர்கள் ஏற்கனவே
வாழ்ந்து முடிந்திருந்தார்கள்...

- இரா.மதிராஜ்

Pin It