விருப்பப் படி உறங்க முடிகிறது
விரும்பிய திரைப்படத்தை
முழுதாய் பார்க்க முடிகிறது
பல நாட்களுக்கு முன்பு வந்த
குறுஞ்செய்தி கேள்விகளுக்கு
பொறுமையாக பதில் தர முடிகிறது
முன்பொரு நாள் யாரோ
ஒருவன் தந்த காயத்திற்கு
எனக்கே என்னால்
ஆறுதல் சொல்லப்படுகிறது...
இதற்கு முன்பு குழந்தைகள்
கேட்ட கதைகள் கேட்காமலேயே
சொல்ல முடிகிறது...
வீட்டில் வளர்க்கப்படும்
செடியில் பூக்கும் பூக்களை
வாடிப்போவற்கு
முன்பே பார்க்க முடிகிறது
புகைவண்டியின் சத்தம்
கேட்டு குரைக்கும் நாயின்
சத்தத்தை தெளிவாய் உணர முடிகிறது...
விடுமுறை நாளின் முதல்நாள் இரவுகள்
எப்போதும் பிடித்ததாகயிருக்கிறது...
பிடிக்காத புத்தகங்களின்
பிடித்த ஒரு பக்கமாய்!

- மு.முபாரக்

Pin It