அவ்வளவு பெரியதுமில்லை
மிக நீண்டதுமில்லை
இந்த வாழ்க்கை;
ஒரு வாழைக்காய் பஜ்ஜியைக் கடித்து
நாரை உருவும்
மெல்லிய இழுவையில்
கையோடு வரும் சிறுதுண்டு.

- திருமூ

Pin It