கையகலப் பேசியில்
முந்தைய நாள் கனவில்
ஜூம் செய்த முத்தத்தின் ஈரம் வழிகிறது.
கை படுதலும்
தொடுதலும்
உதடு நனைதலும்
நனைத்தலும்
உடை அவிழ்தலும்
அவிழ்த்தலும்
மடை முறிந்த வெள்ளம்
கட்டிலுடைத்தலும்
அதுவாய் உடைதலும்
சின்னஞ் சிறுதுளி முத்தமும்
செங்கடல் பொங்கும் சத்தமும்
பிறிதொரு கணமின்றி
பிறிதொரு நாளின்றி
பிறிதொரு வாரமின்றி
பிறிதொரு மாதமின்றி
பிறிதொரு வருடமின்றி
அக்கணமே
அப்பொழுதே
அத்தனை
தாபத்தையும்
சில நூறு எமோஜிக்களில்
வெடிக்கச் செய்து மகிழ்கிறான்.

- திருமூ

Pin It