உல்லாசத்தை
உடையாய் போர்த்தியிருந்தது
அந்த பண்ணை வீடுகள்
திசைகளைத் தொலைத்துவிட்டு
தேடியலையும் பறவைகளை வேட்டையாடும்
மிருகங்களின் பதுங்குகுழியாய் மாறியிருந்தன
தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னே
கண்ணியத்தை சிதைக்கும் கொடுவாள்கள்
நெடுநெடுவென நீட்டியபடியிருந்தன
இச்சைக்கு இரையானவர்கள்;
அநீதிகளை அம்பலமாக்கும் திராணியற்றவர்களாய்
முகவரியின்றி
சில நேரங்களில் சடலமாய்
சில நேரங்களில் சமாதானமாய்
வாழ்விழந்த கொடூரத்தின் உச்சபட்ச விடயம்
ஆபாசத்தை ஆராதிக்கும்
தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால்
திட்டமிட்ட இரவுக் காட்சிகள்
ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு யுவதிகளென
இச்சைகள் கொப்பளிக்கும் தீராநதியாய்
ஊற்றெடுக்கும்
துரோகமே உன் பெயர் ஆண்மைதானா

- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை

Pin It