தலையிலும் மாரிலும்
அடித்தழும் ஒருத்திக்கு
ஆறுதல் இல்லை
ஊரிலும் பேரிலும் அடித்தொட்டிய
போஸ்டரில் வெற்று முகம்
செத்தவனுக்கு
மொழி தாண்டிய வெடிகுண்டுக்கு
வெடிக்க மட்டும் தான் தெரியும்
குற்ற உணர்ச்சியின்றி கொய்யும் கூற்றுக்கு
கூலிக்காரன்தான் கடவுள் காப்பவன்
கொத்துக் கொத்தாய் குவிந்த சதைகள்
ரத்த பூமியில் சிதறும் மானுடம்
பளிச்சென காட்டும்
போட்டா போட்டி செய்திகள்
பரிதாபம் உச்சு கொட்டும்
பாவிகளுக்கு ஓட்டு சத்தம்
எத்தனை குண்டுகள் முழங்கினால் என்ன
அரச மரியாதை போதுமா என்ன
செத்தவன் வீட்டில் சாமி அழுகிறது
முதுகில் குத்துவது கோழைத்தனம்
சூசைட் அட்டாக் அதனிலும் கீழே
சாவுக்காசும் நடுங்குகிறது
சம்பிரதாயத்துக்கும் தலை இல்லை
எல்லை காத்தவன் சதைத் துணுக்கு
சாக்கு மூட்டையில்
வேண்டும் வேண்டும்
சாவுக்கு நியாயம் வேண்டும்
சாவுக்காவது நியாயம் வேண்டும்....?

- கவிஜி

Pin It