தாண்டிப் போவதென்று முடிவுசெய்யும் வரை
ஆரிக்கிள் வென்ட்ரிகிள்
தெரியாது தறிகெட்டுத் தப்பாட்டம் போடக்கூடும்
விரல்நுனி போலிருந்து
முழங்கைவரை ஆடிநடுங்கலாம்
பாதம் முழுக்க மரத்து வேரறலாம்
நேர்ப்பார்வைக்கு வழியின்றி
கருவிழி ஒதுங்கி இமை இழுத்து அரைவாசி போர்த்தலாம்
மனம் என்ற அந்த மண்ணாங்கட்டியைக் கரகரவென உதிர்த்துவிட்டுவிட்ட
அவர்களைப் பாருங்கள்
கெட்டவார்த்தையென்ன
கல் என்ன
கலவரம் என்ன
ஜாம்ஜாமென நடத்தவில்லையா..?

- உமா மோகன்

Pin It