அத்துமீறும் அன்பின்
அத்தியாயங்களில்
திசையெங்கும் அமுதயட்சி!
உன் ஒரு பார்வைக்கும்
இன்னொரு பார்வைக்கும்
இடையிலானது என்
நேசத்தின் இளைப்பாறல்கள்!
செல்லாத ஞாபகங்களை
சொல்லாமல் தொலைத்தபின்
நிறைவோடு தொடர்பற்று கிடைப்பதெல்லாம்
நேர்நிலை விசித்திரம்!
கண்கொண்ட தூரம்வரை
வரை உன் காட்சி பிழைகள்
இனி மெல்ல சாகும் வரம்
ஒன்றும் கிடைக்கப்பெறலாம்!
வாழ்வின் நிகழ்தகவுகள்
மொத்தமாய் உன்
தூரம் வரை தான்!

ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It