கடின மலையின்
உச்சி நோக்கிய
என் பயணம்....
தோள் கொடுத்து தாங்குவார்
தட்டித்தந்து தேற்றுவார்
எவருமின்றி...
பாதையில் பாறைகளை
உருட்டிடவும்
பாதங்களில் பாரத்தை
ஏற்றிடவும் மட்டும்
தயக்கமின்றி..
இடறி விழாமல்
இருக்க நான் பற்றுவது
ஒரு பாறையாகவோ
சிறு கிளையாகவோ
எனை நோக்கி
நீளும் கரமாகவோ
இருக்கலாம் ..
விரல்பற்றும் விரல்கள்
நீங்கள் வரையும்
விதிகளுள் விழாமல்
இருப்பதை விடவும்
நான் விழாமல்
இருப்பதுவே
எனக்கு முக்கியம் ....

- அருணா சுப்ரமணியன்

Pin It