எப்பேர்ப்பட்ட ஓவியமும்
தோற்றுப்போகும்
குழந்தை அடிக்கடி
ஆடைகளில் தீட்டும்
ஈர ஓவியத்தில்!!!

எல்லோரும்
குழந்தைக்குப் பொம்மை வாங்கி
வந்தார்கள்.
அம்மா
குழந்தைக்குப் பொம்மையாகிப்
போனாள்.

குழந்தையிடம்தான்
நடை பயிலக் கற்றுக் கொள்வேனென்று
நின்றபடியே தவம் செய்கிறது
நடைவண்டி.

உறவுகளைச் சொல்லி
பொம்மைக்கும் உயிர் தந்துவிடுகிறாள்
மழலை.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It