வெயில்
எப்படி இருக்கக்கூடும்?

காரணமற்று
எழும்பித் தொலைக்கிற
உன் கோபத்தைப் போன்றா?

நீயற்ற
வேளையில்
என்னுள்ளிலிருந்து
வெளியேறும்
ஏக்கங் பெருங்காற்றெனவா?

தூக்க
நேரத்தில் வந்த
துர்கனவொன்றின்
தாக்கத்தால் வந்த
கண்ணீரைப் போன்றா?

மகவு
தொலைத்த நாளை
ஆயுளுக்கும்
மறக்காத
அன்னையின்
ஆழ்மனத்து வலியைப் போன்றா?

யாருமற்ற
நேரத்தில்
தனிமையப்பும்
தருணத்தில்
தவித்துக் கிடக்கிற
சொல்லைப் போன்றா?

வெய்யில்
எப்படித் தான்
இருக்கும்?

- இசைமலர்

Pin It