குற்றவாளிகள் அல்ல
சட்டங்கள் தான்
சிறையில் அடைக்கப்படுகின்றன

அநியாயங்கள் அல்ல
தர்மங்களூம் நியாயங்களுமே
தண்டனைக்குள்ளாக்கப்படுகின்றன

புத்திசாலித்தனமாய்
திருடுகிறவனுக்கே
புகழ்மாலை சூட்டப்படுகிறது

கறைபடிந்த உள்ளங்கள்தான்
வெள்ளை வேட்டியால்
அலங்கரிக்கப்படுகின்றன

கடமைபோய் காசுதான் வேலை செய்கிறது
கண்ணுக்குட் தெரிந்தே
கற்புகள் பறிபோகின்றன..

காலம் மாறிவிட்டது
பழகிகொள்ளுங்கள்
அல்லது
பழக்கப்படுத்துங்கள்

பழைய மனங்களையும்
பழைய உண்மைகளையும்...

Pin It