நீரின் மேல் மட்டத்தில்
காற்றில் மிதந்து செல்லும்
பறக்கும் மீனென
இவ்வாழ்வில்
தின்னத் துரத்தும் துணாமாக்கரெல் மீனாய்
முட்கள் கொண்ட சொல்லொன்று
அவிழ்ந்து விழ
அதன் கூரிய முனைகள்
கண்களை கீறுகின்றன

வழியும் குருதியை சுவைக்கிறது காலம்

புழுக்கம் நிறைந்த சாலையில்
வெக்கையை உடுத்தி
செந்நிறமாய் அலைகிறது
அச்சொல்.

- சிவ.விஜயபாரதி

Pin It