மழை நேர மாலைகளில்
எனக்கென நீ
கொண்டுவரும்
குடைகளில் தான்
எத்தனை நிறங்கள்..
நிறமற்ற நாட்களை
வானவில்லாக்கும்
வண்ணங்களை
விரல்கோர்த்து
வீதிகளில் தெளித்துச்
செல்வோம் வா
நிறமற்ற குடையுள்
நீயும் நானும்
மழையும்....

- அருணா சுப்ரமணியன்

Pin It