சிரிக்கிறாள் சிணுங்குகிறாள்
பார்க்கிறாள் பறக்கிறாள்
கவிதைத்தொகுப்பு அட்டைப்படங்கள்
என் வீடெங்கும்

*****

தூங்கிக் கொண்டே
சித்திரமாகிறாள்
தூக்க தூக்க
சித்திரம் அசைக்கிறாள்

*****

சடவு முறித்து நெளிகையில்
வெட்டி முறித்த களைப்பு
கொஞ்சூண்டு பால் குடித்து
கொஞ்சம் நேரம் தூங்கியதற்கு

******

கைகள் ஆட
கால்கள் ஆட
சற்று நேரத்தில் கண்டெழுதிய
கவிதையும் ஆட

*****

எந்தக் கடவுளைக் கண்டாளோ
நமட்டு சிரிப்பு
தூக்கத்தில்

*****

"என்ன கதை சொல்லலாம்"
யோசிக்கிறேன்
"நல்ல கதையா சொல்லு மாமா"
பேசியிருப்பாள்
வண்ண வண்ண மொழி பெயர்ப்பு இது..!

- கவிஜி

Pin It