நேர்த்தியாய் நீள் வட்டத்தில்
வளர்ந்து நிற்கும்
கொய்யா மரங்களின் நடுவே
ஒரு சனிக்கிழமை பின்மதியத்தில்
சிறுகதையாக நகரத் துவங்கியது
மூன்றாம் பாலினத்துக்குள்
நுழைந்து கொண்டிருந்த
பாலுவின் தூக்கி வீசப்பட்ட
ட்ரவுசரும் பின் புல்லின்
மிருதுவென போர்த்தப்பட்ட
கடைசி வீட்டு ஜானுவின்
உள்ளாடைகளும்....

மாலையில் கருவானம்
கொட்டித் தீர்த்த
புகை மண்டிய பெருமழையினூடாக
இன்னதென்று தெரியாத
செயலை செய்து கொண்டிருந்தார்கள்
உடன் படித்தவர்கள்....

விரும்பியா விரும்பாமலா
என கடைசி வரை சொல்லாத
பாலு தீட்சண்யாவாகி
கவுண்டம் பாளைய மது
பார்களில் கையேந்தி
அலைவதைக் கண்டும் காணாமல்
கடந்த போது
முலை ஏந்தி சாகத் துவங்கியிருந்தது
சற்றே பெரிய கதையாகியிருந்த
அதே சிறுகதை...

- கவிஜி

Pin It