நெடுந்தூரம்
பார்வை படர்ந்தாலும்
உன்னையே
மேய்ந்து நகரும்
என் பயணம் ....
********
உன் பெயர் பொறித்த
பலகைகளை
கடக்கும் போதெல்லாம்
அதனூடே
உன்னையும் கொஞ்சம்
ரசித்து கொள்கிறேன் ...
********
ஜன்னலோர இருக்கையைத்
தேடுவது,
மரங்களினூடே
இசைவீசி வரும்
உன் நினைவுச்சாரலில்
நனையத்தான்
- சுரேகா