காட்சிகள் இன்றிப்
புலம்பெயர்ந்து செல்கிறது
நீ நிறைந்த கனவுக் காடுகள்...
மூச்சுக்காற்று ஆறுதலின்றி,
மாறுதலுக்காய்
ஆகாயம் வரைகிறது
பின்பு பூமியும்...
காலங்கள் செய்யும்
மாயங்களில் மரித்தும்,
பின்பு உயிர்த்தெழுந்தும்
மறைகிறது,
உனக்கான என் நிமிடங்கள்...
உன்மத்தம்
நான் இருத்தலும்,
மிதத்தலும்
காதலாகவே இருக்கலாம்....
காதல் அணுக்களில்
முட்களை வீசி
பூக்கள் பறிப்பதை,
காட்சிப்பிழைகளாக்கிப்
பதிவிடுகிறாய் - நான்
காட்சிகளாய் மா(ற்)றி
பார்த்து ரசிக்கிறேன்....
நீ நிறைந்த ஸ்வரங்கள்
கணநேரத்தில் கரைவதும்,
பின்பு மீள்வதும் காதலாகவே
உணரப்படுகிறது
என்னுள்....
- ஆனந்தி ராமகிருஷ்ணன், சிதம்பரம்