river 450

நீரின் நிறம் காணமுடியாது...
ஓடும்போதே
உற்சாகமாய் நீந்தும் கயல்களையும்
அதன் கீழே மென்மையாய் இருக்கும் மண்பரப்பையும்
மீனோடு போட்டியிடும் கற்களையும் காணலாம்...

அமிர்தம் தோற்றிடும்
இதன் சுவை முன்பு...
ஓடும் வழியெல்லாம்
பச்சை வர்ணத்தை
தன் தூரிகையால் தீட்டிக்கொண்டே செல்லும்...

கடல் தாயின் பாதம் தொடும்வரை
கண்ணில் படும் நிலங்களின் பசிபோக்கி
உழைப்பாளிகளின் வயிற்றோடு மனதையும் நிர‌ப்பும்...

இதுவெல்லாம் இன்றைய கதை அல்ல...
என்றோ நடந்தது...

தொழிற்சாலையின் கழிவு நீரை
முறையாக வெளியேற்றாமல்
ஆற்றிலும் குளத்திலும் கலக்கும்
மனிதன் வராதவரை...

சாயங்களையும், கழிவுகளையும் கணக்கின்றி,
ஓர் உணர்ச்சியின்றி
நன்னீரில் கலக்கவிடும் மனிதன் வராதவரை....

மண்ணை வளப்படுத்தும்
விவசாய நிலங்களில் காசுபார்த்து
தன் வசதி பெருக்க மரங்களின் வாழ்வழித்து
தான் மட்டுமே வாழ‌
தன் சந்ததியின் எதிர்காலம் பற்றி சிந்திக்காத
மனிதன் வராதவரை....

சலனமில்லாமல் தெளிவாய்த்தான் இருந்தது
இதன் நீரோட்டம்...

- அ.வேளாங்கண்ணி