house 372புதுமனைப் புகுவிழாவில்
ஒரு பரந்தவெளியின்
வடக்கு மூலையில்
வெற்றிடங்களையடைத்து
எழுப்பப்பட்ட சுவர்களுக்குள்
நடமாடிக்கொண்டிருந்தனர்
மனிதர்கள்...

கோவிலெனக் கருதி
முழக்கப்பட்ட வேள்வியில்
அலைந்து கொண்டிருந்தன
மந்திரங்கள்...

மண்டியிட்ட சிலநிமிடங்களில்
வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களால்
நெகிழ்ந்ததுகிடந்தது
நிமிடங்கள்...

மெருகூட்டப்பட்ட வாயிற்கதவு
திறந்தே வைக்கப்பட்டிருந்தது
பஞ்ச பூதங்களின்
வருகைக்காக..

ஆனால்,
கொடுக்கப்பட்ட முத்தத்தின் எச்சத்தை
புறங்கையால் துடைத்துவிட்டு
நீண்ட நேரம்
படிக்கட்டில் அமர்ந்திருந்தது
அந்த வீட்டின் தெய்வம்....

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.