pablo neruda

வட அல்மக்ரொவிலிரிந்து அவன்
நொறுங்கிய தணல் கொண்டு வந்தான்
வெடிப்பிற்கும் சூர்ய மறைவுக்கும் நடுவே
நிலபரப்பின் மீது இரவும் பகலும்
அவன் குனிந்திருந்தான் ஒரு வரை படத்தில் உள்ளதென
முட்களின் நிழல் நெருஞ்சியின் மெழுகின் நிழல்
ஸ்பானியன் தன் வாள் உருவினைக் காண்கின்றான்
நிலபரப்பின் துயர் உபாயங்களென
இரவு பனி மணல்
என் மெலிந்த நிலத்தின் உருவை வடிக்கின்றன
அதன் நீண்ட எல்லை தோறும் மௌனம்
அதன் கடற் சிப்பிகளின் மேலுள்ள
செதிலில் இருந்தும் நுரை வழியும்
நிலக்கரி அதனை மர்ம முத்தங்களால் மூடும்
தனலெனத் தங்கம் அதன் விரல் எரிக்கும்
வெள்ளி ஒரு பச்சை நிலவாக
அதன் ஓசையற்ற தாவரத்தின் பழுத்த நிழலினை
ஒளிரச் செயும்
ஒலிவ் எண்ணெய் அருகில் ஒயினின் அருகில்
புராதன வாளின் அருகில் ரோசாவின் அருகில் காணும்
ஸ்பானியன் கடல் கழுகின் பிணத்தில் இருந்து
பிறந்தவன் ஆதலால் பித்தக் கல்லின்
இம்முன் புறம் குறித்து அறியாதவன்

- பாப்லோ நெருடா
தமிழில்: ரா பாலகிருஷ்ணன்

Pin It