ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
உலகை உறுத்தும் சூழ்நிலைக் கேடு
நலமில செய்யாது சமதர்மம் ஏற்றால்
அன்றிச் சந்தை வழியிலே சென்றிடின்
கொன்றிடும் மதம்பிடிக் களிறு போலப்
புவியை அழிக்கும் விசையாய் மாறுமே

(நீர்த் துறையின் கண்ணே யானையைக் காணாய்! சிறு பிள்ளைகள் அதன் வெண்கோட்டைக் கழுவுகின்றனர். அப்பெருங்களிறு அவர்களுக்கு எளியதாய் இனியதாய் விளங்குவது போல, சோஷலிச உற்பத்தி முறையை ஏற்றால், உலகை உறுத்திக் கொண்டு இருக்கும் சுற்றுச் சூழல் கேடு, நலமில்லாதவற்றைச் செய்யாமல் அமைதியாய் மறைந்து போகும். அவ்வாறு செய்யாமல் சந்தைப் பொருளாதார (விதிகளின்) வழியிலேயே தொடர்ந்து சென்றால் (எதிரில் வருபவரைக்) கொன்று போடும் மதம் பிடித்த யானையைப் போலப் புவியை அழிக்கும் விசையாய் மாறும்)

- இராமியா

Pin It