மார்க்சும் லெனினும் உலகம் உய்யத்
தீர்வாய் அளித்தது பொதுமைத் தத்துவம்
பார்ப்பனர் தம்முடை வஞ்சகந் தனிலே
நீர்க்கச் செய்வர் எத்தகை அறத்தையும்
ஆதலின் இந்திய உழைக்கும் வர்க்கமே
பேதம் சொல்லிப் பார்ப்பன எதிர்ப்பையும்
சமதர்ம அரசை அமைக்கும் வழியையும்
தனியாய்ப் பிரிக்க முயலும் கயவர்
இனிமைச் சொல்முதல் மிரட்டல் ஈறாய்
எவ்வழி வரினும் அவ்வழி மறித்து
செவ்வழி கருவழி ஒன்றாய்ப் பற்றுவீர்

(கார்ல் மார்க்சும் லெனினும் இந்த உலக மக்கள் (சுரண்டல் என்னும் நுகத்கடியில் இருந்து) உய்ய, பொதுவுடைமைத் தத்துவத்தைத் தீர்வாகத் தந்தனர். (ஆனால்) பார்ப்பனர்களோ தங்கள் வஞ்சகத்தினால் எத்தகைய நல்ல தத்துவமானாலும், அதை நீர்க்கச் செய்துவிட்டு, பார்ப்பன ஆதிக்கத்தை நிலைபெறச் செய்துவிடுவார்கள். ஆகவே இந்திய உழைக்கும் வர்க்கத்தினரே! சோஷலிச அரசை அமைக்கும் போராட்டத்தில் பார்ப்பன எதிர்ப்பைத் தனியாகப் பிரிக்க முயலும் கயவர்கள், பிரித்தாளும் முயற்சியாக, இனிமையான சொற்கள் முதல் கடுமையான மிரட்டல் வரையிலும், எந்த வழியில் வந்தாலும் அந்த வழியிலேயே மறித்து, (பொதுவுடைமைத் தத்துவ வழியான) செவ்வழியையும், (பார்ப்பன எதிர்ப்புத் தத்துவ வழியான) கருவழியையும் ஒன்றாகப் பற்றுங்கள்.

- இராமியா

Pin It