சுட்டெரிக்குமொரு மதிய வேளையில்
மாநகர நடைபாதையின் ஓரத்தில்
ஈயப் பாத்திரத்தை உலுக்கியுலுக்கி
உதவி கேட்டிருந்தாள் கிழவி
அப்போது தான் நினைத்தேன்
பேருந்துக்குச் சில்லரையெடுக்க
மறந்த என் ஞாபக மறதியை

- முத்துசாமி பழனியப்பன்

Pin It