கீற்றில் தேட...

ஜூன் 1:

முஸ்லிம் இளைஞர்கள் நான்கு பேரை மாட்டுக்கறி உண்டதாகக் கூறி பயங்கரவாதக் கும்பல் ஒன்று தாக்கிய காணொளி வலைத்தளங்களில் வெளியானது.

ஜூன் 2:

காஷ்மீரில் உள்ள ஜாமியா மசூதியில் ரமலானின் 27ம் இரவு தராவிஹ் தொழுகையில் இந்திய ராணுவப்படை புகை குண்டுகளை வீசி தொழுது கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்தியது.

muslim protestஜூன் 3 :

ஒரு முஸ்லிம் இளைஞனை கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியானது. டெல்லியில் ஒரு முஸ்லிம் இளைஞனை கொடூரமாகத் தாக்கி பன்றிக்கறியை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து அவரின் மீது சிறுநீர் அடித்து கொடுமைப்படுத்தினர் இந்துத்துவ பயங்கரவாதிகள்.

ஜூன் 7:

பீகாரில் ரம்ஜான் பெருநாள் தொழுகையின் போது முஸ்லிம்கள் சிலரை வில் அம்பில் குத்தி, இந்து மத அடையாளங்களை அவர்களின் மீது திணித்து கொடுமைப்படுத்தினர்.

ஜூன் 10:

ஒரு முஸ்லிம் குடும்பமும், பூஜா சௌஹான் என்ற பெண்ணும் வேனில் பயணித்து கொண்டிருக்கும்போது இந்துத்துவ பயங்கரவாதிகள் கையில் ராடுடன் தாக்க முற்பட்டனர். அப்போது பூஜா சௌகான் முன்னின்று அவர்களை விரட்டி முஸ்லிம் குடும்பத்தைப் பாதுகாத்தார்.

மேகாலயாவில் ஒரு முஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி ஒரு பயங்கரவாதக் கும்பல் தாக்கிய காணொளி வெளியானது . அதில் அந்த இளைஞன் அல்லாஹ்வின் உதவியை நாடுகிறான். ஆனால் அந்தக் கும்பல் அவன் சொல்லச் சொல்ல மர்ம உறுப்பிலேயே அடிக்கிறார்கள்.

ஜூன் 11: ராணுவப் படைவீரர்கள் காஷ்மீரில் ஓர் இளைஞனை நடுரோட்டில் வைத்து அடித்து இழுத்துச் செல்லும் காணொளி வெளியானது.

ஜூன் 15

காஷ்மீரில் ராணுவ வீரர்களின் அத்துமீறல்களைப் படம் பிடித்த பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் கேமிரா உடைக்கப்பட்டது.

ஜூன் 17:

மேற்கு வங்கத்தில் கன்கினாரா பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு அதில் சிலர் காயமடைந்தனர். அப்போது முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களையும் குண்டு வீசிய கும்பல் எழுப்பியது.

ஜூன் 19:

மத்தியப் பிரதேசத்தில் மௌலான சைஃபுதீன் என்ற இஸ்லாமியரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கினர்.

காஷ்மீரில் பள்ளி வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவரை காவல் துறையினர் கொடூரமாகத் தாக்கியதால் அந்த வாகனத்தில் இருக்கும் பள்ளிக் குழந்தைகள் முழுதும் அழும் காணொளி வெளியானது.

ஜூன் 21:

அசாமில் முஸ்லிம் இளைஞர் ஒருவரை பேருந்தை நிறுத்தி ஜெய் ஸ்ரீராம் கூறச் சொல்லி இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல் கொடூரமாகத் தாக்கினர்.

ஜூன் 22:

உத்திரப் பிரதேசத்தில் உள்ள காசியாபாத் பள்ளிவாசலிற்கு வெளியே இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல் திரண்டு உள்ளிருந்தவர்களை மிரட்டினர். ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டுக் கொண்டே மிரட்டல் விடுத்தனர். இறுதியில் காவல் துறையினர் FIRல் முஸ்லிம்களை குற்றவாளிகளாகக் காட்டியிருக்கிறார்கள்.

டெல்லியில் முஹம்மது மூமின் என்ற முஸ்லிம் இளைஞனை ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி காரில் தாக்கினார்கள். பலத்த காயத்துக்கு ஆளானார் மூமின்.

ஜூன் 23:

ஜார்கெண்ட் மாநிலத்தில் தப்ரிஜ் அன்சாரியை ஜெய்ஸ்ரீராம் கூறச் சொல்லி பயங்கரவாத கும்பல் ரோட்டோரமாக உள்ள கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியது.

ஜூன் 24:

மேற்கு வங்கம் கொல்கத்தா மாவட்டத்தில் மதரஸா ஆசிரியர் ஒருவரை ஜெய் ஸ்ரீராம் கூறச் சொல்லி இந்துத்துவ பயங்கரவாத கும்பல் தாக்கியது. அவர் முகத்தில் பெரும் காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்.

ஜூன் 25:

மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என சொல்லாததால் ஒரு மதரஸா ஆசிரியரை ரயிலில் இருந்து அடித்து வெளியே தள்ளி விட்டது இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல்.

- அபூ சித்திக்