உலக கார்ப்பரேட் முதலாளிகள் எப்படி ஆட்சியாளர்களை அபேஸ் பண்ணுறானுகள்னு தெரியல...!

ஆனா நம்ம தூத்துக்குடி ஸ்டெர்லைட் முதலாளி பண்ணியதை பார்த்துவிட்டோம்.. துப்பாக்கி குண்டால்.

Tirupur banian Companiesஇப்ப திருப்பூர் பனியன் கம்பெனி முதலாளிகளை எப்படி நம்ம தேசிய இந்து முதலாளிகள் அபேஸ் மற்றும் குளோஸ் பண்ணுறாங்கன்னு பார்த்தா தெரியும், அந்த நாய்கள் எப்படி சொத்து சேர்த்து இந்திய பணக்காரர்களாக வளம் பெற்றனர் என்பது. (ஒரு டெனிம் துணிக் கம்பெனி 5400 கோடி சொத்து-2016 கணக்குப்படி)

படித்துவிட்டு என்ன பண்ணுவது ...? பாட்டன் சொத்தை அடமானமா வைத்து வங்கியில் கடனை வாங்கி, தெரிந்த, தெரியாத ஆளுககிட்ட கடனை வாங்கி பனியன் கம்பெனி வைத்து பொழைக்கலாம்னு தொழில் செய்தால் வானரக்கூட்டம் போட்ட GST வரிக்குப் பிறகு ஏற்றுமதி வர்த்தகம் போண்டியாகல.

சரி உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடலாம் என நினைத்தால் பனியா, மார்வாடி சேட்டுகள் தான் சந்தையைக் கைப்பற்றி வைத்துள்ளார்கள். இவனுக கூட போட்டி போட்டு தொழில் செய்ய முடியாது என்பதால் அந்த உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள் உருவாக்கிய தொழிற்கழகத்தில் ஆர்டர் எடுத்த பின்னர் தான் தெரியுது இவனுக 'மலை முழுங்கி மகாதேவன்கள்' என்று...

17/09/2018ல் சுமார் 9,70,000/-மதிப்பில் 2500 டவுசர் (நம்ம டவுசரை கழட்டுறானுகளே....) தயாரிக்க ஆர்டர் எடுத்தேன்....

பருத்தி நூல் வாங்கி, நிட்டிங், டையிங், காம்பேக்டிங் என அனைத்தும் செய்து பனியன் துணியை 30/10/2018 அன்று தயாரித்து...

பின்னர் துணி, பிரிண்டிங் அப்ரூவல் வாங்கி (உலகத் தரமான பிராண்டாம்.. அதனால் SGS தரபரிசோதனை)

பின்பு சைஸ் செட், முன்தயாரிப்பு சாம்பிள் தைத்து அப்ரூவலுக்கு 15/11/2018 அன்று டவுசரைக் கொடுத்துட்டு நூல், நிட்டிங், டையிங், காம்பேக்ட்டிங் செய்து கொடுத்தவங்களுக்கெல்லாம் பணம் கொடுத்து விட்டு காத்திருந்தா....

அந்தப் பொறம்போக்கு நம்ம பிரதமர் மோடி மாதிரி அந்த டவுசரை போட்டுக்கிட்டே உலகத்தை சுத்திட்டு 07/01/2019 அன்றுவரை அப்ரூல் கொடுக்காம அந்த டவுசரில் திரும்பவும் கமெண்ட்ஸ் கொடுத்தது,

திரும்ப நாம முக்கி முக்கி சாம்பிள் ரெடி பண்ணும் நாளில் ஆர்டர் கொடுக்கும்போது சொல்லாத புதுப்புது வேலைகளை அதிகமாக கொடுத்த வகையில் லாபத்தில் ₹10 ஆட்டையைப் போட்டுட்டான்... (திருட்டுப்பயல்களாச்சே..)

எல்லாம் சரி செய்து அளவு, பிட்டிங், பட்டி டிங்கரிங் செய்து சாம்பிள் 13/01/2019 அன்று கொடுத்தாகி விட்டது...

அப்புறம் நாம திரும்பத் திரும்ப தமிழக முதல்வர் மாதிரி கடிதம் எழுதாம மெயில் போட்டுக்கிட்டே இருந்ததில் 06/03/2019 அன்று Final அப்ரூவல் கொடுத்தானுக.

"OK For BLUK PRODUCTION...SEND THE DELIVERY DATE."

இதுல கடைசி ரெண்டு வரி தாங்க முக்கியம். அவன் மெயில் போட்ட 24 மணி நேரத்துல நாம ரிப்ளே பண்ணனும் ... அந்த சொப்ளாங்கி நமக்கு 50 நாள் கழிச்சு பதில் போட்டதற்கு.

இதற்கிடையில் ஒரு ரூபாய் கூட அந்த டவுசர் ஆர்டருக்காக செலவு செய்யாம ₹1799/-விலை வைத்து ஏமாளி மக்களிடம் ஆன்லென் மூலம் விற்பனையை CASH ON DELIVERY / DEBIT -CREDIT CARD மூலமும் ஆட்டையைப் போட பாப்பானுக (டிஜிட்டலுக்கு பொறந்தவனுகளாச்சே)

நாம அடிச்சு பிடிச்சு டவுசரை வெட்டி பிரிண்டிங் கொடுத்து வாங்கி, தைத்து பின்பு வாசிங் அனுப்பி ஓட்டை ஒடசலைப் பார்த்து செக் பண்ணி பேக் பண்ணும்போதும் தனியா கவர் போட்டு அந்த எடுபட்டவனின் பெயர் தாங்கிய அட்டையையும் சேர்த்து சொருகி விலை விபரம், தயாரிப்பு தேதி முதற்கொண்டு ஸ்டிக்கர் ஒட்டி அதற்கும் அப்ரூவல் வாங்கி அயர்ன் செய்து பெட்டி போட்டு கொடுத்தா மார்ச்சு -ஏப்ரல் இயர் என்டுங்றான்...கம்முனாட்டி.

அவங்க கம்பெனி ஸ்டாக் எடுத்து கடந்தாண்டு எந்தெந்த கம்பெனி முதலாளிகளின் தாலியறுத்தோம், எவனெவன் போண்டியாகி பரலோகம் போனதால் நமக்கு எவ்வளவு லாபம் வந்து சேர்ந்தது என்று பார்த்துவிட்டு .... நாம வாசப்படியில் எலும்புக்காக ஒக்காந்திருக்கும் நாயாட்டம் எப்படா Inspection date போடுவான்னு Phone callக்கும், மெயிலுக்கும் காத்திருக்கனும்.

கடைசியா 15/04/2019 inspection பண்ணி எங்க ஸ்டேண்டர்டு க்குவாலிட்டியை மீட் பண்ணல, அதனால் Recheck பண்ணி திரும்ப Inspection காமிங்கன்னு போய்ட்டாங்க அந்த தரமான கம்பெனி க்குவாலிட்டி இன்ஸ்பெக்டர்...

Upcharge கேட்டா முதலில் ஆர்டர் முடித்து பில் போடும் போது வாங்கிக்கிறலாம்னு அந்த கர்ணனுக்கும் -அரிச்சந்திரனுக்கும் பிறந்த யோக்கியன் சொல்லிடுவான்.....

நம்மைப் போன்ற கீழ்மட்ட, நடுத்தர வர்க்க பெற்றோரின் பிள்ளைகள் தான் சம்பளத்திற்காக வேலை செய்வதாலும், அவர்கள் உச்சா போனாலும் செல்பி எடுத்து அந்த கார்ப்பரேட் முதலாளிக்கு காமிக்கனும்... ஆகையால் எனது வசவுகள் நம்மவர்களுக்கு அல்ல அந்த பன்னாட 5400 கோடி முதலாளிக்குத் தான்...

இதற்கிடையில் கம்பெனியில் வேறு ஆர்டர் எடுத்ததை முடித்துக் கொடுத்துவிட்டு திரும்ப Recheck பண்ணி 27/04/2019 டவுசர் பெட்டியை Inspection கொடுத்து Inspection PASS ஆன பின்னர் டவுசர் ஆர்டர் பெட்டியை அனுப்பட்டான்னு மெயில் போட்டா, அந்த 5400 கோடி பணக்கார பிக்பாக்கெட் திருடன் சாக்கடையில் கிடக்கும் குடிகாரனாட்டம் சீசன் முடிந்து போச்சு, இனி எங்களால் விற்க முடியாது, 15/04/2019 அன்றே Inspection பாஸ் பண்ணி அனுப்பியிருந்தால் நாங்க ஏப்ரலில் விற்பனை செய்திருப்போம், இனி முடியாது. ஆகையால் விற்பனை விலையான ஒரு டவுசருக்கு ₹1799 வீதம் 2500க்கு ₹44,97,500/- Debit Note அனுப்பியுள்ளோம் என்று மெயில் போடுறான் அந்த மயிராண்டி.....

இப்பச் சொல்லுங்க அதானி, அம்பானி, மிட்டல், டாடா, பிர்லா, வேதாந்தா, பஜாஜ், கோத்ரேஜ், பாம்பே டையிங், அர்விந் மில்ஸ் போன்ற முதலாளிகளின் சொத்து உழைத்து வியர்வை சிந்தி சம்பாதித்ததா...??

- தருமர், திருப்பூர்

Pin It