மக்கள் மத்தியில் நல்ல பேர் எடுத்து ஓட்டு வாங்குவதற்காக ஒவ்வொரு கட்சியும் மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்துப் போராடுகின்றன. நாளை அந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் தாங்கள் சொன்னதை செய்யுமா, செய்யாதா என்பது அடுத்து பிரச்சினை. ஆனால் தாங்கள் மக்களுக்காக இருக்கின்றோம், அவர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்றோம் என்ற நம்பிக்கையை அவை மக்களுக்கு ஏற்படுத்த முனைகின்றன. ஒரு கட்சி உயிர்ப்போடு இருப்பதற்கு தொடர்ச்சியான களப்போராட்டங்கள் முக்கியம். ஒவ்வொரு பிரச்சினையின் மீதும் கவனத்தை குவித்து, மக்கள் மத்தியில் வேலை செய்து, அவர்களின் நற்பெயரை சம்பாதிக்க வேண்டும். இவை எல்லாம் நாளை ஆட்சிக்கு வர வேண்டும் என எண்ணும் கட்சிகளின் செயல்பாடாகும். அது போன்று மக்கள் பிரச்சினைக்காக போராடி, உயிர்ப்போடு இருக்கும் கட்சியைச் சார்ந்த தொண்டர்கள் தாங்கள் இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வார்கள்.

mukilan paintingsஆனால் தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பொதுவெளியில் தாங்கள் இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படும் சூழ்நிலைதான் நிலவுகின்றது. சில கட்சியின் பெயரைச் சொன்னால் சாதிவெறியன், குடிசை கொளுத்தி , குடும்பத்தைக் கெடுப்பவன் என்று மக்கள் நினைத்து விடுவார்களோ என்று அஞ்சி சொல்லாமல் தவிர்த்து விடுவார்கள். அதே போல சில கட்சியின் பெயரைச் சொன்னால் தலைவெட்டிக் கும்பல், சாதிக்காக கொலை செய்யத் தூண்டிவிடும் ரவுடிக் கும்பல் என்று சொல்லி விடுவார்கள் என்று கருதி தான் சார்ந்திருக்கும் கட்சியின் பெயரைச் சொல்ல மாட்டார்கள். ஆனால் அதைவிட பல மடங்கு கேவலமான, சொல்லிக் கொள்ளவே வெட்கப்படும் கட்சி ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது என்றால் அது பிஜேபிதான். பெயரைச் சொன்னாலே போதும், மனதிற்குள் இவன் பொம்பளைப் பொறுக்கியாக இருப்பானோ, விபச்சாரத் தரகனாக இருப்பானோ, நாட்டை கூட்டிக்கொடுப்பவனாக இருப்பானோ, சிலைத் திருடனாக இருப்பானோ, கொலைகாரனாக இருப்பானோ என நாட்டில் என்ன என்ன தீய சக்திகள் எல்லாம் உள்ளதோ அதன் உருவங்கள் அனைத்தும் மனதிற்குள் வந்துபோகும்.

எப்படி பொது வெளியில் தன்னை ஒரு எய்ட்ஸ் நோயாளி என்றோ, குஸ்டம் பிடித்தவன் என்றோ சொல்லிக் கொள்ள வெட்கப்படுவார்களோ, அப்படித் தான் ஒவ்வொரு பிஜேபிகாரனும் தன்னை பொதுவெளியில் பிஜேபிகாரன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அப்படியே சொன்னாலும் “ஓ அந்த நிர்மலா தேவி கட்சியா” என்று மக்கள் கலாய்த்து விடுகின்றார்கள். அந்த அளவிற்கு ஊர் முழுவதும் பிஜேபியின் பெயர் நாறி நாற்றமெடுத்து கிடக்கின்றது. தன்மானம், சுயமரியாதை போன்ற வார்த்தைக்கெல்லாம் என்ன அர்த்தம் என்றே தெரியாத, புரியாத ஒரு சில உலுத்துப் போன மனிதர்கள் மட்டுமே தற்போது அந்தக் கட்சியில் இருக்கின்றார்கள். இவர்களை வைத்துக்கொண்டு போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்ய முடியாது அதிகபட்சமாக பிரியாணி அண்டாவைத் திருடுதல், செல்போன் கடையில் கொள்ளையடித்தல், இல்லை என்றால் நிர்மலாதேவி போல சமுக சேவையுடன் கலந்த சுயதொழிலில் ஈடுபடுதல் போன்றவற்றை மட்டுமே செய்யமுடியும். அதைத்தான் செய்துகொண்டும் இருக்கின்றார்கள்.

ஓர் அகில இந்தியக் கட்சியான பிஜேபிக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கும் அதிகப்படியான மரியாதை என்பது நிம்மதியாக அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எந்தவித செய்கூலியும் சேதராமும் இல்லாமல் வீடுபோய் சேர அனுமதிப்பதுதான். ஆனால் அதற்கும் கூடிய விரைவில் பங்கம் ஏற்படும் நிலை உருவாகியிருக்கின்றது. நாய்களுக்கு தன்னுடைய எல்லை எது என்பது நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு ஏரியாவில் இருக்கும் நாய் அடுத்த ஏரியாவில் போய் ஆண்டைத்தனம் செய்ய நினைத்தால் என்ன விளைவுகளை சந்திக்க நேருமோ, அதே விளைவை தமிழ்நாட்டில் பிஜேபி சந்திக்கப் போகின்றது. இது ராஜஸ்தானோ, உத்திர பிரதேசமோ, மகாராஷ்டிராவோ இல்லை, இது பெரியார் மண் என்பதை அவர்கள் உணர மறுத்தால் தமிழ்நாட்டு மக்கள் மொத்தமாக சேர்ந்து கூடிய விரைவில் உணர வைத்து விடுவார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள ஸ்டெரிலைட்டுக்கு எதிராகப் போராடினாலோ, மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராடினாலோ, எட்டுவழி சாலைத் திட்டத்திற்கு எதிராகப் போராடினாலோ போராடும் மக்களை தீவிரவாதிகள் என்றும், மாவோயிஸ்ட் என்றும், நக்சலைட் என்றும், தேசவிரோதி என்றும் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி, போராடும் மக்களை கொச்சைப்படுத்தி அவர்களது ஓட்டுமொத்த எதிர்ப்புகளையும் சம்பாதித்து வைத்திற்கும் பிஜேபி, மீண்டும் மீண்டும் “நாங்க அப்படித்தான் பேசுவோம், உங்களால் எங்கள என்னடா செய்யமுடியும்” என்ற ரீதியில் தமிழ்நாட்டு மக்களின் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் சவால் விட்டுக்கொண்டு இருக்கின்றது.

சபரிமலை பிரச்சினையைப் பயன்படுத்தி எப்படியாவது தமிழ்நாட்டில் கூட்டம் சேர்க்க முடியுமா என்று பார்த்தார்கள். ஆனால் வந்தவன் எல்லாம் பொங்கலும் சுண்டலும் சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டார்கள். எச்சை ராஜா தினம் ஒரு கோயில் சகிதம் தன்னுடைய பூனைப் படையுடன் போய், அங்கே இருக்கும் மக்களிடம் “கோயிலை இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க குரல் கொடுக்க வேண்டும்” என தொந்திப் பார்ப்பான்களின் துணையுடன் பிரச்சாரம் செய்து வருகின்றான், ஆனால் போகும் இடங்களில் எல்லாம் இவன் பேசுவதை நின்று கேட்கக் கூட மக்கள் விரும்புவதில்லை. அதனால் சர்ச்சையாகப் பேசியாவது, தங்களது இருத்தலை காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றது.

சென்னையில் கடந்த 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் லயோலா கல்லூரி சார்பில் ‘கருத்துரிமையைக் காக்க கலைஞர்கள் ஆர்ப்பரிக்கும் 6 ஆம் ஆண்டு வீதி விருது விழா’ நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கலைக்குழுக்களும், ஆயிரக்கணக்கான கலைஞர்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் பல முக்கிய ஆளுமைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஆர்.எஸ்.எஸ் அனுதாபி அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் போன்றவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் தோழர் முகிலன் வரைந்த ஓவியம் பெண்களையும், பாரதமாதாவையும் இழிவுபடுத்துவதாகக் கூறி சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காவல்தூறையில் புகார் அளித்துள்ளது. மேலும் கல்லூரி முதல்வர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் போன்றவை புகார் மனு கொடுத்திருக்கின்றன.

mukilan paintings 1புகார் கொடுத்தோடு மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பேராசிரியர் காளீஸ்வரன் அவர்களையும், காவிபயங்கரவாதிகளை தன்னுடைய ஓவியங்களால் அம்மணமாக்கிக் காட்டிய தோழர் ஓவியர் முகிலன் அவர்களையும் மிரட்டும் வேலையையும் தற்போது இந்தக் கும்பல் செய்து வருகின்றது. ஆனால் அவர்கள் தெளிவாக இது போன்ற பூச்சாண்டிக்கெல்லாம் தாங்கள் பயந்துகொள்ள மாட்டோம் என அறிவித்துவிட்டார்கள். பாரம்பரியம் மிக்க லயோலா கல்லூரி நிர்வாகம் இது போன்ற கழிசடைகளின் பயமுறுத்தலுக்கு அஞ்சாமல் எதிர்த்து நின்றிருக்க வேண்டும், ஆனால் ஏனோ மன்னிப்பு கேட்டிருக்கின்றது. ஆனால் அப்போதும் விடாமல் லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து அரசியல் அனாதைகள் கத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

கோயில்களில் கூட்டு பாலியல் வல்லுறவு சிற்பங்களை கலை என்றும், தாந்திரிகம் என்றும் வெட்கமே இல்லாமல் புகழும் கூட்டம் , காஷ்மீரில் 8 வயது சிறுமியை இந்துக் கோயிலில் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்து தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற கும்பலுக்கு ஆதரவாகப் போராடிய அயோக்கியர்களுக்கு, நந்தினியின் கருவறுத்து கொன்ற காமக்கொடூரர்களுக்கு, தமிழகப் பெண்களை நிர்மலாதேவி மூலம் விபச்சாரத்துக்கு அழைத்த விபச்சார மாஃபியாக்களுக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது ஓவியர் முகிலன் வரைந்த ஓவியத்தை ஆபாசம் என்று சொல்ல? கலை இலக்கியம் எல்லாம் மக்களுக்காகவே, அது அவர்களுக்கு சேவை செய்வதாகவும், அவர்களின் அரசியலைப் பேசுவதாகவும் இருக்க வேண்டும். அதைத்தான் முகிலன் தன்னுடைய தூரிகைகளால் செய்துள்ளார். இந்துக் கடவுள்களுக்கு உருவம் கொடுத்து அதைப் பாப்பாத்திகளின், பார்ப்பான்களின் வடிவில் வரைந்த பெண்பித்தனான ஓவியன் ரவிவர்மாவைக் கொண்டாடுவார்கள். ஆனால் அதை இயற்கையாக வரைந்த எம்.எப். உசைனை மிரட்டி நாட்டைவிட்டே ஓடவைப்பார்கள். இதுதான் இவர்களின் யோக்கியதை.

ஒரு கலையோ, இலக்கியமோ அது முன்வைக்கும் அரசியல் கருத்துகளுக்கு முகம் கொடுத்து பதிலளிக்கத் திராணியற்ற கூட்டம்தான் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுகின்றது. இது போன்ற கும்பல்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கின்றது. நபிகள் நாயகத்தை பற்றிய கேலிச்சித்திரம் வெளியிட்டதற்காக சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தின் மீது முஸ்லீம் அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தி 12 பேரைக் கொன்று போட்டார்கள். சமீபத்தில் மலேசியப் பிரதமர் நஜிப் ராசக்கை கோமாளி போன்று வரைந்த பிரபல ஓவியர் பாஹ்மி ரேசாவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒருமாத சிறைத் தண்டனையும் 7 ஆயிரத்து 700 டாலர் அபராதத்தையும் விதித்தது. ஊழல்வாதிகளும், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபவர்களும், அவர்களுக்கு சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும், மதத்தைக் காரணம் காட்டி கொடுக்க மறுக்கும் அற்பவாதிகளும் தங்களை அம்பலப்படுத்துபவர்களுக்கு எதிராக கருத்தியல் தளத்தில் நின்று போராட வக்கற்று, மிரட்டுவது, வன்முறையில் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றார்கள்.

மக்களின் முட்டாள்தனங்களையும், அறியாமையையும் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை வென்றெடுக்கத் துடிக்கும் பிற்போக்கு கும்பல்களுக்கு எதிராக மூர்க்கத்தனமான கருத்தியல் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அவர்கள் நம்முடைய கருத்தைப் பார்த்து அலறுகின்றார்கள் என்றால் நாம் நம்முடைய வேலையை சரியாகத்தான் செய்து கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தம். இன்று தமிழ்நாட்டில் ஓட்டுமொத்த காவிக் கூட்டமும் அலறிக் கொண்டு இருக்கின்றது. தோழர்களே! நாம் சரியான பாதையில் தான் போய்க் கொண்டு இருக்கின்றோம்.

- செ.கார்கி

Pin It