'
காரல்மார்க்சு நூலகம்' எல்லோரும் அறிந்த பெயர். அதனை நிறுவிய .சீ.கண்ணன் அவர்கள் தமது 93ஆம் அகவையில் 25.4.2017ஆம்நாள் நினைவாகிவிட்டார். மின்வாரியப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் அவர்! ஈழ அமைப்புகளுக்கும் மார்க்சிய இயக்கங்கும் மிக நெருக்கமானவர்.

kannanசென்னை சி..டி.நகரில் தம்வீட்டு மாடியில் 'மார்க்சு நூலக'த்தை அமைத்திருந்தார்.பொதுவுடைமைக் கட்சியின் பழைய வெளியீடுகளும் அரிய நூல்களும் எளிதாய்க் கிடைத்த நூலகம் அது!

அருகிலேயே நந்தனம் பார்வையற்றோர் விடுதி! அவர்கள் நடமாட்டம் நூலகத்தில் மிகுந்திருக்கும். விழியிழந்த அவர்கள் விழியாய் நினைத்தது .சீ..அவர்களை!

* * *

தியாகராய நகர் சாரிதெரு இல்லத்தில் 'சாளரம்' வைகறை, பேரா.வீ.அரசு முதலிய பலரும் தங்கியிருந்த காலம்! எவருக்கும் திருமணம் ஆகாத காலம். முற்போக்கு அமைப்பினர் பலரும் உரிமையோடு தங்கி உணவையும் கருத்தையும் பகிர்ந்துண்ட காலம். தமிழ்நாட்டின் பலதிசையும் ஒன்றுகூடும் பாடிவீடாய்த் திகழ்ந்தது அந்த வீடு!

தஞ்சையிலிருந்து பேரா..தட்சணாமூர்த்தி வந்திருப்பார்.கோவையிலிருந்து நான் சென்றிருப்பேன். நாகை கே. முருகேசன் முதலிய அரிதானவர்களை எளிதாக அங்கு சந்திக்க முடியும்.

பத்தாம் வகுப்புப் புத்தகம் எழுதும் ஒருமாதப் பணிமனைப் பணிக்காக 1980இல் சென்னை சென்றிருந்தேன். அங்கே தங்கியபடி வெலிங்டன் சீமாட்டிக் கல்லூரிக்குச் சென்றுவந்து கொண்டிருந்தேன். மாலைச்சந்திப்பின் அறிவுச்சுவை ஆர்வம், விரைவாக என்னை அந்த வீட்டிற்கு இழுத்து வந்துவிடும்.

ஒருநாள் மாலை நான் உள்ளே நுழைந்தபோது , 'வீதி' நாடகத்தில் மொரார்சி வேடத்தில் தாம் நடித்த காட்சியைச் சிரிக்கச் சிரிக்க ஒருவர் விவரித்துக் கொண்டிருந்தார். அவர் வந்த மிதிவண்டி வெளியே நின்றுகொண்டிருந்தது. புதிதாய்த் தெரிந்த என்னைப் பற்றி அவர் வினவினார்.

'தஞ்சையைச் சேர்ந்தவர், கோவையில்வேலை செய்கிறார்' எனக் குரல்கள்என் திசைகாட்டின.

' கோயம்புத்தூரா? எங்க ஊரு! எங்கே வேல?' ஆர்வத்தோடு வினவினார்.

'சர்வ சன மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் ' என்று பெருமிதமாய்க் கூறினேன்.

'
என் தம்பியும் அங்கதான் வேலை செய்றார்' என எளிதாகச் சொன்னார்.

புதிதாகச் சேர்ந்த எவராவது இருக்கும் என்று எண்ணியபடிக் கேட்டேன் 'பேரு?' 

அவர் சொன்னார் "ராஜகோபாலன்".

எங்கள் தலைமையாசிரியர் பெயர் அது!

"தலைமையாசிரியரையா சொல்றீங்க?" பதற்றமாய்க் கேட்டேன்.

"எங்க அப்பாவும் அங்கேதானே எச்எம்மா இருந்தார். என் தம்பியும் எச்எம். நான் படிச்சதும் அங்கதானே" குரலின் தொனி மாறாமல் பேசினார்.

சட்டென எழுந்து நின்றுவிட்டேன்.என்னிடம் பேசிக் கொண்டிருந்தவர்  திரு..சீ.கண்ணன் என்பதும், எனக்குப் பணிவழங்கிய தலைமையாசிரியர் முனைவர் .சீ.இராசகோபாலன்அவர்களின் அண்ணன்தான் அவர் என்பதும் அதன்பின்பே தெரிந்தன.

பணிவால் குறுகி நின்ற என்னை வற்புறுத்தி அமர வைத்தார். பேசிய எதையும் பெரிதாய் நினைக்காமல், நகைச்சுவை அலையை எழுப்பியபடி இருந்தார். அலை ஓய்ந்துவிட்டது.

பூணூல் அணிவதைத் துறந்த அண்ணன் தம்பி இருவருக்கும்வாய்த்ததோ,மக்களையும் சமூகத்தையும்துறக்காத தொண்டுள்ளம்!

- செந்தலை .கவுதமன், சூலூர் பாவேந்தர் பேரவை

'காரல்மார்க்சு நூலகம்' எல்லோரும் அறிந்த பெயர். அதனை நிறுவிய .சீ.கண்ணன்
அவர்கள் தமது 93ஆம் அகவையில் 25.4.2017ஆம்நாள் நினைவாகிவிட்டார். மின்வாரியப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் அவர்! ஈழ அமைப்புகளுக்கும் மார்க்சிய இயக்கங்கும் மிக நெருக்கமானவர்.

சென்னை சி..டி.நகரில் தம்வீட்டு மாடியில் 'மார்க்சு நூலக'த்தை அமைத்திருந்தார்.
பொதுவுடைமைக் கட்சியின் பழைய வெளியீடுகளும் அரிய நூல்களும்
எளிதாய்க் கிடைத்த நூலகம் அது!

அருகிலேயே நந்தனம் பார்வையற்றோர் விடுதி! அவர்கள் நடமாட்டம் நூலகத்தில்
மிகுந்திருக்கும். விழியிழந்த அவர்கள் விழியாய் நினைத்தது .சீ..அவர்களை!
* * *
தியாகராய நகர் சாரிதெரு இல்லத்தில் 'சாளரம்' வைகறை, பேரா.வீ.அரசு
முதலிய பலரும் தங்கியிருந்த காலம்! எவருக்கும் திருமணம் ஆகாத காலம். முற்போக்கு அமைப்பினர் பலரும் உரிமையோடு தங்கி உணவையும் கருத்தையும் பகிர்ந்துண்ட காலம். தமிழ்நாட்டின் பலதிசையும் ஒன்றுகூடும் பாடிவீடாய்த் திகழ்ந்தது அந்த வீடு!

தஞ்சையிலிருந்து பேரா..தட்சணாமூர்த்தி வந்திருப்பார்.கோவையிலிருந்து நான்
சென்றிருப்பேன். நாகை கே. முருகேசன் முதலிய அரிதானவர்களை எளிதாக அங்கு சந்திக்க முடியும்.

பத்தாம் வகுப்புப் புத்தகம் எழுதும் ஒருமாதப் பணிமனைப் பணிக்காக 1980இல் சென்னை சென்றிருந்தேன். அங்கே தங்கியபடி வெலிங்டன் சீமாட்டிக் கல்லூரிக்குச் சென்றுவந்து கொண்டிருந்தேன். மாலைச்சந்திப்பின் அறிவுச்சுவை ஆர்வம், விரைவாக என்னை அந்த வீட்டிற்கு இழுத்து வந்துவிடும்.

ஒருநாள் மாலை நான் உள்ளே நுழைந்தபோது , 'வீதி' நாடகத்தில் மொரார்சி
வேடத்தில் தாம் நடித்த காட்சியைச் சிரிக்கச் சிரிக்க ஒருவர் விவரித்துக்
கொண்டிருந்தார். அவர் வந்த மிதிவண்டி வெளியே நின்றுகொண்டிருந்தது. புதிதாய்த் தெரிந்த என்னைப் பற்றி அவர் வினவினார்.

'தஞ்சையைச் சேர்ந்தவர், கோவையில்வேலை செய்கிறார்' எனக் குரல்கள்
என் திசைகாட்டின.

' கோயம்புத்தூரா? எங்க ஊரு! எங்கே வேல?' ஆர்வத்தோடு வினவினார்.

'சர்வ சன மேல்நிலைப்பள்ளியில் மிழாசிரியர் ' என்று பெருமிதமாய்க்
கூறினேன்.

'
என் தம்பியும் அங்கதான் வேலை செய்றார்' என எளிதாகச் சொன்னார்.

புதிதாகச் சேர்ந்த எவராவது இருக்கும் என்று எண்ணியபடிக் கேட்டேன் 'பேரு?' 

அவர் சொன்னார் "ராஜகோபாலன்".

எங்கள் தலைமையாசிரியர் பெயர் அது!

"தலைமையாசிரியரையா சொல்றீங்க?" பதற்றமாய்க் கேட்டேன்.

"எங்க அப்பாவும் அங்கேதானே எச்எம்மா இருந்தார். என் தம்பியும் எச்எம்.
நான் படிச்சதும் அங்கதானே" குரலின் தொனி மாறாமல் பேசினார்.

சட்டென எழுந்து நின்றுவிட்டேன்.என்னிடம் பேசிக் கொண்டிருந்தவர்  திரு..சீ.கண்ணன் என்பதும், எனக்குப் பணிவழங்கிய தலைமையாசிரியர் முனைவர் .சீ.இராசகோபாலன்அவர்களின் அண்ணன்தான் அவர் என்பதும் அதன்பின்பே தெரிந்தன.

பணிவால் குறுகி நின்ற என்னை வற்புறுத்தி அமர வைத்தார். பேசிய எதையும் பெரிதாய் நினைக்காமல், நகைச்சுவை அலையை எழுப்பியபடி இருந்தார். அலை ஓய்ந்துவிட்டது.

பூணூல் அணிவதைத் துறந்த அண்ணன் தம்பி இருவருக்கும்வாய்த்ததோ,மக்களையும் சமூகத்தையும்துறக்காத தொண்டுள்ளம் !

- செந்தலை .கவுதமன், சூலூர் பாவேந்தர் பேரவை

Pin It