பகுதி-1: http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31359-1-4

சென்னையில் ஜெயலலிதாவின் படத்தை வைத்து அம்மா வழிபாட்டு தளமாக மாற்றிய அத்துமீறல்கள் மற்றவர்களுக்கு ஆழ்ந்த சங்கடங்களை ஏற்படுத்தின. சென்னை, தமிழ் திரையுலகின் தலைநகர். இந்த படங்களை எல்லாம் பார்க்கும் போது பாலிவுட் இந்தி மொழி திரைப்படம் வெளியாக இருப்பது போலவும் அதன் ரசிகர்கள் இன்னும் ஆர்வமுடன் இருப்பது போல இருந்தது. இன்றும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஒவ்வொரு பதிய திரைப்படமும் அவரது ரசிகர்களால் பால் ஊற்றி கொண்டாடப்படுகிறது. இன்னும் சிலர் அவரை தெய்வமாகவே வழிபடுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் போல் வேறு எந்த நடிகரும் தமிழ் கலாச்சாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது கிடையாது.

mgr jayalalitha

"பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல்" என்னும் பிரபலமான பாடல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம் பெற்றது. எம்.ஜி.ஆர் உடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமும் இதுதான். இந்த திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு கட்டுக்கடங்கா முரடன். கொடூரமான கத்தியை கொண்டு சண்டை இடுவது, அப்பாவிகளை மீட்பது, நடமாடுவது, காதல், சிரிப்பு, சல்லாபம் மற்றும் கோழைத்தனமான நடிப்பு என்று நடித்து இருப்பார். 1948ல் பிறந்த ஜெயலலிதா அவரது தாயார் சந்தியாவின் பிடியில் சினிமாவை விட்டு விலகியே வளர்ந்து வந்தார். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயது இருக்கும் போது அவருடைய தந்தை இறந்துவிட்டார்.

16 வயதில், ஜெயலலிதா ஒரு திறமையான நடன கலைஞராக வளர்ந்தார். ஒரு வழக்கறிஞர் ஆக வருவதுதான் தனது வாழ்நாள் கனவு என்றாலும் கல்லூரியில் உதவித்தொகை மறுக்கப்பட்டதாலும் தாயாரின் வற்புறுத்தலாலும் நடிப்பதற்கு ஒப்புக்கொள்கிறார். தனது முதல் படமாக ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் உடன் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார்.

எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவுக்குள் அடியெடுத்து வைக்கும் போது அனைவரும் எழுந்து நிற்பது வழக்கம். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படபிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது எம்.ஜி.ஆர் உள்ளே வருகிறார் அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா மட்டும் ஒரு காலின் மேல் இன்னொரு கால் போட்டுக் கொண்டு புத்தகம் படித்து கொண்டு இருக்கிறார். எம்.ஜி.ஆர் இதை கண்டு அதிர்ந்து போனார். என்னதான் மிகப்பெரிய வயது வித்தியாசம் இருந்தாலும் திரையில் பார்க்கும் போது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பொருத்தமாகவே இருந்தார். "நீயே தான் எனக்கு மணவாட்டி" என்ற பாடல் காட்சியில் புல் தரையில் உருண்டு முத்தமிடுகையில் பூவை வாயால் எடுத்து கடிக்கும் போது தனது உதடுகளை கடிப்பதை போல பற்களை கடிப்பது போன்ற கட்சிகளை பார்த்த மக்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ரகசிய காதலர்கள் என்றே பேசிக்கொண்டார்கள். எம்.ஜி.ஆர் தன்னுடன் நடித்த இணை நடிகை ஜானகியை திருமணம் செய்து கொண்டார். அடுத்த எட்டு ஆண்டுகளில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் இருவரும் சேர்ந்து 28 படங்களில் ஒன்றாக நடித்தனர்.

அவர்கள் சந்தித்த நேரத்தில், எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்றி கொண்டு இருந்தார். இந்த கால கட்டத்தில் கீழ் சாதி தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்படுவது மேலும் காலணி அணிய, சைக்கிள் சவாரி செய்ய கூட தடை செய்யப்பட்டிருந்துதது. தமிழகத்தில் உள்ள இந்தி பேசும் ஆதிக்க பார்பனர்களுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை திராவிட ஆர்வலர்கள் நடத்தினார்கள். திமுக தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றது. சினிமாவை பயன்படுத்தி மிகப்பெரிய சித்தாந்த கருத்துக்களை எடுத்து செல்ல முடியும் என்று நினைத்தார்கள். அது போன்ற கருத்துகளை எழுதுவதில் வல்லவராக இருந்தவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர் கருணாநிதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக, எம்ஜிஆர் என்ற சினிமா நட்சத்திரத்தை பயன்படுத்தி தமிழர்களின் பெருமை மற்றும் உணர்வுகளை நகைச்சுவை மூலம், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, சினிமா மூலம் பிரசாரம் செய்தார்கள். எம்ஜிஆர் ஏழைகளை காக்க வந்த கடவுள் போன்று காட்டினார்கள். எம்ஜிஆர் திமுக என்ற கட்சியின் முகமாக மாறினார். எதிர்பாராத விதமாக அப்போதைய எம்.ஆர் ராதா என்ற போட்டி நடிகர் 1967 தேர்தலில் முன்பாக எம்ஜிஆரின் கழுத்தில் சுட்டு விடுகிறார். திமுக என்ற கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு இந்த சம்பவம் உதவியாக இருந்தது. தன்னுடைய படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைவதற்கு கருணாநிதியின் வசனம் காரணமாக இருந்தது என்பதை உணர்ந்திருந்த எம்ஜிஆர், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கருணாநிதி முதலமைச்சர் நாற்காலியில் அமர உதவினார்.

இருவருமே மிகச் சிறந்த தலைமை பண்பு, வசீகர தோற்றம், பரந்த புன்னகை, ஒரே மாதிரியான கருப்பு கண்ணாடி என சூப்பர் ஸ்டார் போன்று இருந்தனர். ஆனால் அதிகாரத்துக்கு வந்தவுடன் இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் தனியாக பிரிந்து வந்து அஇதிமுக என்ற கட்சியை தொடங்குகிறார். அவருடைய படங்கள் இதற்க்கு மிகப் பெரிய உதவியாக இருக்கின்றன. "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... சொந்த நாட்டிலே..." என்ற பாடல் கட்சியின் தேசியகீதமாக மாறியது. 1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வர் இருக்கையில் அமர்வதற்கு அவரது ரசிகர் மன்றம் மிகபெரிய கருவியாக இருந்தது.

எம்ஜிஆர் அரசாங்கம், பள்ளி குழந்தைகளுக்கு இலவசமகா வழங்கும் மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவுத் திட்டமாக கொண்டுவந்தது மக்களிடையே வெகுவாக பாராட்டப்பட்டது. அவருடைய ஆட்சியிலும் போலீஸை தவறாத பயன்படுத்துவது பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுவது பொருளாதார கொள்கையில் மாற்றம் போன்ற அதிருப்திகள் இருந்தன. ஆனால் திரைப்படத்தில் அவருடைய தனிப்பட்ட பெருந்தன்மை காரணமாக கிராமத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டது. கிராமப்புற மக்கள் அவரை கடவுளாக நம்பினார்கள். இதுவே அவர் தனது வாழ்நாள் இறுதிவரை முதலமைச்சராக அமர்வதற்கு காரணமாக இருந்தது.

(தொடரும்)

- தங்க.சத்தியமூர்த்தி

Pin It