வஹ்ஹாபியம் தோற்றமும் வளர்ச்சியும் - 1

பிரிட்டிஷ் உளவாளி ஹெம்பரின் ஒப்புதல் வாக்குமூலத் தொடர்ச்சி (உலகின் பல்வேறு மொழிகளில் வெளிவந்திருக்கிறது)

 எங்கள் அரசிற்கு இந்தியா பற்றிய பதட்டம் இல்லை. இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழிகள் மற்றும் முரண்பட்ட நலன்களை கொண்ட மக்கள் ஒன்றாக இணைந்து வாழும் நாடு. மேலும் சீனா பற்றியும் எங்களுக்கு பயம் இல்லை. சீனாவின் பௌத்தமும், கன்பூசியனிசமும் அங்குள்ள மக்களிடம் ஆதிக்கம் செலுத்துகிறது. இரண்டுமே ஆபத்தானவை அல்ல. காரணம் அவை இரண்டு இறந்து போய்விட்ட மதங்கள் அவை வாழ்க்கை குறித்து கவலை கொள்ளவில்லை. மேலும் அவற்றிற்கு முகவரியைத் தவிர வேறொன்றுமில்லை. ஆகவே இந்த இரு நாட்டில் உள்ள மக்களுக்கு நாட்டுப்பற்று குறைவாக இருக்கிறது. இந்த இரு நாடுகளைப்பற்றி பிரிட்டிஷ் அரசாங்கம் கவலைப்படவில்லை. மேலும் பின்னாள் நிகழ இருக்கும் சம்பவங்கள் எங்களின் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டவை. ஆகவே நாங்கள் இந்த நாடுகளில் இனவேறுபாட்டை அகற்றல், வறுமை ஒழிப்பு, அறியாமை மற்றும் நோய் ஒழிப்பு ஆகியவை குறித்த நீண்டகால திட்டங்களை வைத்திருக்கிறோம். மேலும் நாங்கள் மிக எளிதாக இந்த நாடுகளின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை கற்றுக்கொள்வோம். அது எங்களின் திட்டத்தை நிறைவேற்ற எளிதாக இருக்கும்.

எங்களுக்கு மிக அதிக பதட்டமே இஸ்லாமிய நாடுகள் தான். நாங்கள் ஏற்கனவே சில ஒப்பந்தங்களை உதுமானிய பேரரசோடு செய்திருக்கிறோம். காலனிய அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கும் குறைவான காலகட்டத்தில் உதுமானிய பேரரசு வீழ்ந்து விடும் என்று ஆருடம் சொன்னார்கள். மேலும் நாங்கள் ஈரானிய அரசுடன் கூட சில ரகசிய ஒப்பந்தங்களை செய்திருந்தோம். இந்த இரு அரசுகளில் யாருக்கு மத்திய கிழக்கில் அதிகாரம் என்பதற்காக நூல் போட்டிருந்தோம். மேலும் ஊழல், தகுதியற்ற நிர்வாகம் மற்றும் மதக் கல்வியின்மை போன்றவை ஒரு பக்கம் இருக்க, அழகான பெண்களோடு சல்லாபித்தல் அதன் மூலம் அவர்களின் கடமையை மறத்தல் போன்றவை இரு நாட்டு அரசர்களிடமும் இருந்தன. இவை இந்த இரு நாடுகளின் முதுகெலும்பை உடைக்கக்கூடியதாக இருந்தன. இருந்தபோதிலும், எங்களின் செயல்பாடுகள் இன்னும் நாங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. இந்த காரணங்களுக்காக நான் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.

முஸ்லிம்கள் தங்கள் மதத்தோடு அதிக பற்றுதல் கொண்டவர்கள். ஒவ்வொரு முஸ்லிமும் கிறிஸ்தவ பாதிரிகள் போன்று தங்கள் மதத்தோடு அதிக பிணைப்பு கொண்டவர்கள். இது தெரிந்தவகையில் பாதிரியார்களும், துறவிகளும் கிறிஸ்தவத்தை கைவிடுவதை விட இறந்து விட வேண்டும். அவ்வாறான எண்ணம் கொண்ட மிக அதிக அபாயத்திற்குள்ளான மக்கள் ஈரானின் ஷியா பிரிவினர். அவர்கள் யாரெல்லாம் ஷியா பிரிவை ஏற்றுக்கொள்ளவில்லையோ அவர்களை நம்பிக்கையற்றவர்கள் மற்றும் முட்டாள்கள் என்றனர். அவர்களை பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் தீங்கான, வெறுக்கத்தக்கவர்கள். மேலும் அவர்கள் கருத்துப்படி இயல்பாக ஒருவரின் சிறந்த பணி என்பது அப்படியான வெறுக்கத்தக்கவர்களை விரட்டுவது தான். ஒருதடவை நான் ஒரு ஷியா பிரிவை சார்ந்த ஒருவரிடம் இப்படி கேட்டேன்." ஏன் நீங்கள் கிறிஸ்தவர்களை அப்படி பார்க்கிறீர்கள்?” அதற்கான விடை இவ்வாறு இருந்தது. “இஸ்லாத்தின் தூதர் நபி மிகச்சிறந்த ஞானி. அவர் கிறிஸ்தவர்களை நேர்வழிப்படுத்துவதற்காக, இறைவனின் மார்க்கத்தில் அவர்களை அழைத்தார். உண்மையில் ஒருவர் நேர்வழிக்கு வருவது வரை அவரை அபாயகரமானவராக வைத்திருப்பது ஓர் அரசின் கொள்கை. வெறுக்கத்தக்கவர்கள் என்று நான் பேசிக்கொண்டிருப்பது வெறும் கிறிஸ்தவர்கள் மட்டும் அல்ல. மாறாக சுன்னிகள் மற்றும் அனைத்து நம்பிக்கையற்றவர்களுக்கும் இது பொருந்தும். இது பொருளாதார ரீதியானதல்ல. மாறாக ஆன்மீக ரீதியானதாகும்.”

நான் சொன்னேன் "நல்லது. சுன்னிகளும், கிறிஸ்தவர்களும் அல்லாஹ்வை நம்புகிறார்கள். அவனின் தூதரை நம்புகிறார்கள். நியாயத்தீர்ப்பு நாளையும் நம்புகிறார்கள்.. அவ்வாறு இருக்க ஏன் அவர்களை நீங்கள் முட்டாள்கள் என்கிறீர்கள்?” என்றேன். அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். "அவர்கள் இரு காரணங்களுக்காக முட்டாள்கள். அவர்கள் எங்கள் இறைத்தூதர் முஹம்மது மீது அவதூறு கூறுகின்றனர். இதற்குப் பதிலாக நாங்கள் இதன் அடிப்படையில் பதிலுக்கு செய்ய முடியும். உங்களுக்கு ஒருவர் நோவினை செய்தால், நீங்கள் அவருக்கு அதை திருப்பி அளிக்க முடியும். மேலும் அவர்களிடம் நீங்கள் முட்டாள்கள் என்று சொல்லுங்கள். கிறிஸ்தவர்கள் இறைத்தூதர்கள் மீது குற்றச்சாட்டு கூறுகின்றனர். உதாரணமாக ஈசா (இயேசு கிறிஸ்து) மது அருந்தினார் என்கின்றனர். அதற்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்று குறிப்பிடுகின்றனர்.”

இதற்கு பீதியுண்டாக்கும் வகையில் நான் அவரிடம் சொன்னேன் "கிறிஸ்தவர்கள் அவ்வாறு சொல்லவில்லை.” அதற்கு அவர் “இல்லை அவ்வாறு சொல்கிறார்கள். உங்களுக்கு அதுபற்றி தெரியாது. அது பைபிளில் எழுதப்பட்டுள்ளது” என்றார். நான் மௌனமானேன். அந்த மனிதன் முதல் நிலைப்பாட்டில் சரியானவராகவும், இரண்டாம் நிலைப்பாட்டில் சரியற்றவராகவும் இருந்தார். நான் இந்த விவாதத்தை அவருடன் தொடர விரும்பவில்லை. காரணம் என் இஸ்லாமிய பார்வை குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டுவிடுவார்கள். அதனால் மேற்கொண்ட விவாதத்தை தவிர்த்து விட்டேன்.

இஸ்லாம் ஒரு காலத்தில் நிர்வாக மற்று ஆட்சி அதிகாரத்தின் மதமாக இருந்தது. எல்லா முஸ்லிம்களும் மதிக்கப்பட்டார்கள். இந்த மக்களிடம் தற்போது நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள் என்று சொல்ல முற்படுவது கடினமாக விஷயம். மேலும் இஸ்லாமிய வரலாற்றை தவறாக குறிப்பிட முற்படுவதும் இயலாத காரியம். மதிப்புடனும், கௌரவத்துடனும் ஒரு கூட்டம் மக்கள் வாழ்ந்த காலம் தற்போது போய்விட்டது. அவை ஒருபோதும் திரும்பி வராது.

நாங்கள் உதுமானிய பேரரசு மற்றும் ஈரானியர்கள் குறித்து அதிகம் கவலைப்பட்டோம். காரணம் அவர்கள் எங்களை தொடர்ந்து கவனித்து வருவதன் மூலம் எங்களை தோற்கடித்து விடுவார்களோ என்றிருந்தோ. இருந்தாலும் இந்த இரு அரசுகளும் ஏற்கனவே பலவீனமடைந்து இருந்தன. ஆனாலும் நாங்கள் உறுதியாக நம்பவில்லை. காரணம் அவர்கள் சொத்து, ஆயுதம் மற்றும் அதிகாரம் உட்பட அனைத்தும் கொண்ட மைய அரசைக்கொண்டிருந்தனர்.

நாங்கள் இஸ்லாமிய கல்வியாளர்கள் குறித்து மிகுதியாக அச்சங்கொண்டோம். இஸ்தான் புல் மற்றும் ஜாமியல் அஸ்கர் போன்ற இடங்களில் உள்ளவர்கள் தான் எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தனர். மேலும் ஈராக் மற்றும் டமாஸ்கஸ் கல்வியாளர்கள் எங்களின் நோக்கத்தின் முன்னால் மிகப் பெரும் சவாலாக இருந்தனர். அவர்கள் தங்கள் கொள்கைகளை இம்மியளவு கூட சமரசம் செய்யமாட்டார்கள். காரணம் அவர்கள் லௌகீக உலகின் சிற்றின்ப நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களை துறந்தவர்களாக, குர் ஆனில் கூறப்பட்டப்படி நிச்சயிக்கப்பட்ட சொர்க்கத்தின் மீது தான் அவர்களின் கண்கள் இருந்தன. மக்கள் அவர்களை பின்தொடர்ந்தனர். இதனால் சுல்தான்கள் கூட அவர்களைக் கண்டு பயந்தனர். சுன்னிகள் ஷியாக்களைப் போன்று கல்வியாளர்களைப் பின்தொடர்ந்தவர்கள் அல்லர். ஷியாக்களை பொருத்தவரை புத்தகங்களை வாசிப்பதில்லை. அவர்கள் கல்வியாளர்களை மட்டுமே அங்கீகரித்தனர். மேலும் சுல்தான்களிடம் மரியாதையை வெளிப்படுத்தவில்லை. சுன்னிகளை பொருத்தவரை கல்வியாளர்களை அங்கீகரித்தனர். மேலும் தீவிரமாக வாசித்தனர். வரலாற்றில் புகழ்மிக்க கல்வியாளர்களை மதித்தனர்.

                நாங்கள் தொடர்ச்சியான பல சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்தோம். ஒவ்வொரு முறையும் நாங்கள் முயன்றவரை எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கான சாலைகள் மூடப்பட்டிருந்தன. எங்கள் உளவாளிகளிடமிருந்து வரும் அறிக்கைகள் எப்போதும் ஏமாற்றத்திற்குரியதாக இருந்தன. அதற்கான சந்திப்புக்களும் பலனற்று போயின. ஆனாலும் நாங்கள் நம்பிக்கையை கைவிடவில்லை. நாங்கள் ஒரு குழுவாக இருந்து பொறுமையையும், ஆழ்ந்த பெருமூச்சையும் கைக்கொள்ள பழகிக்கொண்டோம்.

                காலனிய அமைச்சர், பாதிரியார்கள், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட சந்திப்பு நடைபெற்றது. அந்த கூட்டம் இருபதில் ஒன்றாக இருந்தது. அது மூன்று மணிநேரம் நீண்டது. மேலும் இறுதி கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கலைந்தது. அந்த கூட்டத்தில் பாதிரியார் இவ்வாறு குறிப்பிட்டார். "கவலைப்படாதீர்கள். மீட்பரும் அவரின் சீடர்களும் 300 வருட போராட்டம் நீண்ட போராட்டத்திற்குப் பின்னால் அதிகாரம் பெற முடிந்தது. நாம் நம்புவோம். அறியப்படாத உலகில் இருந்து அவர் நம்மை பார்க்கிறார். மேலும் நம்பிக்கையற்றவர்களை அவர்களின் மையத்திலிருந்து வெளியேற்ற நமக்கு அருள் புரிவார். அதற்கு 300 வருடங்கள் ஆகலாம். நாம் அதிகாரத்தைப் பெற ஊடகங்களை எல்லா வகையிலும் உடைமையாக்கிக் கொள்ள வேண்டும். நாம் கிறிஸ்தவத்தை முஸ்லிம்கள் மத்தியில் பரப்ப முயற்சிக்க வேண்டும். இது பல நூற்றாண்டுகள் கடந்த போதும் நம் இலக்கை நிறைவேற்ற உதவிகரமாக இருக்கும். தந்தைகள் அவர்களின் குழந்தைகளுக்காக பணிபுரிய வேண்டும்.”

                மேற்கண்ட சந்திப்பில் ராஜதந்திரிகள் மற்றும் பிரான்சு, ருஷ்யா மற்றும் இங்கிலாந்தை சார்ந்த மத பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. காரணம் நானும் அதில் கலந்து கொண்டேன். நானும், அமைச்சரும் மிக நெருக்கமாக இருந்தோம். இந்த சந்திப்பில் முஸ்லிம்களை கருத்துக்கள் அடிப்படையில் மேலும் பல குழுக்களாக பிளவுபடுத்துவது மற்றும் ஸ்பெயினை போன்று அவர்களின் நம்பிக்கையைத் துறந்து கிறிஸ்தவத்திற்கு திருப்புவது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. ஆனால் முடிவுகள் எதிர்பார்த்த படி எட்டப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட எல்லா விஷயங்கள் பற்றிய விபரங்களை என்னுடைய Ilaa Melekoot-il- Meseeh என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

                பூமியில் ஆழமாக வேரூன்றிய மரத்தை திடீரென நிர்மூலமாக்குவது என்பது மிகவும் கடினமான காரியம். இந்த கடின சவாலை நாம் எளிதாக எடுத்துக்கொண்டு அவற்றை வெல்ல வேண்டும். கிறிஸ்தவம் பரவி இருக்கிறது. எங்கள் மீட்பர் அதற்கு உறுதியளித்து இருக்கிறார். ஒருகாலத்தில் கிழக்கிலும், மேற்கிலும் இருந்த மோசமான சூழல்கள் முஹம்மதிற்கு உதவி அளித்தன. அவ்வாறான நிலைமைகள் தற்போது போய் விட்டன. அத்தகைய சூழல்கள் தற்போது முற்றிலுமாக மாறி விட்டன என்பதை நாம் அவதானிக்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகப்பெரும் வேலைத்திட்டம் மற்றும் அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக முஸ்லிம் அரசுகள் தற்போது சரிந்து வருகின்றன. கிறிஸ்தவர்கள் ஏறுமுகமாக இருக்கின்றனர். நாம் நூற்றாண்டுகளில் இழந்த பிரதேசங்கள் மீண்டும் எடுத்துக்கொள்வதற்கு இதுவே சரியான தருணம். அதிகாரமிக்க எங்களின் பிரித்தானிய அரசு இந்த புனித பணியை மேற்கொள்ளும்.

 ஹெம்பரின் ஒப்புதல் வாக்குமூலம் இன்னும் தொடரும்....

- எச்.பீர்முஹம்மது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

வஹ்ஹாபியம் தோற்றமும் வளர்ச்சியும் - 3

Pin It