ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் அப்சல் குருவின் தூக்கு தண்டனை விசாரணையை உற்றுப் பார்க்கும்போது.. அவர் தீர விசாரிக்கப்படவில்லை என்பது வெட்டவெளிச்சமானது. தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளும் சாட்சிகளும் விசாரிக்கப்படமலேயே அப்சல் குரு குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டார்.

தனக்கு அளிக்கப்பட்ட அநீதியான தீர்ப்பினால் மிகவும் மனம் உடைந்த்து, இந்திய சமுக அமைப்பின் மேல் இருந்த நம்பிக்கையை முற்றிலும் இழந்தவராக இருந்தார். தீர்ப்பு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை பலமுறை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருந்தார். அதற்குக் காரணம் குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் என்பதல்ல.. இந்திய நீதி பரிபாலனத்தின் கோரத்தினை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை..

ஒவ்வொரு நாளும் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருப்பது தூக்கிலிடப்படும் வலியை விட கொடுமையாக இருக்கிறது. தூக்கிலிடப்பட்டால் ஒரே நாளில் வலியும் வேதனையும் முடிவுக்கு வந்துவிடும்..எனவே என்னை விரைவில் தூக்கிலிடுங்கள் என்று வேண்டுகோளைக்கூட சில பேட்டிகளின் வாயிலாகச் சொல்லியிருந்தார்.

அவரது வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் நிறைவாக விசாரிக்கப்படாத, குற்றங்கள் முழுமையாக நிருபிக்கப்படாத குற்றம் சாட்டப்பட்டவர் தூக்கிலிடப்பட்டுள்ளார். எனவே தூக்கிலிடப்பட்டது அப்சல் குரு மட்டுமல்ல இந்திய நீதித் துறையும்தான்.

நீதித்துறை எவ்வளவு பலவீனமானது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும் , சென்னை உயர்நீதி மன்றத்தை காவல்துறையினர் திட்டமிட்டு தாக்கியதுடன், ஏராளமான வழக்கறிஞர்களை கொடுரமாகத் தாக்கினார்கள். நூறுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மிக மோசமாக என்னுடைய கண்ணெதிரிலேயே ஒரு நீதியரசர் போலிசால் தாக்கப்பட்டார். அவரது மண்டை உடைந்தது.. ஆனால் அவர் கழிவறையில் தவறி விழுந்தது உடைத்துக் கொண்டதாக பின்னால் பிளேட்டைத் திருப்பினார் என்ற கேலிக்கூத்தை நாங்கள் பார்த்தோம். இப்பேர்பட்டவர்கள்தான் நீதி வழங்குகிறார்கள்.

எனவே.அப்சல்குருவுக்கு வழங்கப்பட்ட தூக்கு அவருக்கு நிம்மதியை வழங்கியிருக்கிறது.. ஆனால் இந்திய அரசியல் மற்றும் நீதித்துறையின் முகத்திரையை கிழித்து எறிந்திருக்கிறது.

ஆனால் எனக்கிருக்கும் ஒரு சந்தேகம் என்னவென்றால்.. இந்தியா ஒரு அகிம்சை தேசம் என்று சொல்கிறார்களே அது ஏன் என்றே புரியவில்லை. இந்துத்துவ பயங்கரவாதிகள் ஒரு திட்டமிட்டக் கொலையை மகிழ்சியுடன் வரவேற்கிறார்களே எப்படி, இதுதான் இவர்களின் மதம் போதித்த போதனையா? அதை வெடிவைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால் நாமெல்லாம் பாதுகாப்புடன் வாழ முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு தலித் குடியரசு தலைவராக இருந்தபோது எந்த கருணை மனுவும் விசாரிக்கப்படவும் இல்லை நிராகரிக்கப்படவும் இல்லை.

ஒரு இசுலாமியர் குடியரசு தலைவராக இருந்தபோதும் எந்த கருணை மனுவும் விசாரிக்கப்படவும் இல்லை, நிராகரிக்கப்படவும் இல்லை..

ஆனால் ஒரு பார்ப்பனர் குடியரசுத் தலைவரானதும் தொடர்ச்சியாக கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.. இதுதான் இந்துமதத்தின் சாந்த ரூப ஆட்சியா.....?

Pin It