கடவுள் இறந்துவிட்டார், மனிதன் விடுதலை அடைந்துவிட்டான் என்பது நீட்சேயின் புகழ்பெற்ற பொன் மொழி. கடவுள் ஏன் இறக்க வேண்டும்;கடவுள் உயிருடன் இருந்தார் என்றால் மனிதனின் சுதந்திரம் பாதிக்கப்படும். அவர் மனிதனை எப்போது வேண்டுமானாலும் பிறக்க வைப்பார், எப்போது வேண்டுமானாலும் இறக்க வைப்பார் என்றால் மனிதன் என்ன பொம்மையா? கடவுள் வீட்டுப் பண்ணையில் வேலை செய்யும் கொத்தடிமைகளா?

புத்த மதத்தின் புனித நூலான தம்மபதத்தில் முதல் சூத்திரம் சொல்கிறது. அவரவர் செய்யும் நற்செயல்களின் பலன்கள் அவரவரை நிழல் போல பின்தொடரும். அவரவர் செய்யும் தீயகாரியங்களுக்கான பலன்கள் வண்டிச் சக்கரம் போல் பின் தொடரும்.அவரவர் கர்ம பலன்களின்படியே குணநலன் அமைகிறது. வாழ்க்கையின் போக்கையும் கர்ம பலன்களே தீர்மானிக்கிறது.

அப்படியிருக்க என்ன பாவங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். சாமியார்களிடம் வந்து பணம் கொடுத்து தீட்சை பெற்றால் கர்மவினைகளை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவார். தன்னிடம் ஆசி பெற்றால் அவர்களின் எதிரிகளை இல்லாமல் ஆக்கிவிடுவார்.சித்து விளையாட்டின் மூலம் போட்டியாளர்களை பித்து பிடிக்கச் செய்துவிடுவார்.

இத்தகைய போலிச் சாமியார்களை நாடி ஓடும் மக்கள் உள்ள இந்திய நாடா வல்லரசாகும். கர்மாஸ் த்யரியின்படி இங்கு ஒரு லா(law) செயல்படுகிறது.அவரவர் கர்மங்களுக்கு ஏற்ப பிறந்து,வாழ்ந்து,இறந்து மீண்டும் பிறந்து என்ற இந்த சுழற்சியிலிருந்து யாரும் தப்ப முடியாது.இந்த லா(law)வில் கடவுளால் கூட கைவைக்க முடியாது அப்படி கடவுள் சிலருக்காக இந்த லாவில் கைவைத்தாரானால், சத்தியத்தை தெரிந்தே மீறுவாரானால் ஏன் கடவுள் இருக்க வேண்டும்.

 மனித சுதந்திரத்தை மதிக்கத் தெரியாதவர் ஏன் கடவுளாக இருக்க வேண்டும். படைப்புகளின் மேல் பாரபட்சம் பார்ப்பவருக்கு நாம் ஏன் கோயில் கட்டி பணிவிடை செய்ய வேண்டும்.

கோடிக்கணக்கான ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த கடவுளுக்கு சலிப்பு வந்ததாம்.உடனே உலகைப் படைத்தாராம் ஏன் உலகைப் படைக்க வேண்டும் தனிமையைப் போக்க ஒரு பெண்ணை படைத்து இருக்கலாமே.

கேட்டால் கடவுளின் லீலைகளாம்.என்ன லீலையாம் இது மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்,முடவனாக்கப்பட்ட இளைஞர்கள்,கண் தெரியாதவர்கள், காது கேட்காதவர்கள் இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள், சித்ரவதைகள் இது தான் உங்கள் கடவுளின் லீலைகளா? முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் மாண்டவர்கள் எத்தனை பேர், இதைத் தான் செய்து கொண்டிருக்கிறாரா உங்கள் கடவுள்.இந்த விளையாட்டு விளையாடுவதற்கு பதில் கோல்ஃப் ஆடலாமே, டென்னிஸ் விளையாடலாமே.உங்கள் கடவுள் கருணை உள்ளவரல்ல உங்களிடம் அவர் பக்தியை, அன்பை கேட்கவில்லை மாம்சத்தை, குருதியைக் கேட்கிறார்.

தான் இவ்வுலகை குட்டிச்சுவராக்கியது போதாதென்று போலிச் சாமியார்களிடம் சகல அதிகாரங்களையும் கொடுத்து கபடத்தனம் உள்ளவர்களைக் கண்டு மகுடம் சூட்டுகிறார்,வேஷம் போடத் தெரியாதவர்களின் உயிரைப் பறிக்கிறார்.மரணத்தை வைத்தே நம்மை பயமுறுத்துகிறார்.தற்கொலை செய்து தப்பிக்கலாம் என்றால் எகத்தாளமாகச் சிரிக்கிறார்.கடவுள் இல்லாத உலகத்தில் வாழ ஆசைப்படுபவர்களுக்கு யாராவது உதவ முடியுமா?

Pin It