ஆங்கிலேய காலனிய ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுதலை செய்வதற்காக, 1915-இல் கெதர் எழுச்சியைக்கட்டவிழ்த்துவிட்ட புரட்சியாளர்கள், சாவை துச்சமென கருதிய அவர்களுடைய வீரம், அறிவுக் கூர்மையான அணிதிரட்டுதல் மற்றும் தொலைநோக்கு ஆகியவற்றைப் போற்றுவதற்காக ஒரு பொதுக் கூட்டத்தை தில்லியில் மக்கள் குரல் (லோக் அவாஸ்)வெளியிட்டாளர் மற்றும் வினியோகிப்பாளர்கள் நடத்தினர். கட்சியின் செயல்வீரர்களும், ஆதரவாளர்களும் இக்கூட்டத்தில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். அவர்கள் இன்றைய சூழ்நிலையில் கெதர் எழுச்சியின் பொறுத்தத்தை ஊக்கத்தோடு விவாதித்தனர்.

flag 600

1915 கெதர் எழுச்சியின் முக்கிய அம்சங்கள் குறித்தும், அதிலிருந்து நாம் படித்துக் கொள்ள வேண்டிய முக்கிய படிப்பினைகள் குறித்தும், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தோழர் பிரகாஷ் ராவ் உரையாற்றினார்.

கடந்த காலமும், நிகழ்காலமும் எதிர்காலமும் பிரிக்க முடியாமல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாக இருக்கின்றன. இன்றைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், நமது சமுதாயத்தின் எதிர் காலத்திற்கான பாதையை வகுக்கவும் கடந்த காலத்தின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான அனுபவங்களிலிருந்து பாடங்களை இன்றைய கம்யூனிஸ்டுகள் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நமது நோக்கமானது, நமது தாய்நாட்டை முதலாளித்துவத்திலிருந்தும், நிலஉடமையின் மிச்சங்களிலிருந்தும், ஏகாதிபத்தியம் மற்றும் காலனியத்திலிருந்தும் விடுவிப்பதும், எந்த வடிவிலும் மனிதனை மனிதன் சுரண்டுதலற்ற ஒரு சோசலிச இந்தியாவைக் கட்டுவதும் ஆகும்.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு,இந்துஸ்தான் கெதர் கட்சியின் கீழ்இந்தியப் புரட்சியாளர்கள் ஒன்று திரண்டுவெறுக்கத்தக்க ஆங்கிலேய காலனிய ஆட்சியைத் தூக்கியெறியவும்,எந்த வகையான சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத நவீன சனநாயக குடியரசை நிறுவவும் ஒரு புரட்சியை வெடிக்கச் செய்ய வேண்டுமென முடிவெடுத்தனர். உலகை மறு பங்கீடு செய்வதற்காக ஒரு உலகப் போரில் பிரிட்டன் மூழ்கி இருக்கும் அந்தத் தருணத்தை ஆங்கிலேய ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான வாய்ப்பாககெதர் போராளிகள் கண்டனர்.

இந்த எழுச்சியைபஞ்சாப்,உ.பி. ஆகிய பிரிட்டிஷ் இந்திய இராணுவப்பிரிவுகளில் ஆரம்பித்து தில்லியை விடுவித்து, அதற்குப் பின் முழு நாட்டையும் விடுவிக்கலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும்எங்கெல்லாம் இந்திய இராணுவ பிரிவுகள் இருந்ததோ அங்கெல்லாம் இராணுவ வீரர்களிடையில், தங்கள் உண்மையான எதிரியான பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் மீது தங்கள் துப்பாக்கிகளைத் திருப்ப வேண்டும் என்ற புரட்சிகர பரப்புரையைகெதர் போராளிகள் மேற்கொண்டனர்.

இந்தியத் துணைக் கண்டத்தின் காலனிய எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் 1915எழுச்சி, மிகவும் புரட்சிகர அத்தியாயங்களில் ஒன்றாக இருந்தது.இன்று மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் இழுத்துச் செல்லப்படும் இந்த நேரத்தில்,கெதர் எழுச்சி பல முக்கிய பாடங்களை முற்போக்கு சக்திகளுக்கு கொண்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம், நம்முடைய பணியை நிறைவேற்றுவதற்காக,நம்முடைய புரட்சிகர பாரம்பரியத்திலிருந்தும் உலக அளவிலுள்ள மிக முன்னேறிய அறிவியல் சிந்தனையிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியது நமது கடமை என்று நம்புகிறோம்.

ஆயிரக்கணக்கான கெதர் போராளிகள் அமெரிக்கா, கனடாமற்றும் உலகின் மற்ற நாடுகளிலிருந்து கப்பல்களில் ஆகஸ்ட் 1914 முதல் இந்தியாவுக்கு வந்தனர்.கொல்கத்தாவில் வந்திறங்கியவுடன் பலர் கைது செய்யப்பட்டனர், பலர் பஞ்சாபில் அவர்களுடைய கிராமங்களில் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டனர். ஆனால் இக் கொடுமைகளைக் கண்டு அஞ்சி கெதர் போராளிகள் பின்வாங்கவில்லை.

தியாகிகர்தார் சிங் சாராபா, தியாகி விஷ்ணு கணேஷ் பிங்கலே போன்ற பலரும்வங்காளம் மற்றும் உ.பி.யிலிருந்தஇந்தியப்புரட்சியாளர்களோடு இணைந்து இந்திய ராணுவத்தில் எழுச்சியை ஏற்படுத்த அணிதிரட்டத் தொடங்கினர். துரோகத்தனத்தின் மூலம்இந்த எழுச்சிஒடுக்கப்பட்ட பின், கெதர் போராளிகள் துருக்கி,ஈரான்,ஈராக்,பலுச்சிஸ்தான்,சிங்கப்பூர்,மலாயா,மியான்மார் மற்றும் பிற நாடுகளில் உள்ள இராணுவத்தின் மத்தியில் அணிதிரட்டினர்.

முதல் உலகப் போரின் போது,உலகின்சோசலிச மற்றும்கம்யூனிச இயக்கத்தில் இரண்டு வகையான போக்குகள் இருந்தன என்று தோழர் பிரகாஷ் ராவ் சுட்டிக்காட்டினார்.அந்தப் போரை ஒரு ஏகாதிபத்திய போர் என்றும் அது இரண்டு மிகப் பெரிய சூறையாடும் ஆக்கிரமிப்புக் குழுக்கள்உலகைதங்களிடையில் மறுபங்கீடு செய்வதற்கான ஒரு ஏகாதிபத்தியப் போர் என்றும் தோழர் லெனின்ஆய்வுரை தந்தார்.

மேலும் அவர் இந்த ஏகாதிபத்திய யுத்தத்தை,பெருமுதலாளி வர்க்க ஆட்சியை தூக்கி எறியும் புரட்சிகர உள்நாட்டுப் போராக மாற்றுவதற்கு, தொழிலாளர்களுக்குத் தலைமை தாங்குமாறு கம்யூனிஸ்டுகளுக்குஅழைப்பு விடுத்தார். புரட்சிக்காகவும் தேசிய விடுதலைக்காகவும் ஏகாதிபத்திய முதலாளிவர்க்கத்திற்கு எதிராக ஒன்றிணையுமாறு உலகத்தின் எல்லாத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

சரியாக அதே நேரத்தில் தான், ஐரோப்பாவின் பல்வேறு தொழிலாளிவர்க்க கட்சிகள் தொழிலாளி வர்க்கத்தை வஞ்சித்து விட்டு தொழிலாளிகள் தங்கள் முதலாளிவர்க்கத்தின் பீரங்கிகளுக்கு இரையாகி, மற்ற நாட்டுத் தொழிலாளிகளைக் கொல்லுமாறு அழைப்பு விடுத்தனர். லெனினும் போல்ஷவிக்கு கட்சியும் வந்த அதே முடிவுக்குகெதர் கட்சியும் வந்தது.

காலனிய ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலைபெறுவதற்காக ஏகாதிபத்தியப் போரை புரட்சி கர உள்நாட்டுப் போராக மாற்ற அவர்கள் முயற்சித்தனர். சொல்லின் உண்மையான பொருளில் கெதர் போராளிகள், ஆழ்ந்த சர்வதேசிய வாதிகளாக இருந்தனர். இந்த வேலையின் போது,ஆப்கானிஸ்தானில் சுதந்திர  இந்தியா (ஆசாத் ஹிந்துஸ்தான்)என்ற அரசாங்கத்தைஅவர்கள் அமைத்தனர்.

எந்த வகையான சுரண்டலும் இல்லாத இந்தியாவுக்காக கெதர் புரட்சியாளர்கள் கனவு கண்டு அதற்காகப் போராடினர். மக்கள் எதிர்ப்புகளை உடைப்பதற்காக பிரிடிஷ் காலனிய ஆட்சியாளர்களும் அவர்களுடைய கூட்டாளிகளும் சமுதாயத்தில் தீ மூட்டி விட முயற்சித்த எல்லா வகையான சாதி மதப் பிளவுகளையும் அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

புரட்சியாளர்களின் எழுச்சியை ஒடுக்குவதற்காக,இந்தியப்பாதுகாப்புச் சட்டம் 1915,அதன் பின்னர் ரவுலத் சட்டம் 1919 போன்ற சட்டங்களைக் கொண்டு வந்து,பாசிச பயங்கரவாத ஆட்சியைக்காலனியர்கள் கட்டவிழ்த்து விட்டனர். ரவுலத் சட்டத்தை எதிர்த்து எந்தவித ஆயுதங்களுமின்றிப் போராடியபெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளை ஜாலியன்வாலாபாகில்ஆங்கிலேயர்கள் படுகொலை செய்தனர்.

ஆனால் இவை எதுவுமே, தங்கள் சக்திகளை மீண்டும் அணிதிரட்டி, புதிய புரட்சிகர மையத்தை அமைப்பதிலிருந்தும், இந்திய விடுதலைக்கண்ணோட்டத்தை முன்வைப்பதிலிருந்தும்,புரட்சியாளர்களைத் தடுக்க முடியவில்லை. இந்த வேலை, 1924-இல் இந்துஸ்தான் ரிபப்ளிகன் சங்கத்தை அமைப்பதற்கு வழிவகுத்தது. இந்த அமைப்பின் கீழ் இந்தியப் புரட்சியாளர்கள், சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத இந்தியாவை அமைப்பதற்காகத் தொழிலாளர்களையும் உழவர்களையும் பெண்கள் இளைஞர்கள் மற்றும் நாட்டுப் பற்று கொண்ட எல்லா சக்திகளையும் ஒன்றிணைக்கத் தொடங்கினர்.

கெதர் எழுச்சியிலிருந்தும் சோவியத் யூனியனில் நடைபெற்ற புரட்சியின் வெற்றியிலிருந்தும் அங்கு சோசலிச கட்டுமானத்திலிருந்தும் பல முக்கியமான பாடங்களை புரட்சியாளர்கள் கற்றுக் கொண்டனரென தோழர் பிரகாஷ் ராவ் சுட்டிக் காட்டினார். இரகசிய அமைப்பைக் கொண்டதாகவும், இரகசிய புரட்சிகர செயல்களிலும் பெருவாரியான மக்களிடத்தில் அரசியல் வேலைகளிலும் ஈடுபட வல்லதாக இருக்கும், ஒரு அரசியல் கட்சியின் அவசியத்தை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

தொழிலாளர்களையும் உழவர்களையும் அணி திரட்ட வேண்டிய அவசியத்தை அவர்கள் புரிந்து கொண்டனர்.காந்தி போன்ற காலனிய ஆட்சியின் கூட்டாளிகளால் பரப்பப்படும் திட்டங்களையும் தத்துவங்களையும் எதிர்கொள்ள, ஒரு புரட்சிகரமான கருத்தியலின் அடிப்படையில் புரட்சிக்கான ஒரு திட்டத்தை முன் வைக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

பக்தி மற்றும் சுபி இயக்கங்கள், 1857மற்றும் 1915-இன் கெதர் எழுச்சி உள்ளிட்ட பல்லாண்டுகளாக நம் நாட்டில் இருந்து வந்துள்ள புரட்சிகர கோட்பாடுகள் மற்றும் செயல்பாடுகளைப் போலவே,லெனின் விளக்கிய புரட்சிகர கோட்பாடுகளும் செயல்பாடுகளும் புரட்சியாளர்களிடத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

இயக்கத்திற்குள்ளே இரண்டு வகையான போக்குகள் இருந்தன என்று தோழர் பிரகாஷ் ராவ் சுட்டிக்காட்டினார். ஒன்று, காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டை எடுத்த புரட்சியாளர்கள். மற்றொன்று காலனிய ஆட்சியாளர்களிடம் பதவிக்கும் செல்வத்திற்கும் விலை போன சமரசவாதிகள், இதில் காங்கிரசு கட்சியின் முக்கிய தலைவர்களான காந்தி, நேரு போன்றவர்களும் மற்றும் பலரும் அடங்குவர். முதலாம் போக்கினைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு"கருப்பு தண்ணீர்"("காலா பானி")என்று அழைக்கப்பட்ட கொடூரமான சித்தரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

ஆனால் இரண்டாம்போக்கினைக் கொண்டவர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன. இவர்கள் தான்,இந்திய இராணுவ வீரர்கள் பிரிடிஷ் காலனியர்களுக்காக பீரங்கிகளுக்குத் தீனியாக செத்து மடிந்து கொண்டிருக்கையில்,முதல் உலகப் போரில் இலாபமடைந்த இந்திய பெரு முதலாளி வர்க்கத்தின்பிரதிநிதிகளாக இருந்தவர்கள்.

1947-இல் அதிகாரம் கைமாறிய போது, இவர்கள் தான் ஆட்சியாளர்களாக ஆகி, இந்திய அரசைக் கைப்பற்றினார்கள். சிறப்புரிமை பெற்ற சிறுபான்மையினரானஇந்த வர்க்கத்தின் பிரநிதிகள்,மாற்றுக் கருத்துக்களைப் புறக்கணித்துவிட்டு, 1950 அரசியல் சட்டத்தை எழுதினார்கள். எனவேஇன்றுள்ள இந்திய அரசும், நம் நாட்டிலுள்ள அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பும் பெருமுதலாளிகள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்காகவும், பெருவாரியான உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராகவும் வேலை செய்கின்றது என்பதில் எந்தவித வியப்புமில்லை என்று அவர் விளக்கினார்.

இந்திய அரசியல் சட்டம் தொழிலாளிகள், உழவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் மிக அடிப்படையான உரிமைகள் மீறப்படுவதை அங்கீகரிக்கிறது. இன்றும் கூட, நாம் இந்த இரண்டு போக்குகளைப் பார்க்கிறோம். உழைக்கும் மற்றும் சுரண்டப்படுபவர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிப்பவர்களாக இருக்கும் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு, நாம் ஒன்றுதிரண்டு முதலாளி வர்க்கத்தின் ஆட்சியைத் தூக்கி எறியும் போராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும்.

நாம் புதிய அரசு அதிகாரத்தை நிறுவ வேண்டும், தொழிற்சாலைகள், இயந்திரங்கள், நிலம் போன்ற உற்பத்தி சாதனங்களை நம் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும், "தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் - நாமே இந்தியா, நாமே இதன் மன்னர்கள்" என்ற கொள்கையின் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் சட்டத்தை எழுத வேண்டும்.

பின்வரும் முக்கிய செய்திகளோடு,தோழர் பிரகாஷ் ராவ் தன் உரையை முடித்துக் கொண்டார்.

இந்தியாவுக்கு புரட்சி, ஒரு பாட்டாளி வர்க்க புரட்சிதேவை. அது வெறுக்கப்படுகின்ற முதலாளி வர்க்க ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் பாதையை திறந்து விடும். புதிய அரசாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி, முதலாளி வர்க்கத்திடமிருந்து உற்பத்திச்சாதனங்களைத்தொழிலாளி வர்க்கம் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அதை சமூக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். நாம் உடனடியாக எல்லோருக்கும் பாதுகாப்பையும் வளமையையும் உறுதிப்படுத்த பொருளாதாரத்தை மாற்றியமைப்போம்.

புரட்சி என்பது தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் புரட்சிகர சிந்தனையாளர்களின் செயல்பாடாகும். கடந்த காலகெதர் போராளிகளும் புரட்சியாளர்களும் தங்களுடைய சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தனர். அமைப்பும் கண்ணோட்டமும் கொண்ட, பெரும் திரளான மக்களை புரட்சிக்காக தட்டி எழுப்பும் கொள்கையும் திட்டமும் கொண்ட,புரட்சியை ஒடுக்கும் முதலாளி வர்க்கத்தின் திட்டங்களை முறியடிக்கக் கூடிய ஒரு கட்சி தொழிலாளி வர்க்கத்திற்குத் தேவை.

இந்திய கம்யூன்ஸ்டு கெதர் கட்சியை உறுதிப்படுத்துவது தொழிலாளி வர்க்கத்திற்கு புரட்சிகர தலைமை இருப்பதை உறுதி செய்யும் தீர்மானகரமான காரணியாக இருக்கும். இது மற்ற புரட்சிகர வர்க்கங்களையும் பல நிலைகளிலுள்ள மக்களையும் தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கி புரட்சிக்குக் கொண்டு செல்லுவதற்கு வழிவகுக்கும்.இந்தியாவின் ஆட்சியாளர்களாக மாறவும்,சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லவும் உரிய திட்டத்தையொட்டி, பெருவாரியான தொழிலாளர்களையும் உழவர்களையும் பெண்களையும் இளைஞர்களையும் நாம் அணி திரட்டுவோம்.

தோழர் பிரகாஷ் ராவ் தன்னுடைய விளக்கவுரையை முடித்தவுடன்,புரட்சியாளர் தியாகி ராம் பிரசாத் "பிஸ்மில்"எழுதிய "சர்பரோஷி கி தமன்னா.." (“புரட்சியின் விருப்பம்”)  என்ற ஒரு சக்தி வாய்ந்த பாடலைமிக உருக்கமாக பாடினார்கள். ஆங்கிலேய ஆட்சியில் தூக்கு மேடையை எதிர் கொண்ட நேரத்தில் நம் வீரத் தியாகிகளின் உதட்டில் எழுந்த இந்தப் பாடல், பல்லாண்டுகளைக் கடந்து இன்றும் புரட்சியாளர்களுக்கு உற்சாகமூட்டி வருகிறது.

அதற்குப் பிறகு உற்சாகமான விவாதங்கள் நடைபெற்றன. அதில் வந்திருந்த பலர் தங்கள் கருத்துக்களை முன்வந்து பகிர்ந்து கொண்டனர்.

எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பெரும் செல்வந்தர்களான சுரண்டும் சிறுபான்மையினருக்கு மட்டுமே இந்த அமைப்பு சேவை செய்கிறது என்பதைப்பல எடுத்துக்காட்டுகள் மூலம் பேச்சாளர்கள் வலுப்படுத்தினர். சமுதாயத்தில் பெரும்பான்மையினராக இருக்கும்தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் எல்லா உழைக்கும் மக்களுக்கும், தேர்தலில் தங்கள் வேட்பாளராக யார் நிற்பது என்பதைத் தீர்மானிக்கவோ, தேர்ந்தெடுத்த பிரதிநிதி தங்களுடைய ஆணையை மீறினால் அவர்களைத் திரும்பி அழைக்கவோ, சட்டத்தை முன்வைக்கவோ, தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தங்கள் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துமாறு நிர்பந்தப்படுத்தவோஉரிமைகளோ, வழிமுறைகளோ இல்லை. அரசு திட்டமிட்டு நடத்தும் குறுங்குழுவாத வன்முறைகளுக்கும்,அரசு பயங்கரத்திற்கும் அதிகாரத்தில் உள்ளவர்களைத் தண்டிக்க உரிமையோ வழிமுறையோ மக்களுக்கு கிடையாது. தண்டிக்கப்படுவோமென்ற அச்சமின்றி இக் குற்றங்களை இழைப்பவர்கள் ஆட்சி அதிகாரத்திற்குக்கூட தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இன்றுள்ள அரசியல் சட்டம்,எப்படி இந்தக் கொடூரமான சுரண்டும், ஒடுக்கு முறையான அமைப்பிற்கு சட்ட நியாயத்தைக் கொடுக்கிறது என்று பேச்சாளர்கள் விளக்கினார்கள். 1915 கெதர் எழுச்சியின் படிப்பினைகளால் ஆர்வமூட்டப்பட்ட அவர்கள், வேலை செய்யும் இடங்களிலும் வசிக்கும் இடங்களிலும்அணிதிரட்ட வேண்டிய அவசியத்தையும், ஆளும் வர்க்கத்தினரின் கொடூரமான திட்டங்களைத் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாக்கி எதிர்க்க வேண்டியதையும், உழைக்கும் மக்களே மன்னர்களாக இருக்கும் ஒரு புதிய இந்தியாவிற்காகஇயக்கத்தை முன்னுக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தையும் சுட்டிக் காட்டினர்.

மக்கள் குரல் வெளியிட்டாளர் மற்றும் வினியோகிப்பாளர்கள்சார்பில் பிஜ்ஜு நாயக் கலந்துரையாடல் விவாதங்களின்சாராம்சத்தைச் சுருக்கிக் கூறினார். இந்தப் போராட்டம் தொழிலாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையே நடைபெறுகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். ஒரு சிறுபான்மையினர் மேலும் மேலும் செல்வந்தர்களாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் தொழிலாளர்களும் உழவர்களும் மேலும் வறுமையில் மூழ்கிவருகின்றனர். தொழிலாளர்களும் உழவர்களும் ஒன்றுபடாமலிருக்க வேண்டும் என்று முதலாளி வர்க்கம் விரும்புகிறது, அதை உறுதி செய்ய அது பல கோடி ரூபாய்களை செலவழித்து வருகிறது.

ஆனால், நம் தொழிலாளர்களும் உழவர்களும் மாவீரர்களாக இருந்ததை,நமது வரலாறு காட்டுகிறது.வரும் காலங்களிலும் அவர்கள் ஒரு வலிமையானசக்தியாக மாறுவார்கள். முடிவாக, கெதர் புரட்சியாளர்களின் அறைகூவலை முன்னெடுத்துச் சென்று அவர்கள் கனவு கண்ட, தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்த, புதிய இந்தியாவிற்காகப் போராட முன்வருமாறு இளைஞர்களுக்கும் அங்கிருந்த அனைவருக்கும், பிஜ்ஜு நாயக் எழுச்சிமிக்க அழைப்பு விடுத்தார். 

Pin It