தந்தை பெரியார் அறிவித்த இறுதிப் போராட்ட மான கருவறை நுழைவுப் போராட்டத்தை டிசம்பர் 24-12-2012இல் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடத்துவதென கழகம் அறிவித்துள்ளது. போராட்டத்தைப் பல்வேறு மாவட்டங்களில் சுவரெழுத்து மூலம் கழகத் தோழர்கள் சிறப்பான முறையில் விளம்பரம் செய்துள்ளனர்.  மேலும் போராட்ட விளக்கப் பொதுக் கூட்டங்களும் நடைபெற்றுக் கொண்டு வருகின்ற நிலையில் போராட்டம் நடைபெறும் சென்னையில் கழகத் தோழர்கள் சுவரெழுத்து மூலம் நல்ல வண்ணம் விளம்பரப்படுத்தி உள்ளனர். அத்தோடு, கருவறை நுழைவுப் போராட்டத்தை விளக்கி வரிசையாக தொடர் தெருமுனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து  போராட்டக் களம் நோக்கி வேகமாக நகர்கிறது சென்னை மாவட்டம்.  டிசம்பர் 4ஆம் தேதி ராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் சிலை அருகில் தொடங்கி தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற உள்ளது.  5ஆம் தேதி டாக்டர் நடேசன் சாலை, லாயிட்ஸ் ரோடு சந்திப்பு, 11 ஆம் தேதி திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் இருசப்பர் தெரு, 12ஆம் தேதி மயிலாப்பூர் கேனால் ரோடு, சாயி பாபா கோவில் அருகில், 13ஆம் தேதி மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெறுகிறது.  இதில் சீனி, விடுதலை அரசு, வழக்கறிஞர் இளங் கோவன், சு.குமாரதேவன், ப.அமர்நாத், கா.சு.நாக ராசன், கரு.அண்ணாமலை, ஏ.கேசவன், டிங்கர் குமரன், க.சு. கவிதா, பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.

போராட்டத்தில் கலந்துகொள்வோருக்கு தங்கும் வசதி

போராட்டத்தில் கலந்துகொள்வோர் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.  முகவரி முருகேசன் திருமண மண்டபம், அவ்வை சண்முகம் சாலை, இலாயிட்சு சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014.  தொடர்புக்கு: டிங்கர் குமரன்

Comments

1 comment

1
Raja Narasima Vivek
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள், ஆண்டான் அடிமை வம்சத்திற்க்கு முடிவு கட்டப்படவேண்டும். புதிய சிந்த்தனை அந்த சமூகத்திற்க்கும் வரவேண்டும். மனிதவர்க்கத்தில் பிறப்பால் ஏற்ற , தாழ்வு இல்லை + நிறத்தால் , செய்யும் தொழிலால் ஏற்ற, தாழ்வு இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். ராஜா நரசிம்மா விவேக் தஞ்சை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.