கேள்வி :         காமன்வெல்த் நாடுகள் சபையின் நோக்கம் என்ன?

பதில் :               காமன்வெல்த் நாடுகள் சபையின் நோக்கம் உலக அமைதி, சனநாயக முறைப்படி மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தல், தனி மனித உரிமை மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் பேணிக் காத்தல்.

கேள்வி :         காமன்வெல்த் நாடுகள் சபையிலிருந்து எந்தெந்த நாடுகள் நீக்கப்பட்டன?

பதில் :               காமன்வெல்த் நாடுகள் சபையிலிருந்து நைஜீரியா, பாகிஸ்தான், ஜிம்பாவே, பீஜீ ஆகிய நாடுகள் நீக்கப்பட்டன.

கேள்வி :         எதற்காக நீக்கப்பட்டன?

பதில் :               காமன்வெல்த் நாடுகள் சபையின் நோக்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் நீக்கப்பட்ன.

கேள்வி :         2009 ஆம் ஆண்டு இலங்கையில் சொந்த நாட்டு மக்கள் மீது முப்படைகளும் சேர்ந்து ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது. இச்செயல் காமன்வெல்த் நாடுகள் சபையின் நோக்கத்திற்கு எதிரானது இல்லையா?

பதில் :               எதிரானதுதான். ஆனால், இலங்கை நாட்டை காமன்வெல்த் நாடுகள் அமைப்பிலிருந்து நீக்காமலே பாதுகாப்பது இந்தியாதான். அதோடு காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்தி கொலைக்கார இராஜபக்சேவுக்கு மகுடம் சூட்டி, அவனை கொலை குற்றத்திலிருந்து தப்பிக்க முயல்வது இந்தியாதான்.

கேள்வி :         காமன்வெல்த் நாடுகள் சபையில் அங்கும் வகிக்கும் 54 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அப்படியிருக்க இந்தியா எப்படி காமன்வெல்த் நாடுகள் சபையை இலங்கைக்கு ஆதரவாக செயல்படுத்த முடியும்?

பதில் :               நல்ல கேள்வி. அய்.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் செயல்படுவது போல், காமன்வெல்த் நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக செயல்படுவது கமலேஷ் சர்மா என்பவர். இவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர். எனவேதான், காமன்வெல்த் நாடுகளின் சபை இந்திய நாட்டின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகிறது.

கேள்வி :         கமலேஷ் சர்மா யார்?

பதில் :               இவர், இந்திய நாட்டின் உயர் அதிகாரி அய்.எப்.எஸ்., (இந்திய அயல்துறை அலுவலர்) பட்டம் பெற்றவர். ஒரு ஆரியர். 1965 ஆம் ஆண்டு இந்திய அரசுப்பணியில் சேர்ந்து 2001 ஆம் ஆண்டு தமது 60 ஆவது வயதில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற உடனேயே இந்திய நாட்டின் தூதுவராக இங்கிலாந்து நாட்டில் நியமிக்கப்பட்டார். பின்னர் 2008 ஆம் ஆண்டு காமன்வெல்த் நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக 4 ஆண்டுகக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் மீண்டும் 4 ஆண்டுகளுக்கு பதவி நீடிப்பு பெற்றார். இவர் 2016 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார். 2001 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாலும் மேலும் 15 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகுத்த இந்திய அரசுக்கு குறிப்பாக காங்கிரசு அரசுக்கு நன்றிக் கடனாற்றுகிறார்.

                 காமன்வெல்த் நாடுகள் சபையின் நோக்கத்திற்கு எதிராக செயல்பட்ட இலங்கையை சபையிலிருந்து நீக்காமல் பாதுகாப்பதும் இவரே. காமன்வெல்த் நாடுகள் மாநாட்டை இலங்கையில் நடத்தி கொலைகார இராஜபக்சேவுக்கு மகுடம் சூட்டி, அவரை கொலை குற்றத்திலிருந்து தப்பிக்க வைக்க முயல்வதும் இவரே.

கேள்வி :         காமன்வெல்த் நாடுகள் மாநாட்டை பற்றி தமிழர்களின் நிலைப்பாடு என்ன?

பதில் :               காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறக்கூடாது. அப்படி நடைபெற்றால் இந்தியா அதில் பங்கேற்கக்கூடாது என்பது தமிழர்களின் நிலைப்பாடாகும். தமிழீழ மக்களுக்கு எதிராகச் செய்த போர்க் குற்றங்கள் மற்றும் மானுட விரோதக் குற்றங்கள் குறித்து தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு நடத்தி இராசபக்சேவுக்கு உரிய தண்டனை வழங்கிட வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பமாகும்.

Pin It