பிறசொல் - தமிழ்ச்சொல்

இரசாபாசம் - சுவைக்கேடு

இரசிகர் - சுவைஞர்

இரசிகன் - சுவைஞன்

கிரகித்தல் - சுவைத்தல்

இரட்சித்தல் - மீட்டல்

இரணவைத்தியம் - அசுர மருத்துவம்,

அறுவை மருத்துவம்

இரத்தம் - அரத்தம், குருதி

இரத்தமானியம் - உதிரப்பட்டி

இரத்தினம் - மணி, ஒளிக்கல்

இரதகசதுரகபதாதி - கரி பரி தேர் காலாட்படை

இரம்பம் - அரம்பம்

இராகம் - பண், விருப்பு

இராசதம் - மாந்திகம்

இராசி - ஓரை

இராச்சியம் - அரையம்

இராஜா - அரசன்

இராணுவம் - படை, பொருநம்

இருசால் - செலுத்தம்

இருடி - முனி, முனிவன்

இருதயம், இதயம் - நெஞ்சாங்குலை, நெஞ்சம்

இருது, ருது - பெரும்பொழுது

இருது மங்களஸ்நானம் - பூப்பு நீராட்டல்

இருது சாந்தி - கூடல் மணம்

இரேகை - வரி

இலகான் - கடிவாளம்

இலக்கினம் - ஓரை

இலக்குமி - திருமகள்

இலங்கோடு - தாழ்சீலை

இலஞ்சம் - கையூட்டு

இலட்சணம் - அழகு, இலக்கணம்

இலட்சியம் - இலக்கு, குறிக்கோள்

இலயம், லயம் - ஒன்றிப்பு

இலவுகிதம் - உலகியல்

இலாகா - திணைக்களம், துறை

இலாகிரி - மது

இலாடம் - குளம்பாணி

இலாபம் - ஊதியம்

இலாப நஷ்டம் - ஊதிய இழப்பு

இலாயம் - மந்திரம்

இலாவதேவி - கொடுக்கல் வாங்கல்

இலிங்கம் - குறி, இலங்கம்

இலேகியம் - மெழுகு, நக்கம்

இலேசம் - மறைப்பு

இலேசு - எளிது

 

ஆங்கிலம் - தமிழ்

Barter - பண்டமாற்று

Base - அடி, அடிமட்டம், கீழான,

கயமைப்பட்ட

Basic - அடிப்படை(யான)

Basketball - கூடைப்பந்து

Bastard - வைப்பு மகன், விலைமகள் பிள்ளை

Bat - மட்டை

Battle ship - போர்க்கப்பல்

Bazaar - கடைத்தெரு, கூலமருகு

Beach - கடற்கரை

Belong - உரிமைப்பாடு, உரியதாகு

Bench - அறுகாலி, விசி

Benedictory - வாழ்த்து

Benevolent - அறநெஞ்சமுள்ள, ஈகைத்தன்மையுள்ள

Best - தலைசிறந்த

Bill - பட்டி, விலைப்பட்டி, வரைநெறி

Bill of entry - பதிவுப்பட்டி

Bill of exchange - பரிமாற்றப்பட்டி

Biography - வாழ்க்கை வரலாறு

Bishop - மேற்காணியார்

Black Marketing - கள்ள வணிகம்

Blotting Paper - மையொற்றி

Boarding School - விடுதிப் பள்ளி, உண்டுறைப் பள்ளி

Body - உடல்

Body of the letter - செய்தி

Bombaud - குண்டுமுகில்

Bonus - நன்னர், பூரிப்புத்தொகை

Book - பொத்தகம்

Book keeping - கணக்கு வைப்பு

Book post - பொத்தக அஞ்சல்

Botany - பயிர்நூல்

Bracket - பிறைக்கோடு, தண்டியக் கட்டை

Branch Office - கிளை அலுவலகம்

Bravity - சுருக்கம்

Bribe - கையூட்டு

Broadcast - ஒலிபரப்பு

Brother - உடன்பிறந்தான்

Brush - தூரிகை

Bungalow - வளமனை

Bureaucracy - அலுவலராட்சி

Bus - பொதுவியங்கி, பேருந்து

 

(மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தம் நூல்கள், கட்டுரைகள் பலவற்றிலும் தமிழிற் கலந்திருக்கும் பல திறப்பட்ட அயற்சொற்களை எடுத்துக்காட்டி, அவற்றிற்கான தமிழ்ச் சொற்களைத் தந்துள்ளார். அவற்றை ஓரளவிற்கு அகரவரிசைப் படுத்தியுள்ளோம்.)

 

Pin It