இரண்டு வாரங்களாக வகுப்பு பதட்டத்திலிருந்த ஹைதராபாத் நகரம் கடந்த 16ம் தேதி வெள்ளிக்கிழமை வன்முறையை சந்தித்திருக்கிறது.

சார்மினாருக்கு அருகில் அமைந்துள்ள பாக்கிய லஷ்மி கோவிலை சட்ட விரோதமாக விரிவுபடுத்த இந் துத்துவா சக்திகள் முயற்சிக்க... அதற்கு முஸ்லிம் கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இரண்டு வாரங்களாகவே முடிவுக்கு வராமல் தொடரும் இந்த சர்ச்சையில் ஹைதராபாத் பழைய நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கி றது.

வெள்ளிக்கிழமை ஒரு கும்பல் கல்வீச் சில் ஈடுபட்டதால் 7 பேர்வரை கடுமையாக காயமடைந்துள்ளனர். பல வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. போலீசார் தடியடி நடத்தி வன்முறை கும்பலை கலைத்த போதும் எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பப்படும் வதந்தியால் எங்கே, எப்போது வன்முறை வெடிக்கும் என்கிற பீதியில் நகரம் முழுக்க பரவியிருக்கிறது.

பாக்கிய லஷ்மி கோவிலில் திரளும் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை எடுக் காத காவல்துறை, சார்மினாருக்கு அரு கில் இருக்கும் புகழ் பெற்ற மக்கா மஸ்ஜித் திற்கு தொழுகைக்காக வரும் மக் களை தொல்லைப்படுத்துகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ சிறப்பு தொழுகைக்காக மக்கா மஸ்ஜித்திற்கு வருகை தந்த முஸ்லிம்கள் தொழுகைக்குப் பின்னர் காவல்துறைக்கு எதிராக கோஷமிட்ட படியே சார்மினாரை நோக்கி புறப்பட் டனர். காவல்துறை விதித்திருக்கிற கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என அவர்கள் குரலெழுப்பினர். அவர் களை சார்மினாரை நோக்கி தொடர் ந்து முன்னேற விடாமல் காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதனால் முஸ் லிம்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் சிறிய மோதல் நிகழ்ந்தது.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கி றது என்று ஹைதராபாத் சிட்டி காவல் துறை கூறினாலும், கூடுதல் பாதுகாப்பு படைப் பிரிவுகள் வரவழைக்கப்பட்டு சார் மினாரை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

சார்மினார் பகுதியை பார்வையிட்ட ஆந்திரப் பிரதேச உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி, அமைதியை நிலை நாட்ட ஒத்துழைப்பு தரும்படி பொது மக் களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கடந்த நவம்பர் 5ம் தேதி, பாக்கிய லஷ்மி கோவில் தொடர்பாக தீர்ப்பளித்தி ருந்த ஆந்திர உயர் நீதிமன்றம், அக்டோபர் 30, 2012க்கு முன் இருந்த நிலையே பாக்கிய லஷ்மி கோவில் விஷயத்தில் நீடிக்க வேண்டும். எவ்வித விரிவாக்கப் பணிகளும் அங்கு மேற்கொள்ளப்படக் கூடாது என்று "ஸ்டேடஸ் கோ' உத்தரவை வழங்கியிருந்தது. இந்த உத்தரவை அமல் படுத்துமாறு ஆந்திர அரசுக்கும் அது அறி வுறுத்தி இருந்தது.

ஆயினும், கடந்த 11ம் தேதி கோர்ட் உத்தரவை மீறி பாக்கிய லஷ்மி கோவில் நிர்வாகத்தினர் கோவிலை சுற்றி பந்தல் அமைத்ததோடு, ஆர்த்தி பூஜை என்ற பெயரில் பக்தர்களைத் திரட்டி விரிவாக் கப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக் கையில் இறங்கியதைத் தொடர்ந்து முஸ் லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி சார்மினாரை முற்றுகையிடப் புறப்பட்டனர். அவர்க ளைத் தடுத்து நிறுத்தியது காவல்துறை. இதனால் 11ம் தேதி இரவு முழுவதும் நகரில் டென்ஷன் பரவியது.

கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண் டிய காவல்துறை இந்துத்துவாவினருக்கு ஆதரவாக நடந்து கொண்டு கோவிலில் பந்தல் அமைக்க உஉவி செய்தனர் என குற்றம் சுமத்துகிறது மஜ்லிஸ் (எம்.ஐ.எம்) கட்சி.

காவல்துறையும், அரசாங்கமும் இந் துத்துவாவினருக்கு ஆதரவாக நடந்து கொள்வதைக் கண்டித்து, ஆந்திரப் பிர தேச ஆளும் காங்கிரசின் முக்கிய கூட்ட ணிக் கட்சியான மஜ்லிஸ் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கி றது. மஜ்லிஸ் கட்சியின் விலகலைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் அசாத்துதீன் உவைசியிடம் தொடர் ந்து காங்கிரஸ் தலைவர்கள் பேசி வந்தபோதும் தனது நிலையில் உறுதி யாக இருக்கிறார் உவைசி.

வன்முறைக்கும், வகுப்புப் பதட் டத்திற்கும் வழி வகுக்கும் பாக்கிய லஷ்மி கோவில் விரிவாக்கத்தை முழுயைமாக தடுத்து, அமைதியான சூழலை உருவாக்குவதற்கு மாறாக, அயோத்தி பிரச்சினையைப் போலவே சார்மினார் பிரச்சினையை யும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத் திக் கொண்டிருக்கின்றன ஆந்திர அரசி யல் கட்சிகள்.

ஹைதராபாத் இந்துக்களின் ஆதர வைப் பெற இந்து வாஹினி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை சார்மினார் விஷயத்தில் களமிறக்கி பாக்கிய லஷ்மி கோவில் விவகாரத்தை பெரிய சர்ச்சை யாக ஆக்கிக் கொண்டிருக்கிறது பாஜக.

துவக்கத்தில் ஹைதராபாத் பழைய நகரிலுள்ள முஸ்லிம்களுக்கும், பாக்கிய லஷ்மி கோவில் நிர்வாகத்திற்குமிடையே எழுந்த இந்தப் பிரச்சினையில் இப்போது அதிகபட்ச அக்கறை காட்டும் பாஜக, வன் முறைச் சக்திகளான இந்துத்துவாவினரை இப்பிரச்சினையில் களமிறக்கி இதனை வகுப்பு மோதலாக்கும் முயற்சியில் ஈடு பட்டு வருகிறது என்கின்றனர் சமூக ஆர் வலர்கள்.

ஹைதராபாத் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கிமிடையில் இணக்க மான உறவு இருக்கிறது. இரு சமூகமும் இன்று வரை மனித நேயத்தோடும், சகோதரத் துவ வாஞ்சையோடும் பழகி வருகிறோம் என்பதாக கருத்துரைக்கின்றனர் ஹைதரா பாத்வாசிகள்.

இந்த சகோதரத்துவ உணர்வுகளுக்கு வேட்டு வைக்கும் முயற்சியில் இந்துத் துவா சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. ஹைதராபாத் நகரில் வகுப்பு கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில்தான், வகுப்புப் பதட்டம் எந்த வடிவிலும் உருவாகக் கூடாது என்பதில் அதிகபட்ச அக்கறை காட்டிய - ஹைதராபாத்தின் ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்த கமிஷ்னர் ஏ.கே. கானை பணி மாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்து வந்தனர் இந்துத்துவாவினர்.

கான் மீது தொடர்ந்து விமர்சனங்களை யும், குற்றச்சாட்டுகளையும் கூறி வந்தனர். இந்துத்துவாவிற்கு மறைமுக ஆதரவளிக் கும் காங்கிரஸ் கட்சியின் கிரண் குமார் ரெட்டி அரசு ஏ.கே. கானை போக்குவரத்து கழகத்திற்கு பணி மாற்றம் செய்தது.

“ஹைதராபாத் மக்கள் அமைதியை விரும்பக் கூடியவர்கள். நகரில் அமைதி நிலவ வேண்டும்...” என்று பணி மாற்ற லாகி செல்லும்போது செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் ஏ.கே. கான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை ஹைதராபாத் தில் ஏற்பட்ட வன்முறைச் சூழலைத் தொடர்ந்து, பதட்டத்திற்கு இடையே தமது வீடுகளுக்குத் திரும்பினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள். இதில் உணர்வுப்பூர்வமான விஷயமாக அரங்கேறியது... முஸ்லிம் மாணவ, மாணவிகள் தங்களின் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த இந்து நண்பர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கும், இந்து மாணவ, மாணவிகள் தங்களின் சகோதர சமுதாயமான முஸ்லிம் நண்பர்கள் பாது காப்பாக வீடு திரும்புவதற்கும் ஒருவருக் கொருவர் உதவிக் கொண்ட காட்சி அலாதி யானது.

அதே சமயம், இக்காட்சி ஹைதராபாத் வாசிகளுக்கு புதிதல்ல. கங்கை, யமுனை பண்பாடுகள், மத சகிப்புத் தன்மை, சகோத ரத்துவம் கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க நகரம்தான் ஹைதராபாத். ஹைதராபாத் திற்கே உரிய இந்த அழகியலை கெடுக்கும் இந்துத்துவா சக்திகளையும், அரசியல்வா திகளையும் எதைக் கொண்டு அடிப்பது?

சார்மினார் வரலாற்றுச் சின்னம் மட்டுமல்ல அது பள்ளிவாசல்!

ஹைதராபாத் பழைய நகரில் அமைந்துள்ள சார்மினார் உலகப் புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னம் என்பதாகத் தான் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சார்மினார் வரலாற் றுச் சின்னம் மட்டுமல்ல... அது ஒரு வரலாற் றுச் சிறப்புமிக்க பள்ளிவாசல் என்பதை அதி கமானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சார்மினார் என்பது பார்சி மற் றும் அரபு கலந்த வார்த்தை. "சார்' என்றால் நான்கு, "மினார்' என்பது கோபுரங்களைக் குறிக்கும் வார் த்தை. அரபியில் கோபுரத்திற்கு மனாரா என்று அர்த்தம். நான்கு மினாராக்களைக் கொண்டது என்ற பொருளில் சார்மினார் என்று இது அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இது ஒரு பள்ளி வாசல். அதன் உட்புறம் தொழு கைக்கான வசதிகளுடன் அமைந் திருப்பதை காணலாம். சார்மினார் வளாகத்திற்குள் தர்கா ஒன்றும் அமைந்திருக்கிறது.

ஹைதராபாத்தின் அடையாள மாக கம்பீரமாக நின்று கொண்டி ருக்கும் சார்மினார் கி.பி. 1590களில் ஹைதராபாத்தை ஆட்சி செய்த சுல்தான் முஹம்மது குலி குதுப்ஷா கட்டியதுதான் சார்மினார். வரலாற்று சிறப்புமிக்க முக்கியத்துவத்தை சார்மினார் தன் னகத்தே கொண் டிருக்கிறது.

1591ம் ஆண்டு சுல்தான் முஹம்மது குலி குதுப்ஷா தனது தலைநகரத்தை கோல்கொண்டாவிலிருந்து ஹைதராபாத் திற்கு மாற்றிய குறுகிய காலத்திற்குள் சார்மினாரைக் கட்டத் தொடங்கினார்.

அக்காலகட்டத்தில் ஹைதராபாத் ப்ளேக் நோயால் கடுமை யான பாதிப்புக்குள்ளானது. ப்ளேக் என்னும் கொள்ளை நோய் ஹைதராபாத்தை விட்டு விடைபெற்றுச் சென்றதன் நினைவா கவே சார்மினாரை சுல்தான் குதுப்ஷா கட்டியிருக்கிறார்.

ஹைதராபாத்தை புரட்டிப் போட்ட ப்ளேக் நோய் நீங்கி விட இறைவனிடம் பிரார்த்தனை செய்தார் சுல்தான் குதுப்ஷா. அவர் எந்த இடத்தில் நின்று பிரார்த் தனை செய்தாரோ அதே இடத்தில் மஸ்ஜித் ஒன்றை கட்டுவேன் என் றும் உறுதி பூண்டார்.

இதன்படி 1591ல் ப்ளேக் நோய் நீங்கிய பின் சார்மினாருக்கான அடிக்கல் நாட்டினார். அப்போது, “இறைவா! இந்த நகரத்திற்கு அமைதியையும், அபிவிருத்தியை யும் தருவாயாக!” என்று பிரார்த் தனை செய்தார் சுல்தான் குதுப்ஷா.

பிற்காலத்தில் லட்சக்கணக் கான மக்கள் சாதி, இனம், மதம் கடந்து ஹைதராபாத்தை தங்களின் உறைவிடமாக ஆக்கிக் கொண்டனர் மீன்கள் தண்ணீரில் தங்களின் உறைவிடத்தை தேடுவது போல!

சார்மினார் இருக்கும் ஹைதராபாத் பழைய நகரைப் பார்ப்பவர்கள் பிரார்த்தனைக்கு பதில் அளிக்கப்பட்ட ஆதாரமா கவே ஹைதராபாத் நகரம் இருப்பதை உணர முடியும். இப்பகுதி ஹைடெக் சிட்டியாக சர்வதேச அளவில் அடையா ளப்படுத்தப்படுவதும், முத்துமாலைகளுக்கு புகழ்பெற்ற நகரமாகவும், வணிக தரம் மிகுந்த வள மான நகரமாகவும் மிளிர்வதை இன்றும் காண முடிகிறது.

உயர்ந்த எண்ணங்களுடன் மக்க ளின் அமைதியான வாழ்வை மையப்ப டுத்தி இறைவனை பிரார்த்தித்து தொடர்ந்து அவனை வணங்குவதற்காக சுல்தான் குதூப் ஷாவினால் கட்டப்பட்ட மஸ்ஜித்தான் இன்று சார்மினார் என்று அழைக்கப்படுகிறது.

சார்மினார் என்கிற நான்கு கோபுரங்க ளும், இஸ்லாத்தின் முதல் நான்கு கலி பாக்களான அபு பக்கர், உமர், உஸ்மான், அலி (ரலி) ஆகியோரை மரியாதை செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக் கிறது என்கிறது சார்மினார் வரலாறு.

அழகு ததும்பும் இந்த சார்மினார் கிரானைட், எலுமிச்சை சாறு, சுண்ணாம் புக் கலவை, பொடியாக்கப்பட்ட மார்பிள் தூள் உள்ளிட்டவைகளால் கட்டப்பட் டுள்ளது.

நான்கு புறமும் 20 மீட்டர் இடைவெளி யுடனும் அதன் முடிவில் நீண்ட உயர்ந்த கோபுரமும் நேர்த்தியாக அமைக்கப்பட்டி ருக்கிறது. கோபுரங்களைச் சுற்றி மிக நுட்பமாக செதுக்கப்பட்ட வளையம் போன்ற அமைப்பு இதன் அழகை மெரு கேற்றுகிறது.

இதில் அமைக்கப்பட்டுள்ள கோபுரங் களின் உயரம் தரையிலிருந்து 48.7 மீட் டர் அளவுக்கு நீண்டு, இதன் சுற்றுப்புறத் தில் பல மைல்களுக்கு அப்பாலிருந்தும் காட்சியளிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

ஒரு காலத்தில் நகரின் இதயப் பகுதி யாக விளங்கியது சார்மினார். இதன் ஒவ்வொரு கோபுரமும் வரலாற்று பின் னணி கொண்டது என்று கூறப்படுகிறது.

இப்படி வரலாற்றுச் சான்றுகளுடன் திகழும் மஸ்ஜித்தான சார்மினாருக்கு அருகில் சில வருடங்களுக்கு முன் கட் டப்பட்டதுதான் பாக்கிய லஷ்மி கோவில்.

ஹைதராபாத்வாசிகளுக்கேயுரிய அமைதியான சுபாவம், சகிப்புத்தன்மை, சகோதர வாஞ்சையின் காரணமாகவே பாக்கிய லஷ்மி கோவில் கட்டப்பட்ட காலத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பு காட்டா மல் இருந்தனர். ஆனால் அப்போது அவர் களுக்கு தெரிந்திருக்காது பிற்காலத்தில் வெளி மாநிலங்களிலிருந்து மதவெறி சக்திகள் ஹைதராபாத்திற்குள் நுழைந்து சார்மினாரை மையப்படுத்தி, மதக் கலவ ரங்களைத் தூண்டி ஹைதராபாத்வாசிக ளுக்கிடையிலுள்ள சமய சகிப்புத்தன் மைக்கும், சகோதரத்துவ உணர்வுகளுக் கும் வேட்டு வைப்பார்கள் என்று!

அஸாருத்தீனை களமிறக்கும் காங்கிரஸ்!

சார்மினாருக்கு அருகிலுள்ள பாக்கிய லஷ்மி கோவிலின் சட்ட விரோத விரிவாக்கத்தை கண்டு கொள் ளாமல் இருப்பதுடன், மறைமுகமாக உதவி செய்து வரும் ஆந்திர மாநில காங்கிரஸ் அரசின் மீதான தனது அதிருப் தியை வெளிப்படுத்தி, அக்கட்சியின் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறார் மஜ்லிúஸ இத்திஹாதுல் முஸ்லி மீன் கட்சியின் தலைவர் அசாத்துத்தீன் உவைசி.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வ ரும், தனிப்பட்ட செல்வாக்கு மிக்கவராக வும் திகழ்ந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி யின் மறைவுக்குப் பின் ஆந்திரப் பிரதே சத் தேர்தலில் வெற்றி பெற, காங்கிரஸ் கட்சி பெரும் சவால்களைச் சந்தித்து வரு கிற சூழலில் அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான மஜ்லிஸ், மூழ்கும் கப்பலாக உள்ள காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளி யேறியிருக்கிறது என ஆந்திர அரசியல் வல்லுனர்கள் மஜ்லிஸ் கட்சியின் வெளி யேற்றம் குறித்து கருத்து தெரிவிக்கின்ற னர்.

இந்நிலையில், ராஜசேகர ரெட்டியின் மகன் ஜகன் மோகன் ரெட்டி துவக்கியி ருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசோடு கூட் டணிக்கு மூவ் செய்து வருகிறார் உவைசி.

ராஜசேகர ரெட்டிக்கும் அசாத்துதீன் உவைசிக்குமிடையில் நெருக்கமான உறவு இருந்தது. முஸ்லிம்களின் நலனில் ராஜசேகர ரெட்டி காட்டிய அக்க றைக்காக ரெட்டி மீது உவைசிக்கு எப்போதுமே நல்லெண்ணம் இருந்துள்ளது.

காங்கிரஸ் உதறித் தள்ளியதன் மூலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இணைந்து தந்தையுடன் இருந்த அரசி யல் உறவை மகனிடமும் தொடர உவைசி முடிவு செய்திருக்கிறார்.

ஏற்கெனவே, தனது தந்தை முஸ்லிம் களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கிய 4 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட முஸ் லிம் மாணவ - மாணவிகளுக்கான ஸ்காலர்ஷிப் போன்றவற்றை தொடரு வேன் என்று உறுதியளித்திருக்கிறார் ஜகன் மோகன் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடனான மஜ்லிஸ் கட்சி யின் கூட்டணி இயற்கையான உறவாக அமையும் என்கிறார்கள் ஆந்திர அரசி யல் நோக்கர்கள்.

அசாத்துதீன் உவைசியின் இந்த அரசி யல் நகர்வு காங்கிரசுக்கு பீதியை ஏற்ப டுத்தியிருப்பதாலும், ஆந்திர முஸ்லிம் கள் மத்தியில் மஜ்லிஸ் கட்சி தனிப் பெரும் செல்வாக்குடன் திகழ்வதாலும், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மஜ்லிஸ் கட்சியின் வாக்கு வங்கியை குறி வைத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸாருத்தீனை ஹைதராபாத்தில் களமி றக்க அது முடிவு செய்துள்ளது.

அஸாருத்தீன் காங்கிரஸ் கட்சியின் முராதாபாத் தொகுதி எம்.பி.யாக இருக்கி றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது செகந்திராபாத்தில் நிற்க சீட் கேட்டிருந்தார் அஸாருத்தீன். அப்போது காங்கிரஸ் கூட்டணியிலிருந்த மஜ்லிஸ் கட்சிக்கு அந்தத் தொகுதியை காங்கிரஸ் ஒதுக்கியிருந்ததால் முஸ்லிம் பெரும் பான்மை தொகுதியான முராதாபாத் (உ.பி. மாநிலம்) தொகுதியை அவருக்கு ஒதுக்கியது காங்கிரஸ்.

ஹைதராபாத்தை சேர்ந்தவரான அஸாருத்தீனை மண்ணின் மைந்தன் என்ற கணக்கில் களமிறக்கவுள்ளது காங் கிரஸ். ஆனால் அஸாருத்தீன் மக்களோடு கலந்து பழகாத, மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்காத ஒரு ஹை புரஃபைல் அரசியல்வாதி. ஏறக்குறைய மத்திய அமைச்சர் சசி தரூரைப் போல! அதனால் ஹைதராபாத் முஸ்லிம்களின் வாக்கு களை அவரால் திரட்ட முடியாது.

அதே சமயம், மஜ்லிஸ் கட்சியைப் பொறுத்தவரை அது அரை நூற்றாண்டு அரசியல் பாரம்பரியம் கொண்ட கட்சி. அதோடு, முஸ்லிம்களின் பிரச்சினைக் காக களத்தில் நிற்கும் கட்சி இது. இதற்கு சமீபத்திய உதாரணம்தான் சார்மினார் பிரச்சினையில் இந்துத்துவாவிற்கு காங்கிரஸ் முதல்வர் கிரண்குமார் ரெட்டி மறை முக ஆதரவளிப்பதை எதிர்த்து அக்கட்சி யின் கூட்டணியிலிருந்து வெளியேறி இருப்பது!

இது தவிர, ஆந்திராவைத் தாண்டி மஹாராஷ்டிரா மாநிலம் நான்டெட் தொகு தியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்த லில் மஜ்லிஸ் கட்சி இரண்டு இடங்க ளைப் பிடித்து மஹராஷ்டிரா அரசியல் கட்சிகளின் புருவத்தை உயர வைத்து அதன் செல்வாக்கை வெளிப்படுத்தியது.

நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள மஜ்லிஸ் கட்சியின் தலைவரான அசாத்து தீன் உவைசி ஆந்திர அரசியலைத் தாண்டி தேசிய அரசியலிலும் பேசப்படுப வர். தேசிய அளவில் முஸ்லிம்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிப் பவர் என்று அறியப்படுபவர். இவரை எதிர்த்து களமிறங்கும் அஸாருத்தீனுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் என்ற ஒரு இமேஜ் மட்டும் அரசியல் களத்தில் வெற்றியைத் தேடித் தந்து விடாது. அரசியல் களம் வேறு ஆட்டக் களம் வேறு என்ற உண்மை எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது அஸாருத்தீனுக்கு புரிந்து விடும் அரசி யல் களத்தில் அவர் டக் அவுட் ஆகும் போது!

- ஹைதராபாத்திலிருந்து பெரேஸ்

Pin It