உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றங்கள் என பல்வேறு நீதிமன்றங்களின் கண்டனங்களுக்கும், அதிருப்திகளுக்கும் ஆளான முதல்வர் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் சாட்சாத் நரேந்திர மோடிதான்.

குஜராத் கலவர வழக்குகள், முஸ்லிம் இனப்படுகொலை வழக்குகள், குஜராத் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தொடர்ந்த வழக்குகள், போலி என்கவுண்ட்டர் வழக்குகள் என அத்தனை வழக்குகளிலும் மோடிக்கு குட்டு வைத்தன நீதிமன்றங்கள்.

இந்த வரிசையில் கடந்த 8ம் தேதி மோடி அரசாங்கத்தை கடும் விமர்சனம் செய்திருக்கிறது குஜராத் உயர் நீதிமன்றம்.

2002 கோத்ரா கலவரத்திற்குப் பின் குஜராத் மாநிலம் முழுவதிலும் நிகழ்ந்த முஸ்லிம் இனப்படுகொலை மற்றும் கலவரத்தின் போது அழிக்கப்பட்ட - தகர்க்கப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களை புணர் நிர்மானம் செய்யவோ, சீரமைக்கவோ, உரிய இழப் பீட்டை வழங்கவோ மோடி அரசு முன் வர வில்லை. 

மோடி அரசின் அலட்சியப் போக்கையும், முஸ்லிம் விரோத நடவடிக்கையையும் எதிர்த்து குஜராத் இஸ்லாமிய உதவிக் குழு (ISLAMIC RELIEF COMMITTEE OF GUJARAT - IRCG) என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2003ம் ஆண்டு பொது நல மனு ஒன்றை குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவில், “குஜராத் கலவரத்தின் போது சேதப்படுத்தப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உத்தர விட வேண்டும். தேசிய மனித உரிமை கமிஷன் ஏற்கெனவே இந்த இழப்பீடு குறித்து குஜராத் அரசுக்கு வலுவாக பரிந்துரை செய் திருக்கிறது. மாநில அரசும் இதனை கொள் கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது...'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையில்தான் கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்றம்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (ஆக்டிங்) பாஸ்கர் பட்டாச்சார்யா, நீதிபதி ஜே.பி. பரித் வாலா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பில்,

“கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து வெடித்த கலவரத்தில் மாநிலம் முழுவதிலும் மத வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டதற்கும், முற்றிலுமாக அழிக்கப்பட்டதற்கும் மோடி அரசின் செயற் பாடின்மைûயும், அலட்சியமுமே காரணம். மோடி தலைமையிலான குஜராத் அரசு மத வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கத் தவறி விட்டது. தகர்க்கப்பட்ட வழிபாட்டுத் தலங் களை சீரமைப்பதும், அதற்குரிய இழப்பீடு வழங்குவதும் மாநில அரசின் பொறுப்பு...'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த விசாரணையின்போது வாதிட்ட அரசு வழக்கறிஞர், “மத ஸ்தாபனங்களுக்கு இழப்பீடு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது...'' என்ற வாதத்தை முன் வைத்த போது அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதிகள், “கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள், வியாபார ஸ்தலங்களுக்கு மாநில அரசால் இழப்பீடு வழங்கப்பட்டிருக் கும்போது, மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மத வழிபாட்டுத் தலங்கள் முற்றிலுமாக அழிக்கப் பட்டிருந்தா லும் அல்லது அதில் ஒரு பகுதி சேதமடைந்தி ருந்தாலும் அவை மீண்டும் கட்டித் தரப்பட வேண்டும்...'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்தத் தீர்ப்பை வாசிக்கும்போது, “கலவ ரத்தை கட்டுப்படுத்த அரசு தவறியது ஏன்...?'' என்றும் குஜராத் அர சுக்கு கேள்வியெழுப்பிய நீதிபதிகள், “படுகொலைச் சம்பவங்களின்போது அரசு காட்டிய அலட்சிய மும், பாராமுகமும்தான் கலவரத்தை தடுக்க அரசு தவறி விட்டது என்பதை தெளிவுபடுத் துகிறது...'' என்றும் குஜராத் அரசின் (மோடி யின்) நெற்றிப் பொட்டில் அறைந்திருக்கி றணுர் கள்.

அதோடு, மாநிலத்தின் 26 மாவட்டங்க ளைச் சேர்ந்த மாவட்ட முதன்மை நீதிபதி கள், தங்கள் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட் பட்ட பகுதிகளிலிருந்து இழப்பீடு கோரும் விண்ணப்பங்களைப் பெற்று அதன் மீது இழப்பீடு வழங்குவது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆறு மாத காலத்திற்குள் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.

குஜராத் கலவரத்தின்போது மாநிலம் முழு வதும் சுமார் 595 முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் இருக்கிறது என்ற பட் டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார் இஸ்லாமிய உதவிக் குழுவின் சார்பில் பொது நல வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் யூசுஃப் மச்ஹாலா.

சிறுபான்மை விரோதத்தின் காரணமா கவே மோடி அரசு சேதமடைந்த அல்லது அழிக்கப்பட்ட மத வழிபாட்டுத் தலங்க ளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வில்லை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் அப்படி சேதம டைந்த பள்ளிவாசல்கள், தர்காக்களை மீண் டும் புணர் நிர்மானம் செய்தால் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் - அதன் தொண்டர்களின் அதிருப்தியை பெற வேண்டி வரும்.

இதனால் பிரதமர் கனவு உள்ளிட்ட தனது அரசியல் வாழ்க்கை பாதிக்கும் என கணக்கு போட்ட நரேந்திர மோடி, கலவரத்தில் சேத மடைந்த குடியிருப்புகள், வியாபார ஸ்தலங் களுக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகையை வழங்கி விட்டு, மத வழிபாட்டுத் தலங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்.

அதனால்தான், “மத வழிபாட்டுத் தலங்க ளுக்கு இழப்பீடு தருவது கட்டாயமில்லை. அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது...'' என சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி நீதி மன்றத்தில் சமாளித்துப் பார்த்தார் மோடி. ஆனாலும் வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கி அசத்தியிருக்கிறது குஜராத் உயர் நீதிமன்றம்.

அண்மையில் குஜராத் மக்களுக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதத்தில், “கடந்த 10 ஆண்டுகளாக நான் செய்த தவறுகளை சுட் டிக் காட்டியவர்களுக்கு எனது நன்றிகள். ஒவ் வொரு குடிமகனின் வலியும் எனக்கு ஏற் பட்ட வலியைப் போன்றது...'' என்று டயலாக் அடித்திருந்தார். இப்போது மோடியின் தவறை உயர் நீதிமன்ற நீதிபதிகளும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

குஜராத் குடிமகனின் வலி தனக்கு ஏற்பட்ட வலி என்றால் உடனடியாக சேதமடைந்த மத வழிபாட்டுத் தலங்களை போர்க் கால அடிப்படையில் புணர் நிர்மானம் செய்து கொடுக்க வேண்டும். மோடி செய்வாரா?

Pin It