குஜராத்தில் மோடியின் ஆசியுடன் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் முழுமையான நீதி கிடைக்கா விட்டாலும் புரையோடிப் போன புண்ணுக்கு சிறிது களிம்பு தடவ நீதிமன்றங்கள் முன் வந்துள்ளது சற்றே ஆறுதல் அளிக்கிறது.

அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் ஆனந்த் மாவட்டத்தில், ஒடே நகரில், மால்வா பாகோல் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த காதர் வோரா, ஆயிஷா வோரா, நூரி வோரா என்ற 3 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் குஜராத் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ஆர்.கே. ராகவன் தலைமையில் சி.பி.ஐ.யினர் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் 41 பேர் மீது குற்றம் சாட்டப் பட்டது. வழக்கு விசாரணையின்போது ஒருவர் மரணம் அடைந்தார். மீதி 40 பேர் மீதான வழக் கினை ஆனந்த் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஆர்.எம். சரீன் விசாரித்து வந்தார்.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 40 பேரில், 9 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தே கத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கரு திய நீதிபதி சரீன், அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.21 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

தண்டிக்கப்பட்டவர்கள் ஹரிஷ் வல்லப் பட்டேல், வசந்த் பூனம் பட்டேல், லால்பாய் மணி பட்டேல், டினூ என்றமணி பட்டேல், நிலேஷ் பட்டேல், பிரகாஷ் ஜாம்னா பட்டேல், ரிதேஷ் அரவிந்த் பட்டேல், அசோக் பட்டேல், கிரித் பட்டேல் ஆவர். மற்ற 31 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் தகுந்த ஆதாரத்துடன் நிரூ பிக்கப்படவில்லை என்று கூறி, அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

கையில் லேசாக நெருப்புப் பட்டாலே கொதித்துப் போகும் நாம், மூன்று உயிர்களை உயிரோடு கொளுத்தி, கொடும்பாவம் புரிந்த கயவர்களுக்கு ஆயுதண்டனை என்ற அற்பமான தண்டனை வழங்கும் நீதியை(?) எண்ணி, இந் தியாவின் மதசார்பின்மையை மெச்சிக்கொள்ள வேண்டியதுதான்.

ஏன் என்றால் ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனுக்கு ஒப்பாக மோடியை பற்றி உச்ச நீதிமன்றமே கருத்துக் கூறியிருந்த நிலையில், குஜராத் இனப்படுகொலைக்கும் மோடிக்கும் தொடர்பில்லை என்று விசாரணை அறிக்கை தரும் நீதிமான்கள் வாழும் நாடு நமது நாடல்லவா? வாழ்க மதசார்பின்மை.

Pin It