கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் குமரி மாவட்ட தமிழ் அமைப்புகளுடன் இணைந்து 01.01.2012 அன்று கன்னியாகுமரியில் நடத்திய திருவள்ளுவர் சிலையின் 12ஆவது ஆண்டு விழாவில் நிறைவேற்றிய தீர்மானங்கள்.

1.            குமரிக்கடலில் எழுப்பப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை எழுப்பும் திட்டத்தை முதன்முதலில் உருவாக்கியவர் விவேகானந்தர் நினைவாலயத்தை எழுப்பிய ஏக்நாத் ரானடே அவர்கள்தான். இந்த உண்மை அரசு ஆவ ணங்களில் இடம்பெற வேண்டும். இந்த உண்மை கல்லி லே செதுக்கப்பட்டு திருவள்ளுவர் பாறையில் நிறுவ வேண்டும்.

2.            உப்பங்காற்றிலே சேதமடைந்துள்ள திருவள்ளுவர் சிலை யைத் தமிழ்நாடு அரசு உடனே பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும். திருவள்ளுவர் சிலையை உப்பங் காற்றிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்றால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்போசைட் என்ற கலவை யை சிலையின் மேல் பூச வேண்டும் என்பது இச்சிலை யை எழுப்பிய டாக்டர் கணபதி ஸ்தபதியாரின் அறிவுரை. இதை அவர் வெளிநாட்டிலிருந்து வரவழைத்து அதனை அவர் பயன்படுத்தினார். அவரது அறிவுரைப்படி அன்றைய தமிழ்நாடு அரசு 2009 பிப்பிரவரி மாதம் திருவள்ளுவர் சிலையின் மீது இக்கலவையைப் பூசியது. அதன் சக்தி 2012 பிப்பிரவரி மாதம் முடிவடைகிறது. அடுத்த மாதம் இக்கலவையை சிலையின் மீது பூசவில்லை என்றால் சிலை உப்பங்காற்றில் சேதமடையும். 01.01.2012 ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் விஜயதரணி, திருவள்ளுவர் சிலையில் ஏற்பட்ட கீறல்களைப் பத்திரிகை நிருபர்களுக்குச் சுட்டிக் காட்டினார். தமிழ்நாடு அரசு இதனை உடனே கவனிக்கும்படி பணிவன்புடன் வேண்டுகிறோம். (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலையின் மேல் எப்போசைட் மற் றும் பாலிசிகான் என்ற கலவைகளைப் பூசவேண்டும்).

3.            பயணிகளின் வசதிக்காக விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் பாறையையும் இணைத்து உடனடியாகப் பாலம் போட வேண்டும்.

4.            டாக்டர் கலைஞர் எழுப்பிய திருவள்ளுவர் சிலையை இன்றைய மாநில அரசு புறக்கணிக்கிறது என்ற நிலை மாறவேண்டும். திருவள்ளுவர் சிலை ஆண்டு விழா வினை நடத்த முந்திய அரசு உதவியது போல இன் றைய அரசும் கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையத்திற்கு உதவி செய்ய வேண்டும்.

- டாக்டர் பத்மநாபன்

கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு

ஆய்வு மய்யப் பொதுச் செயலாளர்

Pin It