ஆண்டாள் செய்தியை
அடுத்தத்
தமிழ்நாட்டின்
தலைப்புச் செய்திகளில்
இன்னொன்று
தண்டச்சோற்றுத்
தடிமாடு
காஞ்சி சின்னசங்கரன்
தமிழ் வாழ்த்துப் பாடலுக்குத்
தகுமதிப்புத் தராமல்
சீமை எருது கனத்தில்
தியானத்தில் இருந்துள்ளார்
அன்று
மற்றவர்கள் அமைதியாய்
எழுந்து நிற்க
இவருக்கென்ன எகத்தாளம்?
தமிழுக்கு மதிப்பளிக்காச்
சனாதனக் கொழுப்பு - இது
தமிழினத்திற்கே நேர்ந்த
தன்மான இழுக்கு!
பெரியவாள் என்ற பெயரோடு
என்றோ பிணமாய்ப் போன
பெரியசங்கரன்
நிஷ்டையில் இருக்கையிலே
நீச பாஷையில் பேசேன் எனத்
தமிழை நித்தித்தார்
அதே கொழுப்புத்தான்
இந்தத் தேவநாதன் வகையறா
சின்ன சங்கரனுக்கும்!
செத்தமொழி இவர்களுக்குத்
‘தேவபாடை’
தேனினும் இனிய நம் செந்தமிழ்
தீண்டத்தகாதோர் ‘பீடை’
வாழை இலையில் வெளிக்குப்போகும்
வண்டவாளம் அறிந்தும்
இந்தமண்டை வீங்கிகளுக்குச்
சில இந்து மதவெறியர்களிடத்து
மதிப்புக் குறையவில்லை
பட்டிமன்றப் புகழ்
சாலமன் பாப்பையாவே
பவ்வியம் காட்டுகிறார்
அங்கவை சங்கவை
பாரி மகளிரையே
அவமானப்படுத்தியவர்
பார்ப்பன முண்டத்துக்குப்
பணிந்து தொடை நடுங்குகிறார்
இப்போது
பீடாதிபதிகள் எல்லாம்
பேட்டை ரவுடிகள் ஆய்விட்டார்கள்
சோடா புட்டிகள் பறக்கும் எனக்
கம்பு சுற்றுகிறார்கள்
பூணூல் கூட்டம் இன்று
புலிவேடம் போடும் எனில்
ஏறு தழுவுதல் கண்ட எங்கள் இனம்
எலிவளையில் ஒளியுமா?
இந்த வெட்டிப் பயல்கள்
வீரமெல்லாம் எங்கே?
தில்லைக் கோயில்
சிற்றம்பல மேடையில்
அன்னைத் தமிழில்
தேவராம் பாடிய
ஆறுமுகசாமியை இவர்கள்
அடித்துத் துவைத்தார்கள்
அவரைப் பெரியவர் என்றும் பாராமல்
பெருந்தாக்குதல் தொடுத்தது
சிண்டு முடிந்த இந்த
தீட்சதப் பார்ப்பனக் கூட்டம்
செத்தமொழிக்கு
மக்கள் வரிப்பணத்தில்
செலவிட்டு மகிழ்வார்
மோடி!
இவர் இந்திக்கும் வடமொழிக்கும்
ஏவல் செய்யும் இந்திவெறிபிடித்த
இளந்தாடி!
தமிழ் உய7ர்தனிச் செம்மொழி
என்பதெல்லாம்
ஒருபுறம் இருக்கட்டும்
முதலில் அது
ஏழுகோடித் தமிழர்களின்
இதயத்தில் வாழும் மொழி
உழைப்பாளி மக்கள்தம்
உயிர்மூர்ச்சுத் தாய்மொழி
அந்தத் தமிழுக்கு மதிப்புத்தா
தடிமாடே!
தமிழ்நாட்டை விட்டு ஓடு!