‘ஊழிக் கூத்து’ யாதெனச்
சப்பான்
ஆழிப்பேரலை
ஆட்டத்தில் உணர்த்தினை!
இயற்கை அன்னை என
எவன் சொன்னான் உன்னை?
படைத்த உயிர்களையே
தின்னும் பழிகாரி!
அணுக்குண்டின் அழிவிருந்தே
மீளாத மக்கள் அவர்
மனத்துள் அவர்மேல் ஏன்
மாளாத சினத்தீ?
‘நாவாயும் ஓடா நிலத்து’
வள்ளுவன் வாக்கும் தப்பியதே!
கடலின்வாய் நாவாயைக்
கரையில் துப்பியதே
முதலாளியம் உன்மேல்
மூத்திரம் அடிக்கலாம்
ஆத்திரத்தில் மக்களை நீ
எப்படி அழிக்கலாம்?
காடழிப்பார் - உயிர்க்
காற்றழிப்பார்
டாலர்திருடர் செயல்களுக்குப்
பாடுபடுவோர் தாமா பொறுப்பு!
ஏழைகள் எப்போதும் உன்பக்கம்
வாழ விடு, தாயே!
வாரிச் சுருட்டாதே!

Pin It