சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருக்குறள் மாநாடு ஆகஸ்ட் 12, 2019 திங்கள் அன்று தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் நடைபெற்றது.

அறிஞர்கள், அடிகளார், படைப்பாளிகள், ஆய்வாளர் கள், பேராசிரியர்கள் எனப் பலரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர். மாநாடு நான்கு அமர்வுகளாக நடை பெற்றது. காலை 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்கியது. பறையிசைக் கலை நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மாநாடு அறச்சுடர் ஏற்றி துவங்கப்பட்டது. பொழிலன், கோவை கு.ராமகிருட்டி ணன், விடுதலை க.ராசேந்திரன், திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், நாகை திருவள்ளுவன், வாலாசா வல்லவன், டைசன் ஆகியோர் அறச்சுடரை ஏற்றினர்.

chennai thirukural meetingதந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் மாநாட்டு வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டில் திருக்குறள் 2050 ஆய்வு நூல் வெளியீடு நடைபெற்றது. அதனை முனைவர் இளங்குமரனார் வெளியிட, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செய லாளர் விடுதலை க.இராசேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். திருக்குறள் மாநாட்டிற்கான பாடல் வெளியிடப்பட்டது. அது குறித்தான சிறு அறிமுகத்தினை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் லெனாகுமார் வழங்கினார்.

மாநாட்டு அரங்கத்தின் வளாகத்தில் திருக்குறளின் அதிகாரங்களைக் காட்சிப்படுத்தும் விதமாகத் தோழர் மாதவன் உழைப்பில் உருவாக்கிய சிற்பக் கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

முதல் அரங்கமாக வாழ்த்தரங்கம் நடைபெற்றது. திராவிடர் ஒன்றிய சமத்துவப் பேரவையின் தோழர் தகடூர் சம்பத் வரவேற்புரை வழங்கினார். மாணவர் களம் அமைப்பின் கி.குணத்தொகை தலைமை தாங்கினார். முனைவர் இளங்குமரனார் தொடக்கவுரை யாற்றினார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் நோக்க வுரை ஆற்றினார். வழக்கறிஞர் பாவேந்தன் நெறியா ளுகை செய்தார்.

பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், நல்லூர் சரவணன், ருக்குமணி பன்னீர்செல்வம், கண்ணன் செயபாலன், குடந்தை இறைநெறி இமயவன், பேரா சிரியர் ஹாஜாகனி ஆகியோர் உரையாற்றினர்.

இரண்டாம் அமர்வாக மாணவர் மற்றும் இளைஞர் களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி மாணவர்கள், மார்க்சு கலைக்குழு தோழர்கள், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்கள் திருக்குறள் நிகழ்வுகளை நடத்தினர். தமிழ்நாட்டுக் கல்வி இயகக்த்தின் மாணவர் கள் கவினுதல், ஆனந்தி, தமிழ்சமரன் (எ) தர்மசாஸ்தா, கலைச்செல்வி, ஆதிரை, பாடகர் குரு அய்யாதுரை ஆகியோர் உரை, பாடல், கலை நிகழ்வுகளை நிகழ்த்தி னர். தோழர் ஒப்புரவாளன் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

புத்தர் கலைக் குழுவின் தோழர்கள் பறை இசை நிகழ்த்தி தோழர் மணிமாறன் மற்றும் மகிழினி மணிமாறன் ஆகியோர் திருக்குறள் குறித்த பாடலைப் பாடினர்.

மாநாட்டில் மூன்றாவதாக பிற்பகலில் கருத் தரங்க அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வுக்கு மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தோழர் முகிலன் தலைமை தாங்கினார்.

தமிழ்ப்புலிகள் கட்சியின் பேரறிவாளன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணை ப்பாளர் சௌ.சுந்தர மூர்த்தி, கணியன் பாலன், தழல் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப் பாளர் இளமாறன் வரவேற்புரை வழங்கினார்.

கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சொல்லாய் வறிஞர் அருளியார், பேராசிரியர் வீ.அரசு, சூலூர் பாவேந்தர் பேரவையின் செந்தலை ந.கௌதமன், திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக், அரங்கையா முருகன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் நெறியாளுகை செய்தார். மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் லெனாகுமார் நன்றியுரை ஆற்றினார். மாநாட்டின் நிறைவரங்காக மாலையில் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற அரசியல் அரங்கு நடைபெற்றது. பறை இசையுடன் இந்த அரங்கு துவங்கியது.

இந்த அமர்வுக்குப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய சமூக சனநாயகக் கட்சி தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, திரைப்பட நடிகர் சத்தியராசு, மலேசியாவைச் சேர்ந்த பேராசிரியர் திருமாவளவன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.செரிப், காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் மகேசு, திராவிடத் தமிழர் கட்சியின் தோழர் சங்கர், நீரோடை அமைப்பின் தோழர் நிலவன், இனங்களின் இறையாண்மைக் கான இளைஞர் மாணவர் இயக்கத்தின் தோழர் பாவெல், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் நிலவழகன், தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் தோழர் கா.சு.நாகராசன் ஆகியோர் திருக்குறள் குறித்து சிறப்புரை ஆற்றினர். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன் வரவேற்புரை வழங்கினார்.

தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளு வன் மற்றும் தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப் பாளர் டைசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் தொடக்க உரையாற்றினார். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் சீனி.விடுதலை அரசு நெறியாளுகை செய்தார். பெரும் திரளான மக்கள் கலந்து கொண்ட இம்மாநாடு நாள் முழுதும் சிறப்புற நடைபெற்று, இரவு நிறைவுற்றது.

Pin It