இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், சுதந்திரப் போராளி களைக் கொண்டு மக்கள், நல்லவர்களையே தேர்ந்தெடுத்து ஆட்சியை நடத்தினர். சட்டம் ஒழுங்கும் செம்மையாகச் செயல்பட்டுக் கொண்டு இருந்தன. மாநிலக் கட்சிகள் உருவான பின்பு ஆரம்பத்தில் மக்கள் நம்பிக்கையுடன் ஆட்சி செய்தனர். பின்னர் சரிவு நிலை ஏற்பட்டு விடுமோ என்று பயந்து, நல்ல பணி செய்த ஆசிரியர்களைப் பயன்படுத்தி, வேண்டிய சலுகைகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தனர். இதற்குப் பின்பு கூத்தாடிகளைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு ஆட்சி செய்தனர். பின்னர் கூத்தாடிகளே ஆட்சிக்கு வந்து விட்டனர்.
இந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு அரசு துறைகள் சரியாகச் செயல்படவில்லை. அரசியல்வாதிகளின் அடிமை களாகத் துறைத் தலைவர்கள் செயல்பட்டனர். அரசியல்வாதி களும் லாவணியம் பேசிப்பேசி அனைத்து மக்கள் நலன் திட்டங்களையும் கிடப்பில் போட்டுவிட்டனர். கொள்ளையடிக்கும் திட்டங்களைத் திருடிச் சுரண்டினர். இப்படிச் சுரண்டிய பணத்தால் மில்லியன் கணக்கில் கட்சிப் பணம் சேர்த்து விட்டனர், விவசாய நிலங்கள் தரகர்களின் கையில் மாட்டிக் கிடக்கின்றன. நீர்நிலைகள் ஏரி, குளம், குட்டை, ஓடைகள், காடு கள் பாதுகாக்கப்படவில்லை. காட்டுச் செல்வங்களைக் கொள்ளை யடித்த அரசியல்வாதிகளை விட்டுவிட்டு அப்பாவிக் கூலித் தொழி லாளர்களை ஆசைக்காட்டிக் கொன்று கொண்டுள்ளனர்.
கூத்தாடிகள் மட்டும் சேர்ந்து அரசியலில் செயல்படவில்லை. இப்பொழுது ரவுகளை மிக அதிக அளவில் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்துள்ளனர். பணமும் ரவுடிகளும் இருந்தால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்பதால் இப்பொழுது அரசியல் கட்சிகள் பல தொடங்கிவிட்டனர்.
இவை அனைத்தையும் அறிவியல் வளர்ச்சி மிக எளிதாக வெற்றியைத் தீர்மானிக்கும் என்று திட்டம் போட்டுக் கணினி ஓட்டு முறையை இங்கு கொண்டு வந்துள்ளனர். வெற்றியையும் கண்டுள்ளனர். உலக நாடுகள் கைவிட்ட கணினி ஓட்டு முறையை இந்தியர் எடுத்துக்கொண்டு மிக எளிதாக வெற்றியை நிர்ணயம் செய்கின்றனர். எங்கிருந் தாலும் மின்னணு இயந்திரங்களைக் கொண்டு, எதையும் இயக்கமுடியும். உதாரணத்திற்குக் கார் கதவுகளை மூடுவதும், திறப்பதும், தொலைக்காட்சிப் பெட்டிகளை, குளிர்சாதனப் பெட்டிகளை இருந்த இடத்திலிருந்து இயக்குவதும், குறிப்பிட்ட நேரத்தில் செயல்படவும், காணொலி மூலம் கட்டிடங்களைத் திறப்பது, விழாக்கள் தொடங்கி வைப்பது போன்ற அனைத்தும் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகின்றோம்.
இவ்வளவும் செய்யும் மின்னணு சாதனங்கள் மின்னணு இயந்திர ஓட்டுகளைக் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சின்னத்திற்கு மாற்றுவது மிகவும் எளிது, மின்னணு மென்பொருள் கை யாளும் அனைத்து மென்பொருள் பொறியாளர்களுக்கும், நன்கு தெரிந்த மின்னணு இயந்திரத்தின் மூலம் ஓட்டுப் போடுவது மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளையே வெற்றி பெறச்செய்யும். எத்தனை காவல் போட்டாலும் கண்ணுக்குத் தெரியாமல் வாக்குகள் மாற வாய்ப்புகள் அதிகம். வாக்காளர்களே நீங்கள் சிந்தியுங்கள், செயல்படுங்கள்!
- உழவர் மகன் ப.வ.