ஆப்பிரிக்கா கண்டத்தின் மேற்குப்பகுதியில் அமைந்து உள்ளது காணா எனும் நாடாகும். அந் நாட்டின் தலைநகரான ஆக்ராவில்  அந்நாட்டின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான காணா பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகம் 1948ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இன்று இப்பல்கலைக் கழகத்தில் சுமார் 40,000 மாணவர்கள் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கு 2016ஆம் ஆண்டில் இந்தியா - காணா இருநாடுகளின் நட்புறவுக்கு "அடையாளமாக" அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காந்தியாரின் சிலை யைத் திறந்து வைத்தார். அவ்வாறு காந்தியாரின் சிலையைத் திறப்பதை அந்நாட்டின் அறிவுலக மக்கள் விரும்பவில்லை. ஏன்?

காந்தியார் தென் ஆப்பிரிக்காவில் இருந்த பொழுது "இந்தியர் கள் கருப்பின மக்களைவிட மிகவும் உயர்ந்தவர்கள்" என்று கூறியதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் காந்தி சிலையை நிறுவு வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் அந்நாட்டு அரசே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், இந்தியாவுடன் "நல்லுறவைப்" பேணவேண்டும் என்ற முனைப்பில் காந்தி சிலையைத் திறக்க அனுமதித்து விட்டது.

காணா நாட்டு மக்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந் தனர். ‘உலக நாடுகளுடன் நல்லுறவு' என்ற பெயரில் தங்கள் சுய மரியாதையைக் காவுகொடுக்கக் கூடாது என்று பரப்புரை செய்தனர்.

சிலை திறக்கப்பட்ட சிலவாரங்களிலேயே சிலையின் கண் கண்ணாடிப் பகுதி உடைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து 13.12.2018 அன்று பல்கலைக் கழகத்தினரால் சிலை முற்றிலும் அகற்றப்பட்டது. இதுகுறித்து காணா நாட்டு வெளி யுறவுத்துறை இச்சிலை அக்கற்றலுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்றும், அதுமுற்றிலும் பல்கலைக்கழகத்தின் உள் விவகாரம் என்றும் அறிவித்து உள்ளது. மேலும் இந்திய நாட்டு டனான நல்லுறவு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக,வேறு இடத்தில் காந்தி சிலையை நிறுவுவதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருப்பதாகவும் காணா அரசு கூறி உள்ளது.

காணாவைத் தொடர்ந்து இன்னொரு ஆப்பிரிக்க நாடான மாளவி நாட்டிலும் காந்தி சிலையை நிறுவுவதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்து உள்ளன.

காந்தியாரின் நிறவெறி உணர்வு பற்றி அவருடைய பேரனும், வரலாற்று ஆசிரியரும், ஆராய்ச்சியாளருமான ராஜ்மேகன் காந்தி கருத்து தெரிவிக்கையில், காந்தியார் கருப்பின மக்கள் மீது பாரபட்ச உணர்வு கொண்டு இருந்தது உண்மைதான் என்று கூறி உள்ளார். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்காக காந்தியார் முன்னெடுத்த போராட்டங்கள் தான் கருப்பின மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட ஒரு உந்துவிசையாக இருந்தது என்று அவர் கூறினார்.

காந்தியாரின் நிறச்சமத்துவக் கொள்கை மட்டும் அல்ல; எந்த விதச் சுரண்டலுக்கு எதிரான கொள்கையும் விசித்திரமானதே. கருப்பின மக்களுடனான இனப்பாகுபாட்டுக் கொள்கையை வெளிப்படுத்துவதற்கு முன் வெள்ளை இனமக்களுடன் சமத்துவம் வேண்டும் என்று போராடி இருக்கிறார். அவர் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்காகத் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற போது டர்பன் நகரில் இருந்து பிரிட்டேரியாவுக்குத் தொடர் வண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்தார். அத்தொடர் வண்டி நோட்டால் தலைநகரமான மாரிட்ஸ்பர்க் சேர்ந்த பொழுது, அந்நிலையத்தில் ஏறிய ஒரு பயணி காந்தி வெள்ளையர் அல்ல என்று தெரிந்து கொண்டு அவர் முதல்வகுப்பில் பயணம் செய்வதை ஆட்சேபித்து, அப்பெட்டியில் இருந்து இறங்கி வேறு பெட்டியில் ஏறும்படி கூறி இருக்கிறார். காந்தியாரே அதை மறுத்துத் தன்னிடம் முதல் வகுப்புப் பயணச்சீட்டு உள்ளது என்று கூற, சர்ச்சை வலுத்து, காவல்துறையினர் காந்தியாரை வலுக்கட்டாய மாகக் கீழே இறக்கி, அவருடைய பெட்டி படுக்கைகளை நடை மேடையில் வீசி எறிந்துவிட்டனர். இந்த அவமானத்தைப் பொறுக்க முடியாத காந்தியார் வெள்ளையர்களுக்கும் இந்தியர் களுக்கும் இடையிலான நிறவெறி ஒடுக்குமுறையை வேருடன் ஒழிக்கப் போராடவேண்டும் என்று மனதில் உறுதிபூண்டார். தென் ஆப்பிரிக்காவில் அத்தகைய போராட்டங்களை முன்னெடுக்கவும் செய்தார்.

(இங்கு ஒருசெய்தி நெருடுகிறது. தொடர்வண்டிகளில் இந்தியர்கள் முதல் வகுப்பில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்றால், பல ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து கொண்டு இருந்த இந்தியரான அவருடைய கட்சிக்காரர் அவருக்கு எப்படி முதல் வகுப்புப் பயணச் சீட்டை வாங்கிக் கொடுத்தார்? அந்நாட்டில் இந்தியர்கள் முதல் வகுப்பில் பயணம் செய்யமுடியாது என்ற விதிமுறை இருந்தால் அப்படி முதல் வகுப்புப் பயணச் சீட்டை வாங்கிக் கொடுத்து இருக்க முடியாதே? இது ஒருபுறம் இருக்கட்டும்.)

தன்னை நிறவெறி காரணமாக முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து வெளியேற்றிய அவமானத்தைத் தாங்க முடியாத காந்தியார், அந்தத் தனிப்பட்ட மனிதர்கள் திருந்தினாலே அல்லது அந்தத் தனிப்பட்ட மனிதர்களை மாற்றினாலே போதும் என்று நினைக்காமல், நிறவெறி உணர்வை வேரோடு அழிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் மற்ற விஷயங்களில் அப்படி நினைக்கவில்லை. தொடர்வண்டி நிகழ்வு நடந்த சில காலங்களுக்குப் பிறகு அவர் நேட்டாலில் குடியேறினார்.அங்கு பாலசுந்தரம் என்ற தமிழர் ஒருவர் அவரைக் காணவந்தார். பாலசுந்தரத்தை அவருடைய வெள்ளைக்கார எஜமானர் கடுமை யாக அடித்ததில் அவருடைய முன்னம் பற்கள் இரண்டும் பெயர்ந்து விழுந்துவிட்டன. இவ்வாறு கடுமையான சித்திரவதையும் அவ மானமும் பட்ட பாலசுந்தரத்திற்கு நீதிமன்றத்தின் மூலம் காந்தி யார் "நியாயம்" வாங்கித்தந்தார். அது என்ன தெரியுமா? பால சுந்தரம் வேறு வெள்ளைக்கார எஜமானரிடம் வேலைக்குப் போக அந்தப் பழைய எஜமானர் ஒப்புக்கொள்ள வேண்டும்.

நிறவெறி காரணமாகத் தன்னை முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து வெளியேற்றியபோது அதற்கு மூல காரணமான நிறவெறி உணர்வை வேரோடு அழிக்க வேண்டும் என்று நினைத்த காந்தியார், பாலசுந்தரத்தின் பிரச்சினைக்கு மூலகாரணமான கூலி உழைப்பு முறையை வேரோடு ஒழிக்கவேண்டும் என்று உறுதி பூணவில்லை. உறுதி பூணுவது இருக்கட்டும்; நினைக்கக்கூட இல்லை. அவர் தான் சார்ந்த கழகத்தின் நலனைப் பற்றியும், உரிமைகளைப் பற்றியும்தான் சிந்தித்தாரே ஒழிய ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் நலன்களைப் பற்றியும் உரிமைகளைப் பற்றியும் சிந்திக்கவே இல்லை.

Pin It