மனித இனம் தோன்றியதில் இருந்து முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றிய நாள் வரைக்கும் உற்பத்தி செய் யப்பட்ட பண்டங்களைவிட, முதலாளித்துவம் தோன்றிய ஒரு நூற்றாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் அளவு பல்லாயிரம் மடங்கு அதிகம் என்று ஒரு கருத்து உண்டு. முதலாளித்துவத்தின் தொடக்கக் காலத்தைவிட இப்பொழுது உற்பத்தித்திறன் மிகப் பல மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனால் இந்த நவீன உற்பத்திப் பண்டங்கள் மனித வாழ்க்கை நலத்திற்குத்தானா என்பது ஆழ்ந்த பரிசீல னைக்கு உரியதாக இருக்கிறது.

அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்த, அண்மையில் (18.2.2019 அன்று) காலமான வாலஸ் ஸ்மித் ப்ரேய்க்கர் என்ற அறிவியல் அறிஞர், நவீன காலத்துப் பண்டங்கள் பெருமளவு கரியமில வாயுவை உமிழ்வதைக் கண்டு, இது புவி வெப்பத்தை உயர்த்தும் என்றும், அதனால் பருவநிலை மாற்றங்கள் ஏற்படும் என்றும் 1975ஆம் ஆண்டிலேயே தெரிவித்தார். 1990ஆம் ஆண்டு வரையிலும் யாரும் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

1990களில் புவிவெப்ப உயர்வும், பருவநிலை மாற்றமும் ஒரு பெரிய பிரச்சினை என்று புரியத் தொடங்கியது. 2000ஆம் ஆண்டுக்குப்பின் இப்பிரச்சினையைக் கவனித்தே ஆகவேண்டும் என்று மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். ஆனால் என்ன செய்யவேண்டும் என்று புரியாத நிலை யிலேயே இருந்தனர். 2010க்குப் பின் உலகில் உள்ள இளம் அறிவியலாளர்கள் இன்று சந்தைப்படுத்துவதற்கு என்று உற்பத்தி செய்யப்படும் பண்டங்களில் முதன்மையானவை புவி வெப்பத்தை உயர்த்துபவையாக உள்ளன என்றும், உலகை அழிவுப் பாதையில் செல்லவிடாமல் தடுக்கவேண்டும் என்றால் இவற்றின் உற்பத்தியைத் தடுக்கவேண்டும் என்றும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர். இளம் அறிவியலாளர்களின் இக்கருத்து இவ்வுலகம் சந்தைப் பெருளாதார முறையில் மூழ்கிவிடக் கூடாது என்பதை வலி யுறுத்துகிறது. அறிவியலாளர்களால் இந்த அளவிற்குத் தான் சொல்லமுடிகிறது. அவர்களால் முதலாளித்துவப் பெரு ளாதார முறையை முற்றிலும் ஒழித்துவிட வேண்டும் என்று நேரடியாகச் சொல்ல முடியவில்லை.

அறிவியல் அறிஞர்களிடையே இக்கருத்து வலுக்கத் தொடங்கிய உடன், ஏகாதிபத்தியவாதிகள் "புவிவெப்ப உயர்வா? அப்படி ஏதும் இல்லையே!" என்று கூறத் தொடங்கிவிட்டனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவ்வாறு கூறி, புவிவெப்ப உயர்வு பற்றிய ஆராய்ச்சிக்கான நிதிகளைப் பெருமளவு குறைத்தும், முழுவதுமாக நீக்கியும் வருகிறார். இவ்வாறு உயர் அதிகாரத்தில் உள்ள பெரியவர்கள் உலகம் அழிவுப்பாதையில் செல்வதைப் பற்றிய கவலையும், அதைத் தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் இன்றிச் செயல்படுகிறார்கள்.

இவ்வாறு பெரியவர்கள் பொறுப்பு இல்லாமல் இருக் கையில், சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரேடா எம்மான் தன் பெர்க் என்ற பதினாறு வயதுப் பள்ளிச் சிறுமி, தன்னுடன் படிக்கும் மாணவ மாணவிகளை ஒன்றுதிரட்டி, வகுப்புகளை விட்டு வெளியே வந்து, தெருவில் இறங்கிக் குரல் கொடுக்கத் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக உலகின் பல பகுதி களில் இருந்து நூறு நாடுகளில் உள்ள பள்ளிக் குழந்தை களுடன் தொடர்பு கொண்டு அவர்களையும் போராடும்படி அழைப்பு விடுத்தார். அதன் பேரில் 15.3.2019 அன்று பள்ளிகளை விட்டு வெளியே வந்து, புவிவெப்ப உயர்வுக்கு எதிராக உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேணடும் என்று இலட்சக்கணக்கான குழந்தைகள் குரல் கொடுத்தனர்.

குழந்தைகள் இவ்வாறு பொறுப்புடன் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கையில் பெரியவர்கள் பொறுப்புடன் செயல் படாமல் இருப்பது வேதனைக்கு உரியது. இதைவிட மோசம் என்னவென்றால் இச்சிறுமியைப் புகழின் உச்சிக்குக் கொண்டு போய் மதிமயங்கச் செய்து, திசை திருப்பும் செயல் தான். அதுதான் இப்போராட்டத்திற்கு "மரியாதை" தரும் விதமாக அவருக்குச் சமாதான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்ய முதலாளித்துவ அறிஞர்கள் முன் வந்து இருப்பது. இவ்வாறு பரிந்துரை செய்த நிலையிலேயே புவிவெப்ப உயர்வு பற்றிய பேச்சு அச்சிறுமிக்கு நோபல் பரிசு கிடைக்கப் போகிறது என்றும், இளம் வயதிலேயே நோபல் பரிசு பெறுபவர் இவர்தான் என்றும் மடை மாற்றப்பட்டு இருக்கிறது. உண்மை யிலேயே நோபல் பரிசு கிடைத்துவிட்டால், அதைப் பற்றிய பேச்சு வெள்ளத்தில் புவி வெப்ப உயர்வு பற்றிய பேச்சை முற்றிலும் மூழ்கடிக்க முயல்வார்கள்.

இப்புவியை நம் வரும் காலத் தலைமுறை யினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் குழந்தைகள் செயல்படும் போது, இந்தப் பெரியவர்கள் ஏன் பொறுப்பில்லாமல் செயல் படுகிறார்கள்?

காரணம் இதுதான். சந்தைப் பெருளாதார விதிகளுக்கு உட்பட்டு உற்பத்தி ஆகும் பொருள்களில் மிகப் பெரும்பாலா னவை புவி வெப்பத்தை உயர்த்துபவையாகவே உள்ளன. புவி வெப்பத்தை உயர்த்தும் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாது என்றால், அத்தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள மூலதனத்தை என்ன செய்வது? மூலதனம் சும்மா இருப்ப தற்குச் சந்தைப் பொருளாதாரம் ஒப்புக்கெள்ளாது.

சரி! சந்தைப் பொருளாதாரம் வேண்டாம்; சோஷலிசப் பொருளாதார முறையைச் செயல்படுத்தலாம் என்றால் அது பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு நன்மையாக இருக்கும். ஆனால் அதிகாரம் படைத்த முதலாளிகளாலும், முதலாளித்துவ அறிஞர்களாலும் பிறரை அடிமை கொள்ளும் வசதி இல்லாமல் போய்விடும்.

பிறரை அடிமை கொள்ளும் வசதி இல்லாத வாழ்க்கையை வாழ்வதைவிட இவ்வுலகம் அழிந்து போகட்டும் என்று "பெரி யவர்களான" முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர்களும் நினைக்கிறார்கள். இந்நிலையில் பெரும்பான்மை மக்களாகிய உழைக்கும் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

Pin It