பிரான்சில் சென்ற நூற்றாண்டின் முதல் கால் கூற்றில் வரலாற்றினை எழுதுதலில் அன்னல் சிந்தனைப் பள்ளி தோன்றியது. அதற்கு முன்புவரை வரலாற்றில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட தளங்கள் கண்டறியப்பட்டு அத்தளங்களில் இச்சிந்தனைப் பள்ளியின் ஆசிரியர்கள் தம் கவனிப்பைச் செலுத்தினர். அவ்வாறு கவனம் பெற்ற தளங்களில் கொள்ளையர் பற்றிய ஆய்வும் ஒன்றாகும். இதனை முதலில் ஆயத் தொடங்கியவர் இப்பள்ளியினைச் சார்ந்த Fernand Braudel. இரண்டாம் பிலிப் காலத்தின் மத்திய தரைக்கடல் நாடுகள் என்று தலைப்பிடப்பட்ட தம் நூலில் அய்ரோப்பாவின் கொள்ளையர் பற்றிய ஆய்வுக்குறிப்புகளைத் தந்துள்ளார்.

அதே சிந்தனைப்பள்ளியைச் சேர்ந்த Marc Bloch என்பவரும் Feudal Society  என்ற தம் இரட்டைத் தொகுதி நூலில் கொள்ளையர் இயக்கத்தினை விளக்கியுள்ளார். அடுத்து Eric Hobsbawm கொள்ளையரை முதன்மை ஆய்வுக்களமாகத் தெரிவு செய்து நூல்கள் வெளியிட்டு உள்ளார். அவருடைய ஆய்வுநூல்கள் வெளிவந்தவுடன் David Shulman தென்னிந்தியப் பின்புலத்தில் தமிழக வரலாற்றில் கொள்ளையர் பற்றி ஆய்ந்துள்ளார். David Arnold, William Blackburn போன்றோராலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

bandits 450என்றாலும், இம்மூவரின் ஆய்வுத்தடம் நா.வானமாமலையின் கட்டுமாணத்தில் நின்று உருவானது. என்றாலும், இப்புதிய ஆய்வுப் போக்கினைத் தொடங்கி வைத்தவர் அன்னல் பள்ளியினைச் சேர்ந்தோரே. ஆனால், இது மார்க்சிய சிந்தனையின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது.

எப்படியெனில், எந்த ஒரு அரசும் வருவாய்த்துறை மூலமாக மக்களைக் கொள்ளையிடுகிறது என்று மார்க்ஸ் வரையறுத்தார். Eric Hobsbawm, கொள்ளையர் கூட்டம் ஆட்சிக் கூட்டகாக மாறியதனை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.

கொள்ளையர் என்ற தமிழ்ச்சொல்லிற்கு TamilLexicon, DED இரண்டிலும் robbery, plunder என்று பொருள் அறியலாம். அதாவது ஒருவருக்குச் சொந்தமான பொருளினை அவரின் அனுமதியின்றி பறித்துக் கொள்ளுதல் என்று இதற்கு விளக்கம் கொள்ளலாம். அரசியல், ஆட்சித் தளங்களில் இதற்கு பல பொருள்களைத் திரட்ட இயலும்.

முன்னோடி ஆய்வுகள்

நிலமானியமுறை உருப்பெற்று வளர்ந்து வரும் தொடக்கக் காலங்களில் கொள்ளையர் இயக்கமும் தொடங்கியுள்ளது என்று Marc Bloch தம் நூலில் வெளிப்படுத்தியுள்ளார். தொடக்கத்தில் ஒரு நாட்டின் படைவீரர்களே பிறிதொரு நாட்டின் கொள்ளையராக இயங்கியுள்ளனர் என்பதனைச் சான்றுகளுடன் நிறுவினார். காட்டாக கி.பி.890 இல் மத்திய தரைக்கடல் பகுதியில் புயற்காற்றில் கரையொதுங்கிய ஸ்பானிஷ் கப்பல் Saint-Tronez அருகே நின்றது. பகல் நேரங்களில் கப்பலில் பதுங்கிக் கொண்ட இக்கப்பல் பணியாளர்கள் இரவு நேரங்களில் அருகிலிருந்த கிராமங்களில் கொள்ளையிட்டனர். கிராமத்து மக்களைப் படுகொலை செய்தனர். மலைகளிலும், வனங்களிலும் ஒளிந்து கொள்வது அவர்களுக்கு ஏதுவாக அமைந்தது. இதே காலக்கட்டத்தில் அராபியர்கள் முட்புதர்கள் நிறைந்த/அடர்ந்த மலையுச்சிகளில் மறைந்திருந்தனர். நாட்டுப்புறத்து மாவட்டங்களை Saint-Tronez கொள்ளையிட்டனர். தொங்கு பாறைகள் (abbeys) கொள்ளையர்கள் பதுங்கிக் கொள்ள ஏதுவாக அமைந்திருந்தன.

Navalesa என்ற இடத்திலிருந்த ஒரு மடாலயத்திலிருந்து தப்பியோடிய துறவிகள் சிலர் கி.பி.960 இல் கொள்ளையரால் கொல்லப்பட்டனர். ரோமிலுள்ள அப்போஸ்தலர்களின் சமாதிகளை தரிசிப்பதற்கு வந்த Anglo-Saxon பயணிகளை வழிப்பறி கொள்ளையர்கள் (கி.பி.920/921) அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். கி.பி.1000வது ஆண்டுகளில் ஸ்பெயினில் நிகழ்ந்த போர்களில் கடற்கொள்ளையும் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

இதில், வழிப்பறி கொள்ளையரும் கலந்திருந்தனர். Saracens என்ற கொள்ளையர் கூட்டத்தின் ஊடுருவல் மேற்கு ஐரோப்பாவை நிலைகுலையச் செய்தது. இவர்கள் கி.பி.842 இல் Rhone பகுதிவரை சென்றனர். Arles நதிவரை சென்று நதியின் இருமருங்கிலும் அமைந்திருந்த கிராமங்களில் கொள்ளையிட்டனர். கி.பி.848இல் கிரேக்க கடற்கொள்ளையர் Arles என்ற நகரினைக் கொள்ளையிட்டனர். கி.பி.972-இல் இத்தாலியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த Cluny என்ற மடாலயத்தின் தலைவர் வழிப்பறித் திருடர்களால் பிடிக்கப்பட்டார். மடாலயத் துறவிகள் ஒரு கணிசமான தொகையினை அளித்த பிறகே அவர் விடுவிக்கப் பட்டார்.

கி.பி.11 ஆம் நூற்றாண்டில்கூட அராபிய கடற்கொள்ளையர் கிறித்தவர்களைப் பிடித்து அடிமைகளாக ஸ்பெயினுக்கு அனுப்பினர். கி.பி.1178 இல் Marseilles என்ற இடத்தில் நடத்தப்பட்ட கொள்ளையர் தாக்குதலில் பலர் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டனர். ரஷ்யாவின் ஸ்டெப்பி புல்வெளியில் அலைகுடிகளாக இருந்த இடையர்கள் திருடர்களாகவும் இருந்தனர். அவர்கள் தம்மைக் கொள்ளையராக ஆக்கிக் கொண்டனார்.

வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கொள்ளையர்கள் முற்றுகையிட்ட மக்கள்தொகையினரை துயரப்படுத்தாமல் இருக்க அவர்களிடம் பெருமளவு பணத்தினை வேண்டினர்; சில சந்தர்ப்பங்களில் அவர்களிடமிருந்து நிரந்தரமாக பணம் கேட்டுக் கொண்டேயிருந்தனர். Bavaria, Saxony போன்ற நிலப்பகுதிகள் அடிக்கடி இதுபோன்ற தொந்தரவிற்கு ஆளாயின. இதுபோன்றே Hungary எல்லைப் பகுதிகளில் மக்கள் கொள்ளையடிக்கப்பட்ட பின் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.

கொள்ளையர்கள், ஐரோப்பாவில் கோட்டை நகரங்களைத்  (fortified towns) தாக்கினர். Pavia என்ற ஒரு முக்கிய நகரம் இவ்வாறு தாக்கப்பட்டது. கொள்ளையரைக் கண்டு கிராமவாசிகள் அஞ்சினர்; மடாலயங்கள் பயந்தன. ஒதுக்கமான நகரங்கள் தாக்கப்பட்டன. நகரக் கொள்ளைகளில், சிறையிலடைக்கப்பட்ட நபர்கள் கைப்பற்றப்பட்டனர். இளம்பெண்கள், இளம் பையன்கள் தவிர அனைவரும் கொல்லப்பட்டனர். பையன்களும், பெண்களும்கூட கொள்ளையர்களின் தேவைக்காக வைத்துக் கொள்ளப்பட்டனர்; அவர்கள் பெரும்பாலும் விற்கப்பட்டனர். கி.பி.954 இல் ஒரு கூட்ட நெரிசலில் பிடிக்கப்பட்ட ஒரு உயர்குடியினைச் சேர்ந்த பெண், நகர் ஒன்றில் விற்கப்பட்டார். பலர் Danube வட்டாரத்தில் பிடிக்கப்பட்டு கிரேக்க வணிகர்களிடம் விற்கப்பட்டனர்.

மத்திய தரைக்கடலின் நிலப்பகுதியிலும், கடலிலும் நிகழும் banditry இன் பொதுவான கூறுகள் (many(manyaffinities)  பல உண்டு என்பதனை Fernand Braudel தம் ஆய்வில் விளக்கினார். கொள்ளையர்கள் ஒரு திட்ட மிட்ட முறையில் இயங்கியுள்ளனர் என்பார்.

கொள்ளையர்கள் உருவானதை காலத்தால் கணக்கிட இயலாது. எப்போது மக்கள் கடற்புரங்களில் வாழத் தொடங்கினார்களோ அப்போதே கொள்ளையர் கூட்டமும் உருவானது. இவர்களை அழிக்க முடியவில்லை. கொள்ளையர்கள் இன்றும்கூட இயங்குகின்றனர். கால ஓட்டத்தில் இவர்கள் தம் பெயரினையும், தம் அமைப்பினையும் மாற்றிக் கொள்கின்றனர். இவர்கள் Malandrini, Masuandieri, Funorusciti bandit என்று பலவாறாக அழைக்கப்பட்டுள்ளனர். Masuandieri  என்பவர் உண்மையில் கூலிப்படையினர். Funorusciti என்பவர் கொள்ளையர். விளக்கமான பொருளில், இவர்கள் அனைவருமே கொள்ளையர். இவர்களை misfit, rebelmisfit, rebel against society எனச் சுட்டலாம் என்று Fernand Braudel மதிப்பிடுவார். கொள்ளையரின் துன்பத்திலிருந்து மத்திய தரைக்கடலின் எந்தப் பகுதியும் தப்பவில்லை. Anatolia, Anatolia, Calabria, Albania  போன்ற பகுதிகளில் பலவகையான கொள்ளையர் இயங்கினர்.

கொள்ளையர் இயக்கம் வெவ்வேறு முகம் கொண்டு அரசியல், சமூகம், பொருளியல், தீவிரவாதம் போன்ற தளங்களில் தொழிற்பட்டது. இடைக் காலத்தில், Alexandria, Egypt, Damascus, Allepe போன்ற நகரங்களின் வாயில்களில் Naples நகரினைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொள்ளையரைக் கண்காணிக்க காவற் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. ஸ்பெயினில், தபால்காரர்கள் வழிப்பறி செய்யப்பட்டனர். Portugal, Venice, Portugal, Venice, Italy முழுவதும் Ottoman பேரரசு முழுவதும் கொள்ளையர் இயங்கினர். சிறு சிறு குழுக்களாக இயங்கினர். சிறுபடை போல் இயங்கிய இக்கொள்ளையர் அரசுகளுக்கு எரிச்சலை ஊட்டினர். ஆனால், இவர்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு இருந்தது. இவர்கள் சிரமமின்றி Catalan Pyrenees  முதல் Granada வரையும் Albania முதல் Black Sea  வரையும் இயங்கினர்.

Fernand Braduel, Bandit and the State என்ற தலைப்பில் கொள்ளையர் பற்றி ஆய்ந்தார். இவர்கள் நிறுவன அரசுகளுக்கு எதிராக வஞ்சம் தீர்க்கும் நோக்குடன் இயங்கினர் என்று அறிந்தார். அவர்கள் அரசியல், சமூக கட்டமைப்பினைக் காப்பவராகக் கருதப்பட்டனர். இவர்கள் கொடூரமான அரசுகளை  (vile  governments) எதிர்த்தனர். இத்தாலியின் மத்திய குடியரசுகள்  (medieval republics) இது போன்றுதான் இயங்கின. Sicilyஇல் கொள்ளையர்களுடன் பார்வையற்ற பாடகர்களும் இருந்தனர். இவர்கள்  urvi என்று அழைக்கப்பட்டனர். இப்பாடகர்கள் ஒரு எளிய வயலினைக் கொண்டு (a kind of small, dustry violin) பாடல்களை இசைத்தனர். இவர்களின் இசைப் பாடல்களை இசைப்பதற்கு மக்கள் கூட்டமாகக் கூடினர்.

இதுபோன்ற கொள்ளையர் கூட்டம் Spain Q¡ Andulasia பகுதியில் மிக எளிதாக Heroes என்ற அளவிற்கு உயர்ந்தனர்.  மொழிகளில்  (Yugoslav, Romania) நாட்டுப்புறப் பாடல்களில் Haiduks  என்ற கொள்ளையர் பற்றிய கதை உண்டு. கொள்ளையர்கள் தவறுகளைத் திருத்தும் நபர்களாக (righter of wrongs) கருதப்பட்டனர். ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும், நீதியை நிலைநிறுத்துவதற்கும் எங்கும் வஞ்சம் தீர்ப்பதற்கும் கொள்ளையர் இயங்கினர். 

Calabria என்ற பகுதிலிருந்த ஒரு கொள்ளையர் நீதிமன்றத்தில் தாம் செல்வந்தர்களின் சொத்துகளை கொள்ளையடித்து அவற்றை ஏழைகளுக்குத் தரும் Robin hood என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். இவர் நாள்தோறும் ஜெபமாலை வைத்திருக்கும் சாமியாரிடமும், கிராமப் பூசாரியிடமும் ஆசிபெற்று வந்தார். தனிப்பட்ட தமக்கு வேண்டிய நீதியை நிலைநாட்டுதற்கு தம் முப்பது வயதிற்குள் முப்பது பேரினைக் கொன்றார்.

கொள்ளையர்கள் பெரும்பாலும் அரசு அதிகாரம் வலுப்பெற்றிராத நிலப்பகுதிகளில் இயங்கினர். மலைகள் நிறைந்த பகுதியில் அரசுப் படைகள் இயங்க முடியாது. அங்கு ஆளும் உரிமையினை நிலைநாட்டுதற்கு இயலாது. இவர்கள், பெரும்பாலும் இருநாடுகளிடையிலான எல்லைப் பகுதிகளில் இயங்கினர். காட்டாக, 16 ஆம் நூற்றாண்டில் கொள்ளையர்கள் Venice, Turkey இடைப்பட்ட நிலப்பரப்பில் இயங்கினர். 1561இல் கொள்ளையரை ஒடுக்கும் பொருட்டு கூட்டு முயற்சி மேற்கொள்வதற்காக France இன் அரசர் Philip II-டன் உடன்பாட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இது வெற்றி பெறவில்லை. Rome, Naples என்ற இரு அரசுகளும் இதுபோன்றதொரு ஒப்பந்தத்தினைச் செய்தன. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. Venice  கொள்ளையர்களால் பாதிக்கப் படும்போது Naples நகருடன் 1572; 1580களில் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி, இவ்விரு அரசுகளும் தங்கள் எல்லைப்பகுதியில் ஆறு மைல் தொலைவு அளவிற்கு குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று ஒத்துக்கொண்டனர்.

1578 இல் Marquis of Montesar Calabrian பகுதியிலுள்ள கொள்ளையரை ஒடுக்கும் நடவடிக்கையில் Malta, Lipari Islands போன்ற அரசுகளுக்கு முன்கூட்டியே செய்தியனுப்பப்பட்டது. ஆனால், நாடுகளிடையேயான இதுபோன்ற பேச்சுவார்த்தை தேசிய இறையாண்மையினை (national sovereignty)  இழுத்ததால் நாடுகளிடையேயான நம்பிக்கையற்ற தன்மையினை உருவாக்கியது. குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வது அத்திபூத்தாற்போல் நடந்தது; சிறைக்கைதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டனர். இது போன்றதொரு பரிமாற்றத்தில் Rizzodi Scponara என்ற Naples, Sicily பகுதிகளில் 25 ஆண்டுகளாக கொள்ளை செய்து வந்தவர் விசாரணைக்கு அழைத்து வரப்படும் வழியிலேயே நஞ்சுவைத்து கொல்லப்பட்டார்.

ஒவ்வோர் அரசும் தத்தம் நிலப்பிரதேசத்தினை சட்டப்படி பாதுகாக்க வேண்டும். ஆனால், இது எளிதன்று. கொள்ளையர்கள் ஆழமாக வேர்விட்டுள்ள பகுதிகளில் இதற்கு சாத்தியமே இல்லை. 1578 இல் Naples ஆட்சியாளர், Calabriaவின் கொள்ளையர் தலைவர்மேல் தாக்குதல் தொடுத்தார். இக்கொள்ளையர் விளைநிலங்களை அழித்தார். வழிப் பயணிகளைக் கொன்றார். சாலைகளில் தடைகளை உருவாக்கினார். இவரால் தேவாலயங்களின் புனிதம் அபுனிதமாக்கப்பட்டது. பணத்திற்காக ஆட்களைக் கடத்தினார்.

ஸ்பெயினில் கொள்ளையரை ஒடுக்குவதற்காக expeditionary force என்ற படை உருவாக்கப்பட்டது. குதிரைப்படை கொண்ட இவர்கள் கொள்ளையரை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்டனர். ஒரு கொள்ளையரின் தலைக்கு 30 ducats எனும் ஸ்பானிய பணம் அறிவிக்கப் பட்டது; கொள்ளையர் தலைவருக்கு 200 ducats அறிவிக்கப்பட்டன. Don Pedro என்ற expeditionary force தலைவர் 17 கொள்ளையரை கொன்று அவர்களின் தலைகளை Naples நகரின் வாயிற்கதவில் சொருகி வைத்தார். சிலர் சிறையிலடைக்கப்பட்டனர். மாரிக் காலத்தில் எடுக்கப்பட்ட இம்முயற்சி சரியாக பலனளிக்கவில்லை. கி.பி.1580 இல் வெனிஸ் நகரின் வணிக முகவர் அரசாங்கம் முழுவதும் கொள்ளையர்கள் மலிந்துள்ளனர் என்று குற்றம் சாட்டினர்.

மேற்சொல்லப்பட்ட Fernanad Braduel, Marc Blochலீ என்ற இரு அறிஞர்களின் கொள்ளையர் பற்றிய குறிப்புகளின் அடிப்படையிலேயேEric Hobsbawm கொள்ளையர் பற்றிய ஆய்வினை தொடர்ச்சியாக மேற்கொண்டார். அவை கீழே தரப்படுகின்றன. இக்கருத்துகள் அவர் எழுதிய இரு நூல்களில் இருந்து (Primitive Rebels, Banditss) எடுக்கப்பட்டன

கொள்ளையர் : ஒரு சமூக விளக்கம்

கொள்ளையர் இயக்கம் வேளாண்சமூகத்தின் வாழ்க்கைத் திட்டமன்று; சில சூழல்களில் இருந்து தப்பிக்கவே இவ்வியக்கம் வேளாண்குடிகளுக்கு சுய உதவியாக அமைகிறது. பொதுவாக, கொள்ளையர்கள் தாமாக முன்வந்து சரணடைவர். அவர்கள் வேளாண்மை தவிர வேறு தொழில் அறியாதவர். அவர்கள் இயக்கவாதிகள் (activists);; கருத்தியலாளர்கள் (not ideologists) அன்று. அவர்கள் தேவதூதர்களும் அன்று. அவர்களின் இயக்கப் போக்கினின்று எவ்வித அரசியல், பொருளியல் திட்டங்களையும் சிந்தனைகளையும் பெற இயலாது.

கொள்ளையர்: ஆய்வின் தேவை

கொள்ளையரை குற்றக்கொள்ளையர், சமூகக் கொள்ளையர் என்று தனித்தனியே பிரித்து ஆராய்ச்சி செய்ய இயலாது. சமூகக் கொள்ளையர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் தத்தம் சமூகத்தில் ஆழ்ந்த தாக்கத்தினை உருவாக்கவில்லை. ஆனால், குற்றக்கொள்ளையர்கள் Robin hood போன்று ஒரு படிமத்தினை உருவாக்குவர். வணிகர், செல்வச் செழிப் புள்ள பயணிகள், ஏழைகளை இரக்கமற்று தாக்கும் போது, ஏழைகளுக்கு Robin hoods உதவி செய்வர். எனவே, சமூக, பொருளியல், வரலாற்று ஆய்வாளர் களுக்கு கொள்ளையரின் சமூகக் கட்டமைப்பு பற்றி அறிவது முக்கியமானது. பெரும்பாலான கொள்ளையர்கள் கதைகளிலும், பாடல்களிலும் விதந்து பேசப்படுகின்றனர். அவர்களின் பெயர் விபரங்கள் பற்றி ஓரளவே குறிப்புகள் கிடைக்கின்றன. கொள்ளையர் பற்றிய புனைவுகளில் யதார்த்தம் இரண்டாம் இடம் பிடிக்கும். இவர்களைப் பற்றி ஆவணக் காப்பகங்களில் சான்றுகள் கிடைப்பது அரிது. அரசியல் ரீதியாக சமூகக் கொள்ளையர்கள் பற்றிய வரலாறு ஒரு நாடகத்தன்மை வாய்ந்த்து. அரசர்களும், பேரரசர்களும்கூட கொள்ளையராகத்தான் வாழ்க்கையினைத் தொடங்கினர்.

கொள்ளையரின் நோக்கம்

அச்சமூட்டி மக்களையும், மூலவளங்களையும் கைப் பற்றுவதே சமூகக்கொள்ளையரின் நோக்கம். எனவே, இவற்றை ஆட்சி, அதிகாரம், அரசு என்ற பின்னணையில் அறிதல் நலம். நாட்டுப்புறப்பகுதிகளில் இவ்வேலையினை நிலவுடைமையாளரும், ஆயர்குடிகளும் செய்து வந்தனர்.

கொள்ளையர் பற்றிய பாடல்கள்

கொள்ளையர் பற்றிய பாடலுக்கும், கதைப் பாடலுக்கும் இடையே இருவித சிக்கல்கள் உண்டு. முதலில், அதாவது அவர்களை அரசியல் அளவிற்கு உயர்த்தி அவர்களுக்கு சமூக மரியாதையினை உருவாக்குவது. அதாவது, Robin hood என்ற பாத்திரத்தினை Huntington பிரபுவாக உயர்த்திப் பார்ப்பது. இரண்டா வதாக, கொள்ளையரை ஆளுமையுள்ள ஒரு பெரிய மனிதர் அளவிற்கு உயர்த்துவது. ஆனால், உண்மையிலேயே Hungarian வேளாண் கொள்ளையர்கள் Sandor Rosa, SobryJoszi என்ற இருவரும் பெருமை வா ய்ந்த பழைய குடும்பத்திலிருந்து வந்தவர்.

கொள்ளையரின் தோற்றம்

கொள்ளையரின் ஆடை அணிகலன்கள் :

புகழ்பெற்ற கொள்ளையர் Lampiqoவின் ஆடை அணிகலன்கள்

Hat : தொப்பி, தோலினால் செய்யப்பட்டது. இது ஆறு சாலமன் நட்சத்திர வடிவங்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.

Neck kerchief: கழுத்துத் துணி. இது பூவேலை செய்யப்பட்ட சிவப்புநிற பட்டுத்துணி.

Blanket:: தரைவிரிப்பு. இது அச்சிடப்பட்ட calicocalicolinen with cotton.

Sandals: நன்கு தரமாக செய்யப்பட்ட ஒரு ஜோடி செருப்பு.

கொள்ளையர் வகைகள்

கொள்ளையர் மூன்று வகைப்படுவர்

I Noble robbers or Robin hoods: இவர்கள் நற்கொள்ளையர் என்று அழைக்கப்படுகின்றனர்.

II Haiduks:தொழில்முறை திருடர்கள்

III Terror bringing avengers : இவர்கள் பழிவாங்கும் கொள்ளையர் என்று வகைபடுத்தப்படுவோர்.

ஆனால், இவர்களிடையே பொதுத்தன்மையினை வரையறுக்க இயலாது.

கொள்ளையர் பற்றிய வரையறை

  1. இவர்களின் சட்டமீறுதல் குற்றவிழைவினால் உருவாகவில்லை; அநீதியால் பாதிக்கப் பட்டதால் உருவானது.
  2. தவறுகளை திருத்துபவர்.
  3. செல்வரிடம் எடுத்து எளியோரிடம் தருபவர்.
  4. அவர்கள் யாரையும் கொல்வதில்லை; தற்காப்பிற்கும் பழிவாங்குதலுக்கும் சிலரைக் கொல்வர்.
  5. பழிவாங்குதலில் இவர் மீண்டுவந்தால் இவர்கள் மக்களால் பெரிதும் மதிக்கப்படுவர்.
  6. இவர்கள் தம் மக்கள் கூட்டத்துடனேயே இருந்து அவர்களை விட்டு அகலாதவர்.
  7. மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர், போற்றப்படுபவர், உதவி செய்பவர்.
  8. உலகம் முழுவதும் இவர்கள் துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு இறப்பர்.
  9. இவர்கள் அரசர்களுக்கும், பேரரசர்களுக்கும் எதிரானவர்கள் இல்லை; ஆனால், வட்டாரத் தலைவர்களுக்கும், நாட்டாண்மைகளுக்கும் பண்ணையார்களுக்கும் எதிரானவர்.

இதனை விமர்சனமாக இப்படிக் கூறலாம். அதாவது பெரிய அதிகாரத்துடன் இணக்கம்; சம அளவு அதிகாரம் கொண்டவர்களுடன் பிணக்கம். அதாவது ஒரு புறம் அனுசரணை; மறுபுறம் கோரோசணை.

Noble Robbers சமூகநலக் கொள்ளையர்

இவர்கள் தனிமனிதரை துன்புறுத்துவது இல்லை; கூட்டமாக இருப்பவரை கொள்ளையடித்தனர். இவர்கள் எப்போதும் கொடுரமான கொள்ளையருடன் மோதுவர். போலந்தில் இருந்த Salapkk என்ற கொள்ளையர் தனிமனிதரை துயறுத்தியது இல்லை. ஏழைகளுக்கு உதவியுள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புகள் தருவார். வங்கியில் கொள்ளையடித்த பணத்தினை பொதுமக்கள் முன் கொட்டி எடுத்துக் கொள்ளச் சொல்வார். இவர் போலந்தின் விடுதலைக்கும் போராடியுள்ளார்.

ஐரோப்பாவில் தொழிற்புரட்சிக்குமுன் இருவித கொள்ளைக்கூட்டங்கள் உருவாயின: இவற்றை உருவாக்கியவர்கள் புறக்கணிக்கப்பட்ட மக்கள், இரகசிய குழுக்கள். இதுபோன்ற குழுக்கள் சீனம், வியட்நாம் போன்ற நாடுகளில் இயங்கின. அதாவது 1700 களின் பிற்பகுதியில். அவை சிசிலியில் இயங்கிய மாபியா போன்றது. இதனை இன்னும் நாம் சரிவர புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் நற்கொள்ளையருடன் எளிதில் கலப்பர். இதுபோன்ற அமைப்புகளே சமூகக் கொள்ளைக் கூட்டமாக மாறி பிறகு அரசியல் கலகத்தின் உள்கட்ட ஆட்களாக மாறுகின்றனர். இருந்தபோதும் சமூகக் கொள்ளையர்கள் பிற கொள்ளையரிடமிருந்து பிரிக்க முடியாதவர்களாக இருந்தனர்.

பழிவாங்கும் கொள்ளையர்

இவர்களின் இயக்கத்தன்மைகளாக சில வரை யறுக்கப்பட்டுள்ளன.

  1. காரணகாரியங்களுக்கு உட்பட்டவன் முறையும், கொலையுமே சமூகக் கொள்ளை யரின் மதிப்பினை நிர்ணயிக்கும்.
  2. ஒழுக்க நியதிகளுக்கு(moral standards) உட்பட்டு அவர்களின் சமூக இயல்பு அமைந் திருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது.
  3. இவர்கள் தீவிரமாகவும், குரூரமாகவும் இயங்கு வார்கள் என்று மட்டும் எதிர்பார்க்க இயலாது. இக்குரூரம் அவர்களின் பழிவாங்கும் நடவடிக்கை.
  4. அவர்களின் தீவிரவாதத் தன்மையே அவர் களின் மீதான மரியாதையினைக் கூட்டும்.
  5. அச்சமூட்டும் நடவடிக்கையால் அவர்கள் கதாநாயகர்களாக மதிக்கப்படவில்லை.
  6. அவர்கள் இயல்பாகவே பயங்கரமானவர்கள். அவர்களில் பலர் தவறினை திருத்திக்கொள் பவர் அல்ல; பலர் பழிவாங்கப்படுவோர்.
  7. அவர்கள் அதிகாரத்தினை செயல்படுத்துபவர். அவர்கள் நீதிதேவதையின் தூதுவர்கள் அன்று; இரத்தத்திற்கு இரத்தம் பழிவாங்கும் குணமுடையவர்.
  8. அவர்கள் ஒருவகையான சமூகக்கொள்ளையர். ஒழுக்கம் சார்ந்த உலகில் சஞ்சரிப்பவர்களாக இலக்கியத்தில் வருணிக்கப்படுபவர்.

சமூகக்கொள்ளையர் இயங்கும் நிலவியல் பரப்பு

இவர்கள் மக்கள் கூட்டமும் அதிகாரத்தில் இருப்போரும் நெருங்கமுடியாத மலையும், காடும் சார்ந்த பகுதியில் கூட்டமாக (பொதுவாக பெண்கள் இல்லை) ஆயுதங்களுடன் வன்முறையுடன் இயங்குவர். இவர்கள் மக்களைச் சுரண்டுபவர்களையும், சமூக, பொருளாதார அரசியல் கட்டமைப்பையும் எதிர்ப்பவர். இயற்கை வளங்களையும், சட்டத்தினையும், அதிகாரத்தி னையும் அடையத் துடிப்பவர்களைக் கேள்வி கேட்பவர். இந்த சமூகக்கொள்ளையரின் முக்கியக் கூறுகள் என்பன சமூகம், அரசு, வர்த்தகம் போன்றவற்றுடன் இணைந்தது. எனவே, கொள்ளை (banditry) சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பிற்கு வெளியில் இயங்கவில்லை.

உலக வரலாற்றில் கொள்ளையர்

சீனத்து வரலாற்றில் கொள்ளையர் பற்றிய குறிப்புகள் கி.மு.481-221 காலகட்டத்திலேயே கிடைக்கின்றன. அடுத்து கி.பி.பதினாறாம் நூற்றாண்டில் கிடைத்துள்ளன. பதினாறு - பதினேழு நூற்றாண்டுகளைச் சார்ந்த கொள்ளையர் பற்றிய நாட்டுப்புறப்பாடல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டன. Hiduks என்ற கொள்ளையர் கூட்டம் முதலில் பதினைந்தாம் நூற்றாண்டில் Bosnia, Herzegovina போன்ற இடங்களில் தோன்றினர். முதலில் Haiduk தலைவர் Bulgaria ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டார். தொடக்கத்தில் இவர்களே கொள்ளையர் என்று அறியப்பட்டனர். இதுபோன்ற கொள்ளையர்கள் தென்கிழக்கு ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க பல்வேறு பெயர்களில் இயங்கினர். Indo-nesia, Indo-nesia, Imperial China  போன்ற நாடுகளில் இயங்கினர். பதினாறு-பதினேழாம் நூற்றாண்டுகளில் Catalan என்ற கொள்ளையர் ஒரேயருமுறை தன்மானத்தினை காத்துக் கொள்வதற்காக கொலை செய்ததாக கதைப்பாடல்கள் உண்டு. பதினேழாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் போரிலும், பிரஞ்சுப் புரட்சியிலும் கொள்ளையரின் காலம் பொற் காலம். 1840களில் Dancho Vagach என்ற கொள்ளையர் துருக்கியில் கொடூரக் கொலைகாரர்களை கொன்றொழித்தார் ஆனால் பல்கேரியாவில் ஏழைகளுக்கு உதவினார்.

Shittas என்ற கலகக்குழுவினர் ஆப்பிரிக்காவின் கொம்பு (the horn of Africa) எனப்பட்டனர். இவர்கள் கொள்ளையர்கள் என்று அறியப்பட்டனர். காடுகளில் மறைந்து வாழ்ந்த இவர்கள் அரசர்களின் பேரரசர்களின் அதிகாரத்தினை கேள்வி கேட்டனர். இவர்கள் வரி கட்டவும், கப்பம் செலுத்தவும் மறுத்தனர். இவர்கள் கலகக்கொள்ளையர் (rebel robbers) எனப்பட்டனர்.

உலகம் முழுவதும் கொள்ளையர்கள் ஒரேமாதிரி இயங்கியுள்ளனர். இவற்றில் இரண்டு, மூன்று பாணிகள் உண்டு. இவர்களிடையேயான பொதுத்தன்மைகள் பண்பாட்டுப் பரவலில் உருவானவை அன்று; வேளாண் குடிகளில் இருந்து உருவானவை. இடைக்கால வரலாற்றில் சீனாவின் குற்றவியல் சட்டம் கொள்ளையர் புழங்கும் வட்டாரத்தினை பிறவற்றில் இருந்து பிரித்தது. அவை கொள்ளையர் வட்டாரம் (brigand area) எனப்பட்டது. i-china, Henon, Anhui Heberi, Shanxi, Kiangsi-china, Henon, Anhui Heberi, Shanxi, Kiangs Shandang போன்ற வட்டாரங்கள் அவ்வாறு அறியப் பட்டன.

பெரும்பாலும் உலகம் முழுவதும் கொள்ளையர்கள் வேளாண்குடிகளில் இருந்து உருவாயினர். அவர்கள் உருவாகும் சூழல் ஒரு பொதுத்தன்மை பெற்றிருந்தது. அது போன்ற தன்மைகள் சீனம், பெரு, சிசிலி, உக்ரைன் இந்தோனேசியா போன்ற நாடுகளில் அமைந்தன. நிலப்பரப்பியல் ரீதியாக இக்கூற்றினை ஐரோப்பா, அமெரிக்க, இஸ்லாமிய உலகம் தெற்கு-கிழக்கு ஆசிய நாடுகள் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணலாம். இத்தாலியின் தென்பகுதி கொள்ளையர் கூட்டத்திற்கு பெயர்பெற்ற ஒன்று. ஒரு நூற்றாண்டிற்கு முன் இது உச்சக்கட்டத்தினை அடைந்தது.

1861-65 இல் இது வேளாண்குடிகளின் புரட்சியாக வடிவு பெற்றது. மேலும், கொரில்லா போராக உரு பெற்றது. கொள்ளையருக்குப் பெயர் பெற்ற ஸ்பெயினில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொள்ளையின் கொடூரத்தினை ஒவ்வொரு பயணியும் உணர்ந்தனர். இக்காலத்தில் Andulasia என்ற பகுதியில் Francisco Rios என்பவர் புகழ்பெற்ற கொள்ளையராகத் திகழ்ந்தார். இக்காலக் கட்டத்தில் கொள்ளையர்கள் Greek, Balkan ஆகிய நாடுகளில் வெளிப்படையாகவே இயங்கினர். பிரேசிலின் வடக்குப்பகுதியில் 1870 கள் வரை கொள்ளை நோய்போல் பரவியது. இது 20 ஆம் நூற்றாண்டின் 1975 வரையும் தொடர்ந்தது. அண்மைக்காலம் வரையில் தென்கிழக்காசியப்பகுதிகளிலும், இலத்தீன் அமெரிக்காவின் சிலபகுதிகளிலும் கொள்ளையர்கள் இயங்கினர். அங்கெல்லம் பரம்பரையான கொள்ளை யர்கள் தம் கைவரிசையினைக் காட்டினர்.

கொள்ளையரும் அரசியலும்

அரசியல், அதிகாரத்தின வரலாறு என்ற பின்னணியிலேயே கொள்ளையர் வரலாறு, சமூகக் கொள்ளையர் வரலாறு போன்றவற்றைப் புரிந்து கொள்ளலாம். இங்கு, அரசியல் அதிகாரம் என்பது, அரசினையும், பேரரசினையும் நிறுவுதலாகும். உண்மையில் உபரி உற்பத்தியில் ஈடுபடுவோரே கொள்ளையருக்கும், அரசுடமையாளருக்கும், அச்சமூட்டக்கூடிய நிலையை உருவாக்குபவர் என்று கருதப்படுகின்றனர். வரலாற்றில் பெரும்பாலான வேளாண்குடிகள் அரசியல் அதிகாரத்தின்கீழ் இனக் கூட்டங்களாக வாழ்கின்றனர். அவர்களின் பொதுவான சூழ்நிலை வட்டார அளவில் அல்லது உள்ளூர் அளவில் அமைந்திருக்கும். அவர்கள் நிலவுடமையாளர்களின் கீழ் வந்தனர். இந்த உறவின் அடிப்படையில் அமைந்த கடவுள் நம்பிக்கை, கடமையுணர்வு இவற்றினடிப் படையில் மக்கள் திரட்டப்பட்டனர். அரசுகள் நலிவுறுகையில் கொள்ளையர் எழுவர். ஆனால், சீனப்பேரரசும், ரோமனியப்பேரரசும் உச்சநிலையில் இருந்தபோதுகூட கொள்ளையர் இயங்கினர். அவர்கள் மேய்ச்சல் நிலப்பகுதியிலும், தங்களுக்குச் சாதகமானப் பகுதியிலும் வழ்ந்தனர்/இயங்கினர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் Corsicaவின் 355 கிராமங்களில் 600 கொள்ளையர் இருந்தனர். 1933இல் குறைந்தது 100 பேர் இருந்தனர். 1847 ஆம் ஆண்டு Calabria என்ற பிரதேசத்திற்கு சோதனையான ஆண்டாக அமைந்தது. அங்கு, 600 முதல் 700 வரை கொள்ளையர்கள் 50;60 குழுக்களாக இயங்கினர். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 0.1% ஆவர்.

முன்பு சொல்லப்பட்டது போல் நிலவியல் சூழல்கள் அமைந்திருந்தாலும் பெரு என்ற நாட்டில் கொள்ளையர்கள் இல்லை. காரணம், அங்கு நிலவுடைமையாளர்கள், நிலப்பிரபுக்கள் இல்லை. கூலித்தொழிலாளிக்கான கண்காணிகள் இல்லை. சுருக்கமாக, அங்கு வேளாண்குடிகளுக்கு அவ்வளவாக பிரச்சினைகள் இல்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜாவாவின் வடக்குப்பகுதியில் கொள்ளையர்கள் மையம் கொண்டிருந்தனர். இது கலகத்தின் நிரந்தர மையமானது. கொள்ளையர் நடமாட்டம் ஒரு வட்டத்தின் சில இடங்களில் வலுவாகவும் சில இடங்களில் வலுவற்றும் இருந்தன. வறுமையும், பொருளாதாரச் சிக்கலும் உருவாகும்போது கொள்ளையர் நோய்போல் பரவுவர்.

தொடரும்...

எரிக் ஹாப்ஸ்பாமின் Bandits எனும் நூல் நா.இராமச்சந்திரன் மொழிபெயர்ப்பில் ‘சமூகம்சார் கொள்ளையர்கள்’ எனும் தலைப்பில் என்.சி.பி.எச் வெளியீடாக விரைவில் வெளிவரவுள்ளது.