subramanian swamyமோடி நான் சொல்வதை எல்லாம் கேட்கிறார், எனக்கு எதற்கு அமைச்சர் பதவி?

என்னை பார்த்தால் கவலையாகவா தெரிகிறது? நான் பயணம் செய்து கொண்டே இருக்கிறேன். நேற்று கொல்கத் தாவுக்கு சென்றேன், இன்று இங்கு வந்துள் ளேன். பதவிக்கு ஏங்குவது எல்லாம் ஆங்கி லேயர்களின் மனநிலையாகும். இந்திய பிராமணர்களும், கற்றறிந்தவர்களும் எந்தப் பதவியிலும் இருந்தது இல்லை. இருப்பினும் ராஜாக்கள் அவர்கள் சொல்வதை கேட்பார்கள்.நான் எந்த விஷயம் பற்றி ஏதாவது கூறினாலும் ராஜா(மோடி) கேட்கிறார். என் நிலைமை அவ்வாறு உள்ளது.

-சு. சாமி

தான் சொல்வதை எல்லாம் மோடி ஏற்றுக் கொள்வதாகச் சொல்லும் சு. சாமி, அத்துடன் நிற்கவில்லை. ஈழம் தொடர்பான பல செய்திகளில் அவர்தான் முடிவுகளை அறிவிக்கின்றார். மீனவர்கள விட்டுவிடுங்கள், அவர்களின் படகுகளைப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று தான்தான் ராஜப«க்ஷவிடம் சொன்னதாகச் சொல்கின்றார். பிறகு ஹெச். ராஜாவின் துணையோடு கடற்கரைக்குச் சென்று மீனவர்கள் சிலரைச் சந்தித்து, படகுகளை விடுவிக்கச் சொல்கிறேன் என்கிறார்.

அண்மையில், 5 மீனவர்களையும் இந்தியச் சிறைக்கு அனுப்பிவைக்க இலங்கை அரசு ஒப்புதல் கொடுத்துள்ள தாகவும், தானே நேரில் போய் அவர்களை அழைத்து வரப் போவதாகவும் சாமி சொல்கிறார்.

சாமி யார் அரசில் அவருக்கு என்ன பொறுப்பு இது குறித்துப் பேச வேண்டிய வெளியுறவுத்துறை அமைச்சகம் என்ன செய்கிறது சட்ட வெளிக்கு அப்பால் ஒரு அதிகார மையமாக (Extra constitutional authority) அவர் செயல்படுவதற்கு அரசு எப்படி அனுமதிக்கிறது?

Pin It