25.10.2015 காலை 7 மணிக்கு, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் எழுத்தாளர் மனுஷ்ய புத்ரனும், அ.தி.மு.க. சார்பில் காசிநாத பாரதியும் (நாஞ்சில் சம்பத்துடன் வந்து சேர்ந்தவர் ) உரையாடினார்கள். அதிலிருந்து ஒரு பகுதி

மனுஷ்: ஒரு மாவட்ட ஆட்சியர், ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு, நிரந்தர முதல்வர் என்று எழுதி ஒரு பேனர் வைக்கிறாரே, அவர் மாவட்ட ஆட்சியரா? அ.தி.மு.க.வின் புதிய வட்டச் செயலாளரா?

காசி: அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. யார் அந்த மாவட்ட ஆட்சியர் பெயரைச் சொல்லுங்கள்?

 (மனுஷ்யபுத்ரனுக்கு பெயர் நினைவில் வரவில்லை)

காசி: நீங்கள் சொல்வது பொய் என்று உறுதி ஆகிறது.

மனுஷ்: (நினைவு படுத்திக்கொண்டு) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர். நான் வேண்டுமானால் படத்தோடு ஆதாரம் தருகிறேன். இப்போது என்ன சொல்கிறீர்கள்?

காசி: சரி, அந்த பேனரை அவர்தான் வைத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?

மனுஷ்: அவர் வைக்கவில்லை என்றால், ஏன் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை?

காசி: ஏன் மறுப்பு தெரிவிக்க வேண்டும்? நிரந்தர முதல்வர் என்று உண்மையைத்தானே அவர் எழுதி வைத்திருக்கிறார்.

மனுஷ்: முதலில் இல்லவே இல்லை என்றீர்கள்.

பிறகு ஆதாரம் கேட்டீர்கள். இப்போது அது உண்மை என்கிறீர்கள். எதை நாங்கள் நம்புவது?

(இதுதான் அ.தி.மு.க.வின் லட்சணம்)

Pin It