தமிழ் மொழியின் வேரில் பாயும்

தஞ்சை ஊற்று நீ - என்

தமிழினத்தின் மீது தவழும்

தென்றல் காற்று நீ!

இருள் படர்ந்த காலத்திலே தமிழர்கள் மேலே - நீ

எழுகதிராய் கண் சிவந்தாய் பூமியின் மேலே

தமிழர் கூட்டம் தத்தளிக்கும் அலைகடல் மேலே - நீ

தவழ்ந்து சென்று துயர்சுமந்தாய் தோணியைப் போலே - நீ

தவழ்ந்து சென்று துயர்சுமந்தாய் தோணியைப் போலே!

- தமிழ் மொழியின்

தந்தை பெரியாருக்குத் தொண்டன் ஆனவன் &- என்றும்

தலை நிமிர்ந்து அவரை ஏற்றுப் பயணம் செய்தவன்

தமிழிசையால் மன்றம் கண்டாய் பெரியாருக்கு -

தமிழ் நிலத்தில் அந்தப் புகழ் வேறு யாருக்கு? - இந்த

தமிழ் நிலத்தில் அந்தப் புகழ் வேறு யாருக்கு?

- தமிழ் மொழியின்

இல்லையென்று சொன்னதில்லை உனது வாய்மொழி& - அய்யா

எத்தனையோ குடும்பங்களில் உனது விளக்கொளி!

கோடி கோடியாய்க் கொடுத்த கண்ணபுரத் தாய் &- தமிழை

கோபுரத்தில் ஏற்றி வைக்கக் கொட்டிக் கொடுத்தாய்& - தமிழை

கோபுரத்தில் ஏற்றி வைக்கக் கொட்டிக் கொடுத்தரய்!

- தமிழ் மொழியின்

தானுயர்ந்து தமிழுயரக் கொடுத்த பெருமகன் - திரு

நாராயண -& ஞானாம்பாள் பெற்ற திருமகன்

ஆனா ரூனா என்பதொரு வாழ்வியல் வேதம் - எங்கள்

அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும் - எங்கள்

அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்!

- தமிழ் மொழியின்

தமிழ்ச் சான்றோர் பேரவை

தந்தை பெரியார் தமிழிசை மன்றம்

நந்தன்&மாதம் இருமுறை இதழ்

ஆகியனவற்றை உருவாக்கியவரும்,

கட்சிகளைக் கடந்து

தமிழின உணர்வாளர்களை

ஒரு குடையின் கீழ்

ஒருங்கிணைத்தவருமான

அய்யா நா.அருணாசலத்தின் மறைவு

உண்மையாகவே

ஈடுகட்ட முடியாத இழப்புதான்!

Pin It